ரதா வசனம் எமுத ஆரம்பித்த சமயத்தில் திரைபடத் துறையில் வசனகர்த்தா பஞ்சம் அதிகமாக இருந்தது. அப்போதெல்லாம் வசனம் எழுதுகிறவருக்கு
அதிகச் செல்வாக்கு உண்டு. பாட்டு எமுதுகிறவர்களை
யெல்லாம் வாத்தியார்! என்று அழைப்பார்களாம். அதோடு, பாட்டு எழுதுவது என்பது இரண்டாவது அம்சமாகத்தான் தயாரிப்பாளர்களுக்கு இருந்ததாம். ஒரு படத்துக்காக ஒரு பாட்டு எழுதினேன். அதிலே “தீ மீதினில் ஈ மொய்ப்பதுண்டோனு ஒரு வரி வரும். அதை எழுதினப்புறம்தான்.. எனக்கே தோன்றியது, நெருப்புக்கிட்டே ஈக்கு என்ன வேலைன்னு. சரின்னு அதுக்கு வேற எழுதி மாற்றுவதற்காக மறுநாள் தயாரிப்பாளர்கிட்டே பர்மிஷன் கேட்டேன். அவரும் சரின்னுட்டார். உடனே நான் அந்த வரியை நீல வானின் மீது நிழல் படிவதுண்டோன்னு மாத்தினேன் என்று கூறி, தானே ரசிக்கிறார் சுரதா.
இந்த ஒரு வரியில் உள்ள இலக்கிய நயத்தைப் பார்த்து ஈப்பன் என்கிற அந்தப் படத் தயாரிப்பாளர் அந்த இடத்திலேயே 500 ரூபாய் செக் ஒன்றைப் பரிசாகக் கொடுத்தாராம். இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி யாருக்கும் இதற்கு முன்னும் நடந்ததில்லை; பின்னும் நடந்ததில்லை என்கிறார் இவர்.
வெற்றிலை போடாமலே வாய் சிவந்த பச்சைப்பசும் Asian... என்ற ஒரு தொடரை மட்டும் கேட்ட மாத்திரத்திலேயே . தியாகராஜ பாகவதர் . இவரைத் தன்னுடைய “புதுவாழ்வு” படத்திற்குக் கதை, வசனம், உரையாடல் எழுதச் சொன்னாராம்!
நன்றி: விகடன்
கருத்துகள்
கருத்துரையிடுக