வங்கி செல்ல வேண்டிய வேலை இருந்தது. Lakshmi RS
வங்கிக்குள் நுழைந்து அங்கிருந்த ஊழியரிடம் என்னுடைய வங்கிக் கணக்கு தொடர்பாக கேட்டுக் கொண்டிருந்தேன்.
மேனேஜரின் அறையிலிருந்து வந்த அந்த இளைஞன் , புன்னகையுடன் அருகில் வந்து குட் மார்னிங் மேம் என்றவுடன் ஆச்சரியமாக அவரைப் பார்த்தேன்.
தெரிந்த முகமாக இருந்தது. ஆனால் யாரென்று சட்டென்று அடையாளம் காண முடிய வில்லை..
தயக்கத்துடன் பார்க்கையில் , மேம் நான் “அமன், உங்களிடம் சில ஆண்டுகளுக்கு முன் கணிதம் பயின்றேனே “என்றதும் , நினைவிற்கு வந்தது.
வங்கியிலேயே என் பாதம் தொட்டு வணங்கினான், எனக்கு ஆனந்த கண்ணீர்.
தங்கம் , எப்படி இருக்க என்றேன்?
“நலமாக இருக்கிறேன் மேம். இங்குதான் பணி புரிகிறேன் “என்றான்.
எனக்கு இந்த வங்கியில் தான் கணக்கு இருக்கிறது என சொல்லி சில மணித் துளிகள் பேசினோம். பிள்ளையின் வேலை நேரத்தில் தொந்தரவாக இருக்க க் கூடாதே..
எனக்கு எல்லா உதவிகளையும் செய்து கொடுத்து , என் பணி அத்தனையையும் பூர்த்தி செய்து கொடுத்து என்னை வழி யனுப்பி வைத்தான்.
எங்கு போனாலும் என் பிள்ளைகளை தவறாது பார்த்து விடுகிறேன்..
இந்தப் பிறப்பிற்கு இந்த மகிழ்வு போதும் என்றிருக்கிறது.. 🩷

கருத்துகள்
கருத்துரையிடுக