படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

பெருங்கவிக்கோவை என்று காண்பம் இனி! *************************************************** 1. தன்பணி என்றும் தமிழ்ப்பணி என்றுமே இன்புற்று வா.மு.சே ஞாலத்தில் --- தன்கடனாய் நன்றெண்ணிச் செய்தாரை நற்றமிழர் எல்லாரும் என்றுநாம் காண்பம் இனி ! 2. மொழியினம் நாடுமே முன்னேற எண்ணி விழிப்போ டுழைத்த கவிக்கோ ---விழிமூடித் தன்மூச்சும் அற்ற தமிழ்தாய் மகனையே என்றுநாம் காண்பம் இனி ! 3. நோபல் பரிசுபெற நோன்புமே நோற்றாரை நோபல் பரிசு பெறுமுன்னே கூற்றுவனால் மன்னு பெருங்கவிக்கோ மூச்சடங்கிப் போனாரை என்றுநாம் காண்பம் இனி ! 4. பன்னாட்டில் வாழுகிற பைந்தமிழர் தம்மையே நன்றே உறவாக்க நாட்டமுடன் --என்றுமே அன்போ டுழைத்த பெருங்கவிக்கோ என்பாரை என்றுநாம் காண்பம் இனி ! 5. அன்னைத் தமிழை அகம்வைத்து ஞாலத்தில் முன்னிப் பணிசெய் பெருங்கவிக்கோ ---தன்னுருவம் நன்னயம் இல்லாத கூற்றால் இழந்தாரை என்றுநாம் காண்பம் இனி ! புலவர் பழ.தமிழாளன், இயக்குநர்---பைந்தமிழியக்கம், திருச்சிராப்பள்ளி.

கருத்துகள்