படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

கன்னியாகுமரியில் 31-12-2024 அன்று நடந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் பங்கேற்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு முழுவதும் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக திருக்குறள் திருப்பணிகள் திட்டம் செயல்படுத்தப்படும் என்கிற அறிவிப்பை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து, தேனி மாவட்டத்தில் இத்திட்டத்தினைச் செயல்படுத்திட அமைக்கப் பெற்ற கண்காணிப்புக் குழுவின் கூட்டம் இன்று (11-7-2025) தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பின்பு தேனி மாவட்ட ஆட்சியர் திரு ரஞ்ஜீத் சிங் இ.ஆ ப., (தலைவர், திருக்குறள் திருப்பணிகள் திட்டம்) அவர்களுடன் திருக்குறள் திருப்பணிகள் திட்டத்திற்கான கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் தேனி மு. சுப்பிரமணி, தேனி சீருடையான, கம்பம் பாரதன், புலவர் இளங்குமரன், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் திருமதி க. பாப்பாலட்சுமி (உறுப்பினர் மற்றும் செயலர், திருக்குறள் திருப்பணிகள் திட்டம்) மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை உதவியாளர் ஜா. புருசோத்தமன் ஆகியோர் எடுத்துக் கொண்ட ஒளிப்படம். (ஒளிப்படம் - நன்றி: திருமதி மஞ்சுளா அவர்கள், தட்டச்சர், தமிழ் வளர்ச்சித் துறை, தேனி மாவட்டம்)

கருத்துகள்