படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

இன்னும் சில ஆண்டுகளில் முக அசைவுகளை வைத்து மூளை அசைவுகளைப் பதிவு செய்வதைப் போல எண்ணத்தைப் பதிவு செய்து விடலாம் என்று அறிஞர்கள் அறுதியிடுகிறார்கள்.ரே பேர்ட் விசல் என்பவர்மனித முகம் 2,50,000 முக பாவங்களை வெளிப்படுத்தும் ஆற்றல் உள்ளது என்று அறிந்தார் . பேசுவதை நிறுத்தி விடலாம்; ஆனால் உடலசைவு மொழி மூலம் தொடர்ந்து நாம் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறோம். ஒரே மாநிலத்தில் சொற்களின் பிரயோகம் வேறுபடுகிறது. அங்கங்கே தட்டாரமிடும் அதை ' வட்டார வழக்கு' என்று அழைக்கிறோம். ஆனால் உலகம் முழுவதும் பெரும்பான்மையான உணர்ச்சி வெளிப்பாடு ஒத்துப் போகிறது. உலகெங்கிலும் உள்ள ஆண்கள் சட்டை அணியும்போது வலது கை பாகத்தை தான் முதலில் நுழைக்கிறார்கள். பெண்களோ இடது கை பாகத்தில் தான் நுழைக்கிறார்கள். தவறு செய்தால் தலையில் தட்டிக் கொள்வது எல்லாக் கண்டங்களிலும் உண்டு. முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப. 216" .இந்த நாள் முகபாவனை மொழியைப் புரிந்து சிரிக்கும் இனிய நாளாக அமையட்டும்.

கருத்துகள்