படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

இனிய காலை வணக்கம் ." தகவல் பரிமாற்றத்தில் முக்கியமான பங்கை வகிப்பது சொற்களற்ற மொழி(Non-Verbal Communication).மொழி என்றால் பேசுவதும், எழுதுவதும் மாத்திரமே என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். நாம் பேசும்போது ஏழு விழுக்காடு பொருள் மட்டுமே சொற்களால் வெளிப்படுகிறது. முப்பத்தெட்டு விழுக்காடு குரல், தொனி, வேகம், நேரம் ஆகியவற்றைப் பொருத்தும், ஐம்பத்தைந்து விழுக்காடு உடலசைவின் மூலமும் வெளிப்படுகிறது என்று மொழி வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். ஒரே வாக்கியம் உச்சரிக்கும் விதத்தால் வெவ்வேறு பொருள்களை விநியோகிக்கிறது. முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப. 215" .இந்த நாள் சொற்களற்ற மொழிகளால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இனிய நாளாக அமையட்டும்.

கருத்துகள்