மறைந்த நடிகை கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரஸ்வதி...
தேவகோட்டை முத்துமணி !
சரோஜாதேவி அவர்கள் முதிர்ந்த வயதால் உதிர்ந்த போதிலும், பல திரைப்படங்களில் அவரது நடிப்பை இரசித்த தமிழ் ரசிகர் உள்ளங்களின் சார்பில் ஆழந்த இரங்கல்கள்.
அவரது பேச்சும் நடிப்பும் ஒரு 'நேர்த்தி' யோடு இருக்கும். கொஞ்சிப் பேசும் அவரின் தமிழ் அழகு. அதனால் தான் அவர் 'கன்னடத்துப் பைங்கிளி'. இதற்காகவே கவியரசர்
எழுதி இருப்பார்,
பேசுவது கிளியா ?
இல்லை
பெண்ணரசி மொழியா ?
படகோட்டி திரைப்படத்தில் புரட்சித் தலைவரும், சரோஜா தேவியும் காதலர்களாகவே வாழ்ந்து இருப்பார்கள். நடிப்பு என்பதே உணர முடியாதா அளவுக்கு இயல்பாக இருக்கும்.
முதலில் இருவரும் சந்திக்கும் காட்சி... மக்கள் திலகம் சரோஜா தேவியிடம், அவரது பெயர் என்ன என்று கேட்பார். 'முத்தழகி' என்பார் அவர். பிறந்த உடன் பார்த்து
வைத்த பெயரா முத்தழகி என்பார் மக்கள் திலகம் புகழ்ச்சி காட்டி .
உங்க ஊரில் எல்லாம் குழந்தை வயிற்றில் இருக்கும் போதே பெயர் வைத்து விடுவார்களா என்று கலாய்ப்பர் பதிலுக்கு சரோஜா தேவி.
இவர்களின் இடையில் நடக்கும் 'லடாய்' களுக்காகவே வெற்றிகரமாய் ஓடிய திரைப்படம் 'அன்பே வா'
மறைந்த நடிகை சரோஜா தேவிக்கு தமிழ் இரசிகர்கள் சார்பாக இரங்கல்கள்.

கருத்துகள்
கருத்துரையிடுக