படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

குன்றக்குடி அடிகளார்...!* குமரனுக்கும் தமிழ் தருவார்.. அவர் குன்றக்குடி பெரியார்! குலம்சாதி வேறுபாட்டை நிதம் எதிர்த்த பெரியார்! ஈரோட்டு பெரியாரே பாராட்டிய பெரியார்.. ஏற்றிவைத்த கொடியில் திருக்குறளை பதித்தார்! பட்டிமன்ற ம் வழக்காடு மன்றத்தின் நடுவர்.. பட்டி தொட்டியெல்லாம் தமிழ் வளர்த்த அறிஞர்! காரைக்குடி அருகினிலே குன்றக்குடி அடிகள்.. குன்றக்குடி குமரனருள் பெற்றிட்ட அடிகள்.. தெய்வசிகாமணி என்ற திருப்பெயரை ஏற்று.. தெய்வத்தமிழ் வளர்த்த குன்றக்குடி அடிகள்! செட்டிநாடு கண்டெடுத்த மாணிக்கம் அவரே.. பட்டிமன்ற மேடையிலே பைந்தமிழும் அவரே! சாமி சாமி சாமியென்று மக்களெல்லாம் போற்ற.. தேமதுர தமிழானார்.. குன்றக்குடி அடிகள்.! *வே.கல்யாணகுமார்.*

கருத்துகள்