படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

உரைகல்லின் உரைக்கோவை ********************************* ஆன் பிராங்க் ============ பிறந்த தினம் ஜூன் 12-1929 நினைவு தினம் மார்ச் 1945 ** ஆன் பிராங்கின் டைரி குறிப்புக்கள் படித்த போது விழி நிறைந்த நீர்துளிகள்... ** போராட்டம் மிகுந்த வாழ்க்கை.. ** ஆன் பிராங்கின் நாட்குறிப்புகள் தான் அன்றைய வாழ்க்கையை அறிய பயன்பட்டது. ** ஜெர்மனியில் பிறந்த யூதப் பெண் ஆன் பிராங்க். ** இவர் எழுதிய நாட்குறிப்புகளுக்காக அறியப்படுகின்றார். ** இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரின் நாஜிப்படையால் படுகொலை செய்யப்பட்ட யூதர்களைப்பற்றி செய்திகளை ஆனி பிராங்கின் நாட்குறிப்புகளில் எழுதி உள்ளார். (The Diary of Anne Frank) பிறப்பிடம் ^^^^^^^^^^ ஆன் பிராங்க் 1929ஆம் ஆண்டு ஜுன் 29 ஆம் தேதி ஜெர்மனியின் பிராங்பெர்ட் நகரில் பிறந்தார்.பெற்றோர் ஒட்டோ பிராங்க்- எடித். வாழிடம் ^^^^^^^^^ இவரது குடும்பம் நெதர்லாந்தில் வசித்து வந்தது. இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் நாசிப்படைகளால் யூதர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டு வந்ததால் இவர்களது குடும்பம் ஆம்ஸ்டர்டாமிற்குத் தப்பி சென்றது. ராணுவத்தின் கொடுமையான செயல்கள் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ இனத்தூய்மை செய்வதாக யூதர்களை மொத்தமாக முகாமில் அடைத்து விஷவாயு செலுத்திக் கொன்று குவித்தது நாஜி ராணுவம். குழந்தைகளை தலையை மொட்டையடித்து நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்தது ஹிட்லரின் ராணுவம், இது போன்ற கொடுமையான சித்ரவதை மற்றும் முகாமில் மாட்டிக் கொள்ளாமல் தப்பிப்பதற்காக யூதக் குடும்பங்கள் ரகசிய இடங்களில் ஒளிந்துவாழத் துவங்கினார்கள். மறைமுகமான வாழ்வு ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ ஒரு மறைவிடத்தில் இரண்டு ஆண்டுகளாக வசித்து வந்தது ஆன் பிராங்க் குடும்பம்.அந்த மறைவிடத்தில் எட்டு பேர் வாழ்ந்து வந்தார்கள்.அப்பா ஒட்டோபிராங்கின் அலுவலகத்தில் உள்ள ரகசிய அறை ஒன்றில் ஒளிந்து வாழ்ந்தார் ஆனி. நாட்குறிப்பில் வாழ்வியல் பதிவுகள் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ ஆனின் 13வது பிறந்தநாள் அன்று அவளுக்குப் பிறந்தநாள் பரிசாக ஒரு டைரி கிடைத்தது.அதைப்பயன்படுத்தி அவள் தனது அன்றாட நிகழ்வுகளைப் பதிவு செய்யத் துவங்கினாள். சத்தமே போடாமல்,சிரிக்காமல்,பெரிய ஆட்டம் போட முடியாமல் அமைதியாகவும் எப்பொழுது பிடித்துக்கொண்டு போவார்களோ என்கிற பயத்தோடு வாழ்ந்தார்கள். ஆனிக்கு துணையாக இருந்தது ஆனிக்கு கிடைத்த டைரி.மறைந்து வாழ்ந்த இரண்டு வருடமும் ஆனி டைரியில் எழுதினாள்.ஆனி பிராங்க் டச்சு மொழியில் இந்த டயரியை எழுதினாள். நாட்குறிப்பின் பெயரும்-வாழ்வின் தூயரங்களும் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ ஆனி தனது டைரிக்கு கிட்டி என்று பெயர் சூட்டினாள்.ஒரு தோழியிடம் நடந்த செய்திகளைச் சொல்வதைப் போலவே நாட்குறிப்புகளை எழுதியுள்ளாள்.முதல் 22 நாட்கள் அவர்களின் இயல்பு வாழ்க்கையை விவரிக்கும் இந்த நாட்குறிப்பு அதன் பிறகு 1944 வரையான அவர்களின் ஒளிந்துவாழும் காலத்தைப் பற்றி எழுதி உள்ளாள்.தனது இருண்ட வாழ்க்கையின் அவலங்களை, வலியை, வேதனைகளை நாட்குறிப்பில் பதிவு செய்து உள்ளாள் ஆனி. கொடுமையான சட்டம் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ ஹிட்லர் ஆட்சியின் போது நடந்த கொடுமைகளை தன் டைரில்எழுதி உள்ளார். யூதர்கள் எப்போதும் மஞ்சள் நட்சத்திரச் சின்னத்தை அணிந்து கொண்டிருக்க வேண்டும். மாலை மூன்று மணியில் இருந்து ஐந்து மணிக்குள் மட்டுமே தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கவேண்டும்.யூதர்களுக்கு டிராம்களில் பயணிக்கவோ, வாகனம் ஒட்டவோ அனுமதி கிடையாது.இரவு எட்டுமணிக்கு மேலே வெளியே வரக்கூடாது, வீட்டின் முற்றத்தில் அமரக்கூடாது என்று கடுமையான சட்டங்களை விதித்திருந்தது. நீச்சல், விளையாட்டுபோட்டிகள், எதிலும் பங்கேற்க கூடாது, யூதர்களுக்கான தனிப்பள்ளியில் மட்டுமே சேர்ந்து படிக்க வேண்டும்.பொது இடங்களில் சைக்கிளை தள்ளிக் கொண்டு தான் போக வேண்டும். போன்ற கடுமையான தடை சட்டங்கள் இருந்தன.இவற்றைப்பற்றியும் தன் நாட்குறிப்பில் குறிப்பிட்டு உள்ளாள் ஆனி ஆன் பிராங்க் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகள் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ ஆனின் காதல்,ஆனின் ஆண் நட்பு, அதை அவள் உணரும் விதம், ரகசிய அறைக்குள்ளாக வளரும் அவர்களின் காதல், முடிவற்ற உரையாடல்கள், அதில் ஏற்படும் மனசஞ்சலம், கவலை,அம்மாவிடம் சண்டை, மற்றும் யாருடனும் பகிர்ந்து கொள்ளாத காதலின் உற்சாகம் ஆகியவை ஆனின் நாட்குறிப்பில் விவரித்துள்ளார். ஒளிந்துவாழும் ரகசிய இடத்தில் ஆனி ஆண்களோடு பேசிப்பழகுவது அம்மாவிற்கு பிடிக்கவில்லை.அப்பா ஆனியை எப்போதுமே பரிவுடன் நடத்தினார்.ஆனிற்கும் அப்பாவின் மீது தான் அதிக பாசம் இருந்தது. ஒளிந்துவாழும் காலத்தில் உடனிருக்கும் ஒருவரின் மனைவி தனது அப்பாவை மயக்குவதற்கு செய்யும் முயற்சிகள் அவளுக்கு எரிச்சலூட்டுகின்றன, குளிப்பதற்கு இடமில்லாமல் அம்மா இருட்டில் நின்று குளிப்பது அவளுக்குக் கவலை தந்தது. உணவுத்தட்டுபாடு, ராணுவம் பிடித்துக் கொண்டு போய்விடுமோ என்று பயந்து பல நாட்கள் பேசாமல் மௌனமாக இருப்பது, மின்சாரமில்லாத அறையினுள் சவக்குழியில் வாழ்வது போன்ற மனநெருக்கடியை உணர்வது என்று ஆனி நாட்குறிப்பில் தனது அகநெருக்கடிகளைத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறாள். ஆன் பிராங்கின் கற்றல் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ மொழிபெயர்ப்பு செய்வது, பிரெஞ்சு கற்றுக் கொள்வது, சுருக்கெழுத்துபடிப்பது என்று அவள் தனது புறஉலகின் நெருக்கடியில் இருந்து தப்பிக்க முயன்றார். நாஜி ராணுவத்தின் கொடுமையான செயல் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ ஒட்டோ பிராங்கின் தலைமறைவு வாழ்க்கை கண்டுபிடிக்கபட்டு நாஜி ராணுவம் அவர்களை வதைமுகாமிற்கு இழுத்துக் கொண்டு போனது, ஆனி தனது டயரியை அந்த வீட்டிலே ஒளித்து வைத்துவிட்டு வந்தாள். யூதமுகாமில் அவளது அம்மா இறந்து போனார், அப்பா வேறு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டார், பெர்ஜன் பெல்சன் முகாமில் ஆனியும் அக்காவும் உடல் நலமற்று போனார்கள்.அங்கு ஆன் பிராங்க் மறைந்தார். மறைவு ^^^^^^^^^ 1945 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது 15ஆவது அகவையில்ஆன் பிராங்க் மறைந்தார். நாட்குறிப்பு வெளியிடு ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ ஒட்டோ பிராங்கிற்கு தெரிந்த பெண்ணாகிய மையிப் கைஸ் ஆன் பிராங்க் குடும்பம் ஒளிந்துவாழும் காலத்தில் உடனிருந்தார், கைஸ் ஒரு டச்சுகாரர். ராணுவம் ஒட்டோபிராங்கை பிடித்துக் கொண்டு போன பிறகு கைஸ் தற்செயலாக அந்த ரகசிய அறையினுள் தேடியபோது ஆனியின் டைரி கையில் கிடைத்தது, டைரியை கைஸ் போர் முடிந்தபிறகு திரும்பி வந்த ஒட்டோ பிராங்கிடம் ஒப்படைத்தார், அதை வாசித்த ஒட்டோ பிராங்க் தன் மகளின் எழுத்தாற்றலைக் கண்டு நெகிழ்ந்து போய் அந்த நாட்குறிப்பினை வெளியிட்டார். ஆனி தனது 13,14ஆம் வயதில் மறைந்து வாழந்த வாழக்கையை நாட்குறிப்பில் எழுதியதால் உலகிற்கு தெரிய வந்தவள். நாஜிகள் நடத்திய அக்கிரமங்களையும், அடக்குமுறைகளையும் நேருக்கு நேர் பார்த்து தனது நாட்குறிப்பில் எழுதி உள்ளார். மொழிப்பெயர்ப்பு ^^^^^^^^^^^^^^^^^^^ இந்த நாட்குறிப்பு 1950ல் ஆங்கிலத்தில் வெளியானது. பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நினைவிடம் ^^^^^^^^^^^^^^ ஆன் பிராங்க் மறைந்து வாழ்ந்த கட்டிடம் இப்போது இவரது நினைவிடமாக மாற்றப்பட்டுள்ளது. தொகுப்பு முருகு வள்ளி

கருத்துகள்