படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

நூல் மதிப்புரை நல்லாசிரியர் உலக சாதனையாளர் சுலைகா பானு நஜுமுதீன் ✍️ எழுத்தாளர் , கவிஞர் , ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், நாடக நடிகர் இப்படி பல அவதாரங்களை கொண்டவர் தான் “மண் தொடும் விழிகள் “என்ற கவிதை நூலில் ஆசிரியர் ஆ .கிருட்டிணன்.Krishnan Arumugam ✍️ முகநூலில் மட்டுமே அறிமுகமான ஆசிரியர் சொந்தமான ஐயா அவர்களின் மண் தொடு விழிகள் கவிதை நூல் கிடைக்கப் பெற்றேன். ✍️ ஒரு படைப்பு தன்னுடைய அறிவுத் திறமையை அடையாளப்படுத்துவதை விட அதை படிப்போருக்கு ஏதாவது ஒரு வகையில் பயன்பட வேண்டும் என்றஅவரின் எண்ணத்தினை நிறைவு செய்வதாகவே அமைந்துள்ளது இந்த கவிதை தொகுப்பு . ✍️ அம்மாவில் ஆரம்பித்து மனைவி , குடும்பம் , குழந்தை , நட்பு , காதல் … இப்படி அனைத்து உறவுகளையும் கவிதையாக வடித்துள்ளார் . ✍️ அதோடு மட்டுமல்லாமல் சமூக அவலங்களையும் தன்னுடைய கவிதைகளின் வழியே படம்பிடித்துக் காட்டி இருக்கிறார். ✍️ அப்துல் கலாம் பற்றி அவருடைய கவிதைகள் … ".குடிசைகளும் சுவாசித்த குடியரசுத் தலைவன் நீ. கண்ணை மூடாமலே - உலகை கனவு காண வைத்தவனே " என்பது போன்ற வரிகள் மிகச் சிறப்பு. ✍️ தலைவர்கள் என்று எடுத்துக் கொண்டால் காமராஜர் , கக்கன் , வ .உ . சி . இப்படி பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. ✍️ இயற்கையோடு இணைந்து அதன் ரசிகனாக தூக்கணாங்குருவி கூட்டினைப் பற்றி அவர் பாடிய அழகிய வரிகள் , "அந்தரத்தில் அசைந்தாடும் கோபுரத்தை கட்ட அடக்கத்தோடு கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் தூக்கணாங்குருவியிடம் " ✍️ "வெடிகுண்டுக்கே வியர்க்காத வெள்ளையன் உன் பாப்பா பாட்டிற்கு பயந்து ஓடினான் " என்று பாரதியின் பெருமையை நேசமுடன் எழுதியுள்ளார்., ✍️ இப்படி “ மண் தொடும் விழிகள் “ கவிதை தொகுப்பு முழுதும் நிச்சயம் நம் மனதை தொடும். மிக்க மகிழ்வும் வாழ்த்துகளும் ஐயா 😊🙏🏼💐

கருத்துகள்