தனது அயராது உழைப்பினாலும், இடைவிடாத முயற்சியினாலும் உலகின் ஏழு கண்டங்களிலும் உள்ள உயரமான சிகரங்களின் உச்சத்தை அடைந்து, தமிழ்நாட்டிலிருந்து எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண்மணி என்ற அளப்பரிய சாதனையை படைத்த, திருமிகு. முத்தமிழ்செல்வி அவர்களை நேரில் சந்தித்து எனது மனமார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்கி மகிழ்ந்தேன்.
இவரது இத்தகைய மாபெரும் சாதனையானது தமிழ்நாட்டிலிருந்து இன்னும் பலபேர் பலவேறு சாதனைகள் குவித்திட உந்துசக்தியாக அமையும். மேலும் திருமிகு. முத்தமிழ்செல்வி அவர்கள் தங்கள் வாழ்வில் மேன்மேலும் பல சாதனைகளைப் புரிந்து, தங்களைப் போன்றே கனவுகளோடு சாதனை படைக்கக் காத்திருப்பவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கிட எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள்
கருத்துரையிடுக