இருமொழி இருக்க மும்மொழி எதற்கு? கவிஞர் இரா. இரவி !

இருமொழி இருக்க மும்மொழி எதற்கு? கவிஞர் இரா. இரவி ! தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழி போதும் தவிக்கவிடும் இந்தி மொழி எமக்கு வேண்டாம்! இருமொழியிலேயே இமாலய சாதனை புரிகின்றனர் மும்மொழிகளைப் புகுத்தி சாதனையைத் தடுக்காதீர்! புரியாத மொழியை திணிப்பது வம்புதானே தெரியாத மொழியை கற்பிப்பது வீண்தானே! இருமொழிகளுக்கு சிரமப்படும் குழந்தைகள் உண்டு மும்மொழி கொடுப்பது துன்பம் தரும் செயலே! கட்டாயமாக வகுப்பில் கற்பிக்க முடியாது கற்க விருப்பம் இருந்தால் தனியே கற்கலாமே! கல்வி நிதியை கொடுக்காமல் இருப்பது முறையோ ? கூட்டாட்சி முறைக்கு குந்தகம் தரும் செயலே! ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு உதவிட வேண்டும் ஒன்றிய அரசுக்கு வரியாக கோடிகள் கொடுக்கிறோம்! நேரு மாமா தந்திட்ட உறுதிமொழி என்னாச்சு நேர்மையாக நடந்து கொள்வதே நல்ல செயலாகும்! இந்தியை எதிர்த்து போராடிய போராட்டங்கள் இந்தியாவையே உலுக்கிப் பார்த்த போராட்டங்கள்! ஒவ்வாத உணவை நம் உடலே ஏற்காது ஒவ்வாத மொழியை தமிழர் ஏற்க இயலாது! உலகின் முதல்மொழியாம் தமிழைப் படிக்கிறோம் உலகமொழியாம் ஆங்கிலத்தைப் படிக்கிறோம்! இடையிலே இந்தியைப் படிக்கச் சொல்லாதீர் இன்னுமொரு இந்திப் போராட்டத்திற்கு தள்ளாதீர்!

கருத்துகள்