திரும்பிப் பார்க்கிறேன் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை பொறியாளர் க. சிவக்குமார்.

திரும்பிப் பார்க்கிறேன் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை பொறியாளர் க. சிவக்குமார். வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை - 600 017. பக்கங்கள் : 78, விலை : ரூ.70 . திருமங்கலம். கவிஞர் இரா. இரவி அவர்களின், திரும்பி பார்க்கிறேன் என்ற நூலுக்கு மதிப்பரை அளிக்க கிடைத்த வாய்ப்பு என் அறிவு வளர்ச்சிக்கு கிடைத்த அரியவாய்ப்பாகும்... தாங்கள் புலிப்பால் ரவி என பெயர் பெற்றதற்கான செயற்கரிய செயலை செய்த சேவையே தம் வாழ் நாளில் மறக்க முடியாத நிகழ்வு என்பதற்கு காரணம், நூல்களின் உரை கேட்டு பயன் பெற்றோரும் உரையாற்றிய குடியரசு தலைவர் அப்துல் கலாம் ,மற்றும் நூல்களை எழுதிய முதுமுனைவர் இறையன்பு ஐயா அவர்களும் அடைந்த மகிழ்சியே ஆகும். இலக்கியவாதிகள், கவிஞர்கள்,பல்வேறு ஆளுமைகளின் தொடர்பினை தன் பிரதிபலன் கருதாமல் செய்த சேவைகளின் மூலம் தக்கவைத்து , தேனிருக்கும் மலர்களில் வண்டு அமர்ந்து மகரந்த சேர்க்கை ஏற்படுத்தும் பயனைப்போல , அவ்வப்பொது நல்லோர்களுடன் அவர்கள் செயலாற்றல்களை முகநூல், புலனம், வலைப்பூ, புலனம் மூலமாக பதிவிடுதலில் தன் முழு முயற்சிகளை செய்து வருவது, படிப்போர் அறிவு, உற்சாகம், நற்சிந்தனை ஆகியவற்றை வளர்த்துக்கொள்ள உதவும்.. இவைகளை இறைசேவை என்றே ஆத்திகர் எண்ணுவர்.. சிறுவயதில் கல்வி கற்க அதிக வாய்ப்பு கிடைக்க வில்லையெனினும் , படிப்பதிலும், கேட்பதிலும் சிந்தனை செய்தும் தன் அறிவாற்றலை வளர்த்து முனைவர் கவிக்கோ கவிஞராக ஒளிவீசி வாழ்வது, மக்களனைவரும், முக்கியமாக இளைய சமுதாயத்தினர் ஊக்கம் பெற ஓர் எடுத்துக்காட்டாகும். நான் படித்த முதல் ஹைக்கூ கவிதை, மிக சிறப்பானதும் ஆன கவிதை தாங்கள் எழுதியதே. மாதா பிதா குரு மூவரும் ஒரே வடிவில் மனைவி. ஆத்திகரல்லாதவராகிய தாங்கள், ஆத்திக நம்பிக்கையில் உறுதியான இல்லத்தரசியின் வாழ்க்கை, வழிபாடுமுறைகளுக்கு முழு சுதந்திரம் அளித்து , மகிழ்வுடன் ஏற்று நடத்தி வரும் தங்கள் இல்லற வாழ்க்கை மகுடத்தில் மாணிக்க கல் பதித்திருப்பது போலாகும்.. ஒவ்வொரு மனிதனும் , தன் நற்செயல்களினாலும் நற்குணங்களினாலும்,மற்றவரும் மேன்மையில் உயர்ந்து வாழ , தம் வாழ்க்கையை அமைப்பதன் மூலம் தனக்கே உரிய ஒளியை வீசி வாழ்வதற்காகவே இவ்வுலகத்தில் தோன்றியுள்ளோம் என்பதை தாங்கள் ஒவ்வொரு நாளும் நிரூபணம் செய்து வருவதை மனதார பாராட்டுகிறேன்.. வாழ்த்துக்கள்.தங்கள் வாழ்வில் சந்தித்த அனைவரும் தத்தம் வாழ்வில் ஒளிவீசிடும் நட்சத்திரங்களாக மின்னுகிறார்கள் .அந்த நட்சத்திர கூட்டத்தில் தங்களையும் மின்னுகிற நட்சத்திரமாக காண்கிறேன்

கருத்துகள்