முதல் நான்கு நிமிடங்கள் (The First Four Minutes) என்ற புத்தகத்தை எழுதிய பிரபல மனநல மருத்துவரான லியோனார்ட் ஜூனின் (Leonard Zunin) என்பவர் அந்தப் புத்தகத்தில் ஒரு வித்தியாசமான தகவலைப் பகிர்ந்திருக்கிறார்.
ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஆதிவாசி குடும்பங்களில் ஒன்றான பெம்பா குழுவினரிடம் (Bemba tribe) ஒரு வித்தியாசமான பழக்கம் இருந்தது.
அதாவது, அவர்கள் இனத்திலுள்ள யாராவது, எதாவது தவறு செய்தது தெரிந்துவிட்டால், அவர்கள் அவரை பழித்துப் பேசுவதில்லை. அவருக்கு தண்டனை வழங்குவதில்லை.
மாறாக, அந்தத் தவறு செய்தவரை ஊரின் மையப்பகுதிக்கு அழைத்துச் சென்று அமரச் செய்த பிறகு, அந்த ஊரில் வசிக்கும் ஒவ்வொருவரும் அவரிடம் வந்து, அந்த நபர் தங்களுக்கும், அந்த ஊருக்கும் செய்த ஒவ்வொரு நல்லதையும் அவரிடமே நினைவுபடுத்திப் பேசுவார்களாம்.
தேவைக்குத் தகுந்தாற் போல் ஒரு நாளோ இரண்டு நாளோ செய்யப்படும் இந்தச் செயல் குறித்து அந்த இனத்தவரின் நம்பிக்கை என்னவென்றால், "இயல்பில் ஒவ்வொரு மனிதனும் நல்லவன்தான். சமயங்களில் தன்னிலை மறந்து, தனது தேவைகள் காரணமாக அவன் ஏதேனும் தவறு செய்து விடலாம். அப்போது அதைச் சுட்டிக்காட்டுவதோடு நிற்காமல், அவன் செய்த நல்லவைகளையும் எடுத்துச் சொல்லும்போது, அவன் திருந்த நினைக்கிறான். உண்மையில், தவறு செய்தவன் அந்தக் குற்ற உணர்ச்சியிலிருந்து தப்பிக்கவே நினைக்கிறான். அவனுக்கு நாம் உதவுகிறோம். கூடவே, நமது மனதிலும் முன்பு அவன் நமக்குச் செய்த நல்லவைகளைப் பற்றிப் பேசும்போது, நாமும் அவன் மீது கோபப்படுவதற்கு பதிலாக கருணையை வளர்க்கிறோம்."
ஆஹா.. எவ்வளவு அருமையான வழிமுறை. தவறு செய்த ஒருவனுக்கு, அவன் தனது சொந்தத் தவறை உணரவைப்பதுடன்... அவனுக்குள் இருக்கும் நல்லவனை மீட்டு அவனுக்கே பரிசளிப்பதும், நமது மனதிலும் வெறுப்பை வளர்க்காமல் கருணையை வளர்ப்பதும் என்பது கேட்கவே எவ்வளவு அழகாய் இருக்கிறது.
இதற்கு என்ன காரணம் என்று விசாரித்தால், அந்த ஆப்பிரிக்க மக்கள் இதை உபுண்டு (UBUNTU) என்று சொல்கிறார்கள். UBUNTU என்ற சொல்லுக்கு "I AM BECAUSE WE ARE" அதாவது "நான் என்பது நானல்ல.. நாம்.!" என்று பொருளாகும்.
உண்மைதான்... ஒரு நல்ல சமுதாயம் உருவாக இதைவிட ஒரு நல்ல தத்துவம் இருக்க முடியுமா என்ன.?
- மொழியாக்கம்
#MinimeensStories
கருத்துகள்
கருத்துரையிடுக