படித்தேன்.. பகிர்ந்தேன்..
அண்மையில் ஓர் உணவு விடுதிக்குச் சென்றிருந்தேன். அங்கு உணவு வகை அட்டையுடன் ஓர் அறிவிப்பு வைக்கப்பட்டிருந்தது.
“எங்கள் ஊழியர்கள் எவருக்கும் டிப்ஸ் கொடுக்காதீர்கள். பிறகு, அவர்கள் வாடிக்கையாளர்களை தரம் பிரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். எங்கள் உணவு பிடித்திருந்தால் கல்லாவுக்கு அருகில் இருக்கும் பெட்டியில் நீங்கள் அளிக்க விரும்பும் சன்மானத்தைப் போடுங்கள். அது எங்கள் ஊழியர் அனைவருக்கும் பிரித்து அளிக்கப்படும். ஏனென்றால், முகம் தெரியாத பலருடைய உழைப்பும் உங்கள் மகிழ்ச்சியில் அடங்கியிருக்கிறது”.
எவ்வளவு நேர்மையான அணுகுமுறை! வியர்வை சிந்த அடுப்படியில் உணவு தயாரிப்பவர்களை விட்டுவிட்டு, பரிமாறுபவருக்குத்தானே நாம் அன்பளிப்பு தருகிறோம். நம்முடைய அணுகுமுறை எவ்வளவு மேலோட்டமானது!
👌👌👌
கவிஞர் செ.திராவிடமணி கூடலூர்
(3.8.2021- இல் எனது முகநூல் பதிவு)

கருத்துகள்
கருத்துரையிடுக