ூலின் பெயர்:- *கவிஞர் இரா. இரவியின் ஹைக்கூ உலகம்.* நூலாசிரியர்:- *கவிஞர் பொன். குமார்.* நூல் மதிப்புரை:- *கவிஞர் மா. கணேஷ்.*
நூலின் பெயர்:- *கவிஞர் இரா. இரவியின் ஹைக்கூ உலகம்.*
நூலாசிரியர்:- *கவிஞர் பொன். குமார்.*
நூல் மதிப்புரை:- *கவிஞர் மா. கணேஷ்.*
வெளியீடு வானதி பதிப்பகம் பக்கங்கள் 118. விலை 110.ரூபாய்.
23.தீன தயாளு தெரு .தியாகராயர் நகர் .சென்னை .17 தொலைபேசி044 24342810 / 24310769
ஹைக்கூ உலகம் மிகவும் சிறப்பு வாய்ந்த நூலாக அமைந்தது சிறப்பு. இந்நூலினை கவிஞர் பொன். குமார் அவர்கள் மிகவும் நேர்த்தியான முறையில் எழுதியுள்ளார். மேலும் நூலில் நுழையும் முன் தமிழ்த்தேனீ பேரா. முனைவர் இரா. மோகன் ஐயாவிற்கு காணிக்கையாக சமர்ப்பணம் செய்தது குருவிற்கு சீடர் செய்யும் நன்றி உணர்வை எடுத்து இயம்புகிறது. அடுத்தாக பொன்மன பொன். குமார் அவர்களைப் பற்றி ஆகச் சிறந்த வார்த்தைகளாலும் சொற்களாலும் அவரின் பெருமைகளை நன்றியோடு நயம்பட கூறியுள்ளார் கவிஞர் இரா. இரவி ஐயா. கவிஞரின் நூல்களின் அணிவகுப்பு அதனை தொடர்ந்து உள்ளே செல்கிறது. கவிஞர் பொன். குமார் ஐயா அவர்கள் ஆகச் சிறந்த விமர்சகர் என்பதில் இம்மியும் குறைவின்றி நிறைவாக கவிஞரின் பல்வேறு நூல்களை படித்து உணர்ந்து உள்வாங்கி அசைப்போட்டு எழுதி உள்ளார் மனதில் உள்ளதை உள்ளபடி. நிறைகளை நிறைவாகவும் . குறைகளை குறைவாகவும் குத்திக் காட்டாமல் சுட்டிக் காட்டிய விதம் நனிநன்று. கவிஞரின் ஒவ்வொரு நூலையும் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து ஒரு முனைவர் பட்டத்திற்கு தேவையான ஆய்வேடு போன்று அருமையாக அமைத்துள்ளார் அவனியில் அவரைவிட சிறந்த விமர்சகர் இல்லை என்பதினை நிரூபித்துள்ளார். நூலின் இறுதி பகுதியில் கவிஞர் பற்றி இடையறாது தொடரும் இலக்கியப் பயணம் என்று கவிஞரிடம் பேட்டி கண்டு எழுதியது மிகவும் சிறப்பாக உள்ளது. மேலும் கவிஞர் பொன். குமார் ஐயாவின் தொகுப்பு நூல்கள் தொடர்கதையாக தொடர்வது மெய்சிலிக்க வைத்தது. கவிஞர் ஆற்றிய தமிழ்த் தொண்டும் பெற்ற விருதுகளும் மேலும் வியப்படையச் செய்தது. மேலும் இன்னும் பல்வேறு விருதுகளை பெற வாழ்த்துகள்..
உலகின் உயர்ந்த
உன்னத உயர்நூல்
*ஹைக்கூ உலகம்..!*
அவனியின் ஏழாவது
அதியசமானது
*ஹைக்கூ உலகம்..!*
பார் போற்றும்
படைப்பானது
*ஹைக்கூ உலகம்..!*
தரணியின்
தலைச் சிறந்து
*ஹைக்கூ உலகம்...!*
அகிலத்தின்
அற்புதமானது
*ஹைக்கூ உலகம்..!*
மேதினியில்
மேன்மையானது
*ஹைக்கூ உலகம்..!*
குவலயத்தின்
குன்றாய் உயர்ந்தது
*ஹைக்கூ உலகம்..!*
ஹைக்கூ உலகம் உலகை அறியச் செய்யும் அறிவுப் பெட்டகம்......
வாழ்த்துகள்....
நன்றி.
*கவிஞர் மா. கணேஷ்,*
*கொன்னையூர்.*
கருத்துகள்
கருத்துரையிடுக