" அறியப்படாத தமிழகம் ".
தொ. பரமசிவன். காலச்சுவடு பதிப்பகம் வெளியீடு .முதல் பதிப்பு 1997 விலை ரூபாய் 80.
மொத்த பக்கங்கள் 140.
***கருணா மூர்த்தி
தாயம்.
ஹூஸ்டன் USA நகரத்தில் நாங்கள் மாதம் ஒருமுறை ஒன்றாக கூடும் பொழுது நமது தமிழ்நாட்டின் கிராமியக் கலைகளில் விளையாட்டுகளில் ஒன்றான தாயம் ஆடுவோம் .நாங்கள் ஆடுவது ஏரோப்லன் தாயக்கட்டம் கொண்டு ஆடுவது .ஒரு அணிக்கு 3 அல்லது நால்வர் என்று உட்கார்ந்து கொண்டு ஆடுவோம். ஒரு ஆட்டம் முடிய மூன்று மணி நேரம் நான்கு மணி நேரம் கூட ஆகலாம் .மதியம் உணவுக்குப் பிறகு, இரவு உணவுக்குப் பிறகு ஆடுவோம்.
எனது தாயார் அவர்கள் அவர்களது சுற்றத்தாரோடு ஆடுவார் அவ்வப்பொழுது ஆடுவார் ;வீட்டுக்கு விலக்காக இருக்கும்போது ஆடுவார் .இதை எல்லாம் எனது ஐந்து வயதில் கண்டிருக்கிறேன். மேலும் வைகுண்ட ஏகாதசி நாளின் போது இரவு முழுவதும் கண்விழித்து தாயக்கட்டையை உருட்டி ஆடிக்கொண்டிருப்பார்கள் .நானும்கூட இப்பொழுது வைகுண்ட ஏகாதசி விரதம் இருக்கும் பொழுது இந்த தாயக்கட்டை தான் ஆடுவோம்..
பெண்கள் ஒரு அணியாகவும் ஆண்கள்ஒரு அணியாகவும் உட்கார்ந்து ஆடும் பொழுது அவர்களின் வாதத்தை காண வேண்டும் .ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதமாக வாய் வீசிக்கொண்டு சில ஆண்களும் கூட அப்படித்தான் வீசிக் கொண்டு ஆடும் போது உற்சாகமாகவும் உத்வேகமாக இருக்கும் .சில சமயங்களில் சண்டையாக முடிவது உண்டு .நான் மட்டும் "அமலா பால் போல் நிர்வாணத்தை ' ஆடை' ஆகக் கொண்டு அமர்ந்தது போல நான் மௌனத்தை ஆடை ஆகக்கொண்டு அணிந்து கொண்டு "அமைதியாக எல்லோரையும் கவனித்துக் கொண்டிருப்பேன் .
சுவாரசியமிக்க ஆட்டம்.
தாயம் எனப்படுவது பண்டைய காலத்திலிருந்து இன்று வரை இந்தியா வில் பரவலாக ஆடப்படும் ஒரு விளையாட்டாகும்.
இவ்விளையாட்டை இருவர் முதல் அறுவர் வரை தரையிலோ மேடை மீது வைத்தோ விளையாடலாம்.
வரலாறு
தாய விளையாட்டு மிகப் பழையதான விளையாட்டாதலால் முதலில் யார் கண்டுபிடித்தார்கள் என்னும் விவரம் தெரியாது. இருப்பினும் இந்தியா வரலாற்றில் குறிப்புகள் காணப்படுகின்றன. சூதாட்டம், சொக்கட்டான், சோழி விளையாட்டு போன்றவை தமிழ் குறிப்பெயர்களாகும்.
மாபாரதத்தில் பாண்டவ மன்னர்கள் நாட்டையும், பாஞ்சலியையும் பணையமாக்கிய சகுனியின் வஞ்சக விளையாட்டகவும்,
நளவெண்பாவில் நளன் கலியின் மூலம் புட்கரனால் தோற்கடிக்கப்பட்டு நாட்டை இழந்ததாகவும் குறிப்புகள் உள்ளன.
மேலும் அண்மைய ஆராய்ச்சிகளின் மூலம் மெக்ஸிகோவில் வாழ்ந்த மாயன்கள் இவ்விளையட்டை விளையாண்ட குகைச்சித்திரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்த விளையாட்டை மாரி காலங்களில் பொழுது போக்கிற்காக விளையாடுவார்கள். ஐந்துக்கு ஐந்து சதுரங்களால் அமைந்த ஒரு கோட்டுத் தளத்தில் நான்கு பக்கமும் நாலு பேர் அமர்ந்து விளையாடலாம். எதிரெதிரே இருப்பவர்கள் கூட்டாகவோ தனியாகவோ விளையாடலாம். கூட்டுச் சேர்ந்து விளையாடுவதைக் கன்னை கட்டுதல் என்றும் சொல்லப்படும்.
ஒவ்வொருவருக்கும் நான்கு காய்கள் இருக்கும். இவற்றைத் தளத்தின் சதுரங்களினூடே பயணித்து மையத்திலிருக்கும் பழத்தை அடைந்து மீண்டு வருதலே விளயாட்டாகும். முதலில் நான்கு காய்களையும் மீண்டு கொண்டு வருபவர் வெற்றி பெறுவார்.
காய்கள்
ஒவ்வொருவரும் நான்கு காய்களை வைத்திருக்க வேண்டும்.
மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் கொள்ள, வெவ்வேறு நிறங்களில், அல்லது வடிவங்களில் அல்லது உருவங்களில் இவை இருக்க வேண்டும்.
ஊரி, சிறு கற்கள், உடைந்த கண்ணாடி மற்றும் பீங்கான் துண்டுகள், புளியங் கொட்டைகள், வெறு சிறு தானியங்கள், முந்திரி, பாதாம், பிஸ்தா பருப்பு.
கருவிகள்
சொழிகள் தாயக்கட்டைகள் 2 தாயக்கட்டை 1 2 3 புள்ளிகள் பொறிக்கப்பட்டிருக்கும்.உருட்டி உருட்டி உருட்டி அல்லது வீசி வீசி விட வேண்டும் எத்தனை புள்ளிகள் எத்தனை கண்கள் திரும்பி இருத்தல் போன்ற வருகிறதோ அதற்குத் தகுந்த மாதிரி எண்ணிக்கை கொண்டு காய்களை நகர்த்த வேண்டும்.
தாயக் கட்டை
பொதுவாக தாயக் கட்டைகள் மரத்திலோ அல்லது வெண்கலம் போன்ற உலோகத்திலோ செய்யப்பட்டிருக்கும். மேலும் தாயக் கட்டைகள் நான்கு முகங்களைக் கொண்டிருக்கும். சில வகை தாயக் கட்டைகள் ஆறு முகங்களைக் கூடக் கொண்டிருக்கும். சில பகுதிகளில் குறிப்பாக 7x7 தாயக்கட்ட விளையாட்டில் புளியங்கொட்டைகளை உருட்டி விளையாடுவர். நான்கு முத்துக்களை ஒரு பக்கம் வெண்ணிறமாகும்படி பாறையில் தேய்த்து விடுவர். அவற்றில் ஒரு முத்தில் மட்டும் மறுபுறம் அரைகுறையாகத் தேய்க்கப்பட்டிருக்கும். பின்பு இவற்றை ஒரு தேங்காய்ச் சிரட்டையில் போட்டு உருட்டிவிடுவர். ஒன்று அல்லது இரண்டு முத்துக்கள் மட்டும் வெண்புறம் காட்டி விழுந்தால் விளையாடுபவர் அத்தனை இலக்கங்கள் நகர்த்த வேண்டும். மூன்று முத்துக்கள் வெண்புறம் காட்டி நான்காவது கருநிறம் காட்டினால் மூன்று இலக்கங்களும் நான்காவது அரைகுறை வெண்ணிறம் கொண்டிருந்தால் நான்கு இலக்கங்களும் நகர்த்தலாம். எல்லா முத்துக்களும் வெண்ணிறம் காட்டினால் ஆறு இலக்கங்களும் கருநிறம் காட்டினால் எட்டு இலக்கங்களும் கிடைக்கும். மீண்டும் ஒருமுறை உருட்டும் வாய்ப்பும் கிடைக்கும்.
நான்முக தாயக் கட்டை
நான்முக தாயக் கட்டையின் மூன்று பக்கங்களில் (1), (2) மற்றும் (3) புள்ளிகள் இருக்கும். ஒரு பக்கத்தில் புள்ளி ஏதும் இருக்காது (0). இரு நான்முக தாயக் கட்டைகளை உருட்டினால் 1, 2, 3, 4, 5, 6, 12 (0,0) ஆகிய எண்கள் விழும். 1, 5, 6, 12 எண்களை சிறப்பாகக் கருதி மறுமுறை தாயக் கட்டையை உருட்டுவது வழக்கம். இவ்வெண்கள் அடுத்தடுத்து மாறி மாறி விழுந்து கொண்டிருந்தால் அதை விருத்தம் என அழைப்பதுண்டு.
சில சமயங்களில் நான்கு அல்லது எட்டு பேர் கொண்ட ஆட்டத்தில், எதிரெதிரே அமர்ந்திருப்பவர்கள் ஓரணியாகக் கொண்டு அவர்களில் ஒருவரின் மனையை தங்கள் அணிக்கு தேர்ந்தெடுத்துக்கொண்டு, ஈரணியாக ஆடுவது உண்டு. இதன் மூலம் ஆட்டத்தை சீக்கிரம் முடிக்கமுடியும்
நீங்களும் ஒருமுறை ஆடி பாருங்கள். மூளைக்கு நல்ல வேலை.
பல்லாங்குழி என்பது, பொதுவாக பெண்கள் விளையாடும் ஒரு விளையாட்டு.
முதற் பூப்படைந்த பெண்ணின் தீட்டுக்குரிய காலத்திலும் கருவுற்ற பெண்கள் அமர்ந்து பொழுதுபோக்குவதற்கும் இந்த விளையாட்டை இப்பொழுது ஆடிப் பார்க்கிறார்கள். தமிழர்களின் பண்பாட்டு மரபினில் பெண்ணுக்குரிய சீர்வரிசைப் பொருள்களில் பல்லாங்குழியும் ஒன்றாக இடம் பெறுகிறது. பல்லாங்குழி ஆட்டம் பற்றி தேவநேயப் பாவாணர் 'தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்' என்ற தம் நூலில் முதன்முதலாக எழுதினார். பின்னர் பேராசிரியர் தாயம்மாள் அறவாணன் 'பல்லாங்குழி (திராவிட ஆப்பிரிக்க ஒப்பீடு)' என்ற விரிவான நூலை எழுதியுள்ளார். உலகெங்கிலும் பல்லாங்குழி ஆட்டம் சிற்சில மாறுதல்களுடன் பழங்குடிகளிடம் விளங்கி வருகிறது.
பல்லாங்குழி என்பது மரம் அல்லது உலோகத்தால் ஆன ஒரு விளையாட்டுச் சாதனம். அதில் இரு வரிசைகளில் ஏழு குழிகள் இருக்கும். இரு வரிசையிலும் சேர்த்து பதினான்கு குழிகள் இருப்பதால் பதினான்கு குழி விளையாட்டு என்பதை பன்னாங்குழி என அழைத்தனர். பின்னர் பல்லாங்குழி என அழைக்கப்பட்டது. பொதுவாக புளியங்கொட்டையை வைத்தோ அல்லது ஏதாவது பெரிய விதைகளையோ அல்லது சோளி (சோவி)களையோ ஆடுபொருளாக வைத்து இவ்விளையாட்டு ஆடப்படுகிறது.
ஆட்ட வகைகள்
தான்சானியா நாட்டின் பல்லாங்குழிப் பலகை
பல்லாங்குழி ஆட்டத்தினுடைய வகைகளாக நான்கினைக் குறிப்பிடுகிறார் பாவாணர். பேராசிரியர் தாயம்மாள் அறவாணன். பல்லாங்குழி ஆட்டத்தின் எட்டு வகைகளைக் குறிப்பிட்டு அவற்றின் வேற்றுப் பெயர்கள், குழிகளின் எண்ணிக்கை, ஒரு குழிக்காய்களின் எண்ணிக்கை மற்றும் அவ்வகைகள் ஆடப்படும் பகுதிகள் என விரிவான அட்டவணை தந்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் ஆய்வு செய்து எழுதப்பட்ட நூலாகும் இது.
பல்லாங்குழி ஆட்டத்தின் அடிக்கூறுகளை பின்வருமாறு வரையறை செய்து கொள்ள முடியும்:
இருவர் ஆடும் பல்லாங்குழி ஆட்டத்தில் (பக்க எல்லைக்குழியாக இருந்தால் வலது கைப்பக்கக் குழியையும் சேர்த்து) குழிக்கு ஐந்து காய்களாக ஆளுக்கு ஏழு குழிகளாகத் துல்லியமான சமத் தன்மையுடன் ஆட்டம் தொடங்குகிறது.
தன்னுடைய காய்களை எடுத்து ஒருவர் ஆட்டம் தொடங்குகிறபொழுது முதன்முறையாக சமத்தன்மை குலைகின்றது.
எடுத்தாடுபவர் குழியில் காய்கள் இழப்புக்கு உள்ளாகின்றன.
சுற்றிக் காய்களை இட்டு வந்து ஒரு வெற்றுக்குழி (இன்மை அல்லது இழப்பு) யினைத் துடைத்து அடுத்து முதலில் இட்ட ஐந்து காய்களுக்குப் பதிலாக நிறையக் காய்கள் (பெருஞ்செல்வம்) கிடைக்கின்றன.
ஆட்டத்தில் மற்றும் ஒரு இடைநிகழ்வும் ஏற்படுகிறது. ஒரு வெற்றுக் குழியில் ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு காயினையும் இட்டு வரும்போது அது நாலாகப் பெருகிய உடன் அதனைப் பசு என்ற பெயரில் அந்தக் குழிக்குரியவர் எடுத்துக் கொள்கிறார்.
இதன் விளைவாக ஆட்டத் தொடக்கத்தில் இருந்த ஐந்து காய்கள் (தொடக்க நேரத்து முழுமை) மீண்டும் ஒரு குழிக்கும் ஒரு போதும் திரும்பக் கிட்டுவதே இல்லை.
காய்களை இழந்தவர் (காட்டாக 15 காய்கள் குறைவாகக் கிடைத்தன என்றால்) தன்னுடைய பகுதியில் மூன்று குழிகளைக் காலியாக (தக்கம்) விட்டு விட்டு ஆட்டத்தைத் தொடர வேண்டும். அந்தக் குழியில் எதிரி (வென்றவர்) காய்களைப் போட மாட்டார். சில இடங்களில் தோற்றவரும் போடமாட்டார். இப்போது தோற்றவருடைய குழி இழப்புக்கு ஒரு நிரந்தரமின்மை ஏற்படுகிறது.
ஆட்ட இறுதியில் ஒருவர் தோற்றுப் போகிறபோது அவர் கையில் எஞ்சியிருக்கிற காய்கள் ஒரு குழிக்குரிய ஐந்து கூட இல்லாமல் நாலாக இருந்தால் குழிக்கு ஒவ்வொரு காயினை இட்டு ஆட்டம் தொடர்கிறது. இதற்குக் 'கஞ்சி காய்ச்சுதல்' என்று பெயர். கஞ்சி என்ற சொல் வறுமையினை உணர்த்தும் குறியீடாகும்.
தோற்றவர் ஒரு காய் கூட இல்லாமல் தோற்கின்ற போதே ஆட்டம் முழுமை பெறுகிறது.
பல்லாங்குழி குறித்து சில விடுகதைகளும் உண்டு.
ஏழும் ஏழும் பதினான்கு சோலைத் தச்சன் செய்த வேலை அது என்ன? எனும் விடுகதைக்கு பல்லாங்குழி விடை.
3 பேர் விளையாடும் மிகவும் விறுவிறுப்பான "ராஜா பாண்டி", ஒருவர் மட்டுமே முடிவே இல்லாமல் விளையாடும் "சீதா பாண்டி" (சீதை அசோக வனத்தில் இருக்கும்போது விளையாடியதாம்), நிறைய காய்கள் வைத்து விளையாடும் "காசி பாண்டி".
இந்தப் பல்லாங்குழி ஆட்டத்தை விவரிக்கும் பொழுது மேலோர் கீழோர் ஆண்டான் அடிமை பொதுவுடமை சுரண்டல் என்பது எல்லாம் குறித்து ஆசிரியர் எழுதியிருப்பது விந்தைக்கு உரியதாகவும் சிந்தையை தூண்டுவதாகவும் அமைகிறது.
சென்னை மீனம்பாக்கம் இன்டர்நேஷனல் விமான நிலையத்தில் உள்ள அரங்கத்தில் பெண்கள் கொல்லங்குடி ஆடுவதை போன்ற சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கிறது அற்புதமான காட்சி பார்ப்பதற்கு.
கீழ்காணும் ஏழு தலைப்புகள் உள்ள சிறு தொகுப்பு , ஆனால் படிக்கப் படிக்க பக்கத்துக்கு பக்கம் வரிக்கு வரி ஏழு கடல் நீந்தி கடப்பதை போல அருமையாக இருக்கிறது.
1.தமிழ்
2.வீடும் வாழ்வும்
3.தைப்பூசம்
4.பல்லாங்குழி
5.தமிழக பெளத்தம் : எச்சங்கள்
6.பேச்சு வழக்கும், இலக்கண வழக்கும்
7.கறுப்பு
ஒவ்வொரு தலைப்பும், அதில் சொல்லப்படும் தகவல்களும்,
நம் கண்முன்னே கண்ட, மெல்ல மெல்ல மறைந்த நிகழ்வுகள் பற்றியதே ஆகும்.
ஒவ்வொரு வரியையும் படிக்கும் போது ஆசிரியரின் பரந்து பட்ட வாசிப்பு அனுபவம், தெரிந்து கொண்ட ஆழங்கால் பட்ட பட்டறிவும் நினைவில் நின்று நர்த்தனம் ஆடுகின்றது.
நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளன என்பதை நூலின் ஒவ்வொரு கட்டுரையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
உப்பு, எண்ணெய், தேங்காய், வழிபாடு, விழாக்கள், உடை உறவுமுறை, உறவுப் பெயர்கள் என அன்றாட வாழ்வின் பகட்டில்லாத பல்வேறு கூறுகளைக்கொண்டு தமிழ்ச் சமூகத்தின் ஈராயிரம், மூவாயிரமாண்டு வரலாற்று அசைவியக்கம் இந்நூலில் கோடிட்டுக் காட்டுகின்றது நாம் ஆச்சரியம் கொள்ளத்தக்க அளவிலே.
என்னை தவித்துக்கு (தவிடு)வாங்கியதாக சொன்னார்கள் .அந்த தவிடு குறித்த அறிவும், திருச்சி பக்கத்தில் உள்ள வெள்ளரை கோவில் குறித்த அறை கல்லறை என்கிற விரிகின்ற பார்வையும் என்னை புத்தகம் படித்து இரண்டு நாட்கள் கட்டிப்போட்டு விட்டது வேறு நினைவுகளில் கவனம் செலுத்த முடியாமல் போனது.
R Ravi Ravi

கருத்துகள்
கருத்துரையிடுக