திரைச் சுவடுகள் ! எழுதியவர்..கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: க.சிவக்குமார். பொறியாளர். திருமங்கலம் !

நூல் பெயர்.. திரைச் சுவடுகள் ! எழுதியவர்..கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: க.சிவக்குமார். பொறியாளர். திருமங்கலம் ! வெளியீடு வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாகராயர் நகர் .சென்னை .600017. email vanathipathippakam@gmail.com தொலைபேசி எண்கள் 044 - 2432810. 24310769 பக்கங்கள் 178 விலை 160 ரூபாய் . இந்நூலில் கிராம வாழ்க்கை, பண்பாடு, அன்பு பற்றிய 5 திரைப்படங்கள், மாணவ பருவம், நல் ஒழுக்கம், ஆசிரியர் பெற்றோர் பொறுப்பு, சிறப்பு குழந்தை வளர்ப்பு பற்றிய 9 திரைப்படங்கள், சமுதாய சீர்திருத்தம் பற்றிய 16 படங்களும், ஊனமுற்றோர், மனநல குறைபாடு சேவைகள் பற்றிய 9 படங்களும் முதியோர் அக்கறை பற்றிய 1 படமும் சேர்த்து 40 திரைப்படங்கள் எழுத்தாளர் கவிஞர் இரா. இரவி அவர்களின் பாராட்டுதல்களை பெற்றிருக்கின்றன.. ஒவ்வோரு பட விமர்சனத்த்திலும், காம மற்றும் பழி உணர்வு தூண்டக்கூடிய கவர்ச்சி, நடனம், வசனம், வன்முறை இல்லாமல், நற்கருத்தினை மக்களுக்கு கொண்டுசேர்ப்பதில் கலைஞர்களின் பங்கினை பாராட்டி நம்மையும் பார்க்க தூண்டியிருப்பது சிறப்பாகும்.. கவிஞர் இரா.இரவி ஐயா திரை விமர்சனத்திற்கு எடுத்துக்கொண்ட அளவு கோலைப் பார்க்கும் போது, அன்னாரை திரைப்பட தணிக்கை குழு தலைவராக நியமித்தால் , நிச்சயமாக தரமான படங்களை மட்டுமே தயாரித்து வெளியிட செய்து, சமுதாயத்தின் இன்றைய அவல நிலையை சீர்படுத்துவார் என்பதில் ஐயமில்லை. பல ஆண்டுகளுக்கு முன் MGR, திராவிட முன்னேற்ற கழகத்தில் சேர விருப்பம் தெரிவித்தபோது, பலர் முகம் சுருங்கையில் அண்ணா அவர்கள், சீர்திருத்த கொள்கைகள் எளிதில் விரைவாக மக்களை அடையச்செய்வது திரைப்படம் தான் என்றும், ஆகையால் நடிகர் ராமச்சந்திரனை வரவேற்கிறேன் என்றார்... எண்ணியதும் நடந்தது. மேலும் கவிஞர் இரா. இரவி அவர்கள், நிறைவு குறைவாக தயாரித்து வெளியிடப்பட்ட 7 திரைப்படங்களின் குறைகளை கூறி விமர்சித்திருப்பது, அன்னாரின் துணிச்சலையும் நேர்மையையும் காட்டுகிறது.. இறுதியாக மசாலா படங்களாக மேலும் 7 படங்கள் பயனில்லை என்ற வகையில் குறிப்படும்போது கலைஞர்கள் தங்களை முன்னேற்றிக்கொள்ள உற்சாகமும் அளித்துளாளார்.. திரைப்படங்கள் சமுதாயத்தில் உள்ள அவல நிலை நீங்க மட்டுமல்லாது, வாழ்க்கையில் அனைத்து நிலைகளிலும் உற்சாகப்படுத்தி, மக்களுக்கு பயனுள்ள சேவையாகவும், நம்மிடமுள்ள அறியாமையை போக்க, நடைமுறையில் உள்ள வாய்ப்புகளை வெளிச்சம் போட்டு காட்டவும் வேண்டும், என்கிற கருத்தை எழுத்தாளர் வலியுறுத்தி இருப்பது குறிப்பிட தக்கது.. தான் எழுதிய, " திரைச்சுவடுகள் " புத்தகத்திற்கு மதிப்புரை வழங்க வாய்ப்பு கொடுத்த கவிஞர் இரா.இரவி அவர்களுக்கு மிக்க நன்றி. .. வாழ்த்துக்கள். என் வாழ்வில் சந்தித்த சாதனையாளர் குடும்பம் பற்றி குறிப்பிடுவது சமுதாயத்திற்கு பயனளிக்கும் என நம்புகிறேன். நணபர் பொறியாளராக என்னுடன் துபாயில் பணிபுரிந்தவர்.. அவருடைய ஒரே மகன் 3 வயதில் மெனிஜ்டிஸ் என்கிற காய்ச்சல் வந்து அவதிப்பட்டு சிகிச்சை அளித்து குணமாகும் போது தன் காதுகள் ஒலி கேட்கும் சக்தி இழந்து விட்டான். விளைவு வளர்கிற பருவத்தில் கேட்கும் திறனும் பேச்சுத்திறனும் இழந்தான். நண்பரின் மனைவி தன் மகனுக்கு 5 வயது வரை தன் வாய் உதடுகள் அசைவில் பேசி எழுத்துகள் எழுத பயிற்சி கொடுத்து பள்ளியில் சேர்த்தார்கள்.. அங்கு 2 மொழிகள் கற்பிப்பது சிரமம் என அறிந்து ஆங்கில மொழியில் பயிற்சி கொடுத்தார்கள் . தாய் மகனுடன் தினமும் பள்ளிக்கு சென்று மகனுக்கு அன்றாட பாடங்களை சொல்லிக் கொடுத்து ஒவ்வொரு வருடமும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று 12 ம் வகுப்பும் தேறிவிட்டான்.. அவனால் பேச முடியாது .மற்றவர் பேசுவதை அவர்கள் உதடு அசைவுகளை வைத்து புரிந்து கொள்வான்.. தமிழக அரசு ஆணையின் படி சிறப்புக்குழந்தை என்கிற அடிப்படையில், பொறியியற் கல்லூரியில் படித்து சிவில் இன்ஜினியரிங் பட்டமும் பெற்றான். கல்லாரியில் படிக்க அவனுக்கு முழு உதவி செய்தவர்கள் உடன் படித்த நண்பர்களே. சில ஆண்டுகள் தனியார் கம்பெனியில் டிசைன் இன்ஜினியராக கம்யுட்டரில் பணி புரிந்து, பின் தமிழக அரசு துறையில் பணியில் சேர்ந்து, கம்ப்யுட்டர் உதவியுடன் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.. 2 ஆண்டுகளுக்கு முன் TNPC யில் தமிழ் தேர்வில் தேர்ச்சி அடைந்தால் பணியிலிருக்கலாம் என உத்தரவு வந்தது.ஏனெனில் இவர் படித்தது ஆங்கிலம் மட்டுமே பள்ளியில். திரும்பவும் இவர் தாயார் 6 மாதம் தமிழ் பயிற்றுவித்து TNPC தேர்வில் தேர்ச்சி பெற்றார்..அடுத்து நேர்முக தேர்வில் இவரால் பேச முடியாதலால் , பணி நீக்கம் செய்ய வேண்டுமென உத்தரவு அனுப்பிவிட்டார்கள்.. பின் தொடர்ந்து சட்ட வல்லுனர்கள் உதவியுடன் கோர்ட் மூலமாக சட்ட திருத்தத்திற்கு ஏற்பாடு செய்து பணியில் வெற்றிகரமாக தொடர்கிறார்.. இவருக்கு மணமாகி இரண்டு குழந்தைகள் பள்ளி சென்று வருகிறார்கள்.. அனைத்து சாதனைக்கும் மன உறுதியுடன் உழைத்த தாயும் தளராத நெஞ்சத்துடன் ஊக்கம் அளித்த தந்தையையும் பாராட்டுகிறேன்.. பகிர்வது யாருக்காவது பயனளிக்கும் என்கிற எண்ணத்தினால்......

கருத்துகள்