படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

ஐக்கூ அணுக்கள் ----------------------------------- மோதி மடியாமல் ஊதி அணைத்தன நவீன விட்டில்கள் புல்லாங்குழல் புரிந்து கொண்டது இதழின் மொழி வணங்கிச் செல்கிறார் கடவுள் அநாதைப் பிணங்களை அடக்கம் செய்தவனை தாகத்தால் தவித்தது வேல் குத்தப்பட்டுத் தொங்கும் நாக்கு நடிகரின் பதாகைக்குப் பால் அபிஷேகம் முட்டித் தள்ளியது பசு தொட்டுப் பார்த்தேன் கதை சொல்ல ஆரம்பித்தது தாத்தாவின் கைத்தடி பனித்துளி ஒன்றில் தூங்காமல் விழித்திருந்தது பரந்த வானம் ( பாவலர் கருமலைப் பழம் நீ அவர்களின் புதிய வருகையான ' குளத்தில் மிதக்கும் பருந்தின் நிழல் '... ஐக்கூ நூலில் இருந்து)

கருத்துகள்