படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

“கருநாடக சங்கீதம் என்ற ஒன்று இல்லை; அந்தப் பெயரால் சொல்வதெல்லாம் தமிழிசை தான். திருவையாற்றில் தியாகையர் பாடியதெல்லாம் தமிழிசையைத் தெலுங்கு மொழியில் பாடிய கீர்த்தனங்கள்’’ --- மு.அருணாசலம். கர்நாடக இசை என்பது பழந்தமிழ் இசையே என்பதனைக் காட்டி தமிழிசைச் சிற்பிகளான முத்துத்தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்துப் பிள்ளை ஆகியோரின் வரலாற்றை விளக்கி, மூவருமே கருநாடக இசையின் ஆதி மும்மூர்த்திகள் என நிறுவி, உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவரும், நூற்றாண்டு வாரியாகத் தமிழ் இலக்கிய வரலாறு எழுதியவரும், தமிழிசை இலக்கிய வரலாறு மற்றும் தமிழிசை இலக்கண வரலாறு போன்ற நூற்களை எழுதியவரும், தமிழின் முதல் நாட்டுப்புறப் பாடல்கள் தொகுப்பை 'காற்றிலே மிதந்த கவிதை' என்ற தலைப்பில் கொண்டுவந்தவரும், காந்தி பரிந்துரைத்த, அரியநாயகம், ஆசாதேவி ஆகியோரால் வடிவமைக்கப்பட்ட ஆதாரக்கல்வி பற்றி தமிழில் நூல்கள் பல இயற்றியவரும், J.C. குமரப்பாவின் நூல்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தவரும் "அறிஞர்களின் அறிஞர்" என்றும் அழைக்கப்பெறுபவருமான தமிழறிஞர் மு.அருணாசலம் பிறந்தநாள் இன்று.

கருத்துகள்