படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

இனிய வணக்கம் ." இலக்கிய அறிவு என்பது மேலாண்மையைச் சிறப்பாக நடத்துவதற்கு மட்டுமல்ல. இந்நூலின் நோக்கம் மேலாண்மையில் கடைப்பிடிக்கப்படும் கருத்துக்கள் இலக்கியத்தில் ஏற்கனவே இடம் பெற்றிருக்கின்றன என்று கூறுவது மாத்திரமல்ல .மேலும் இலக்கியத்தில் இடம் பெற்று இன்னும் நடைமுறைப்படுத்தப்படாத சில கூறுகளையும் குறிப்பிட்டு ,நவீன மேலாண்மைக்கு அதைப் பற்றிய சில நுணுக்கங்களைத் தருவதுதான் .எல்லா நாடுகளுக்கும் பொதுவான மேலாண்மையை வகுத்துத் தர முடியாது. ஒரு நாட்டின் பண்பாடு, வாழ்க்கை முறை, நம்பிக்கை ,தொன்மை போன்றவையே அதன் நிர்வாகத்தையும் மேலாண் முறைகளையும் தீர்மானிக்கிறது. அந்த நுட்பங்களை இலக்கியத்தின் மூலமாக அறிந்து கொள்ள முடியும். எந்த பணியைச் செய்வதாக இருந்தாலும் அதில் இலக்கிய அறிவு உதவிகரமாக இருக்கும். மேற்கத்திய அறிவியல் நூல்களில் கூட இலக்கிய மேற்கோள்கள் ஒவ்வொரு அத்தியாயத்தின் நெற்றியிலும் சூட்டப்பட்டு இருப்பதைப் பார்க்கலாம். வாழ்க்கையை அறிவியல், இலக்கியம் என்றெல்லாம் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. இவையெல்லாம் சேருகிற போது தான் அது முழுமையானதாக இருக்கும் முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப. 240&241" .இந்த நாள் மகிழ்வான நாளாக அமையட்டும்.

கருத்துகள்