இயக்குனர் ,நடிகர் ராஜ்கிரண் வாழ்த்து
ஈஷ்வர், அல்லாஹ் தேரே நாம்
சப்கோ ஷண்மதி தே பக்வான்..
இதன் பொருள் -
ஈஷ்வரா என்று அழைத்தாலும்,
அல்லாஹ் என்று அழைத்தாலும்,
பகவானே என்று அழைத்தாலும்,
பரமபிதா என்று அழைத்தாலும்,
எல்லாமும் உன் திருநாமங்களே.
உலக மாந்தர் அனைவரின் உள்ளங்களிலும் அமைதியையும்,
அதன் மூலமான
உள்ளக்குளிர்ச்சியையும்
தந்தருள்வாய் இறைவா,
என்பதாகும்.
படைத்தவனுக்கு பயந்து,
படைப்புக்களை நேசித்து,
தர்மங்களைப்பேணி,
நற்கருமங்களைச்செய்து,
பேதங்கள் அகற்றி,
சமத்துவத்தைப்போற்றி,
மனிதம் தழைக்க,
மனித நேயம் பொங்கிப்பிரவகிக்க,
அன்பும், கருணையும், ஈகையும், "தியாகமுமாய்"
வாழும் வாழ்க்கை தான்,
பகுத்தறிவு பெற்ற மனித வாழ்க்கை.
எல்லா மத வேதங்களும்
இதைத்தான் போதிக்கின்றன...
இறைவனின் இறுதி தூதுவர்
"நபிகள் நாயகம்" அவர்களும்
இதைத்தான் வலியுறுத்தினார்.
இந்த சத்தியத்தை எடுத்துரைக்கையில்,
அவர் சந்தித்த
சோதனைகளும், வேதனைகளும்,
தாங்கிக்கொள்ள முடியாதவை.
அத்தனையையும் தாங்கும்
சக்தியை அவருக்குக்கொடுத்தது,
அவர் இறைவன் மீது வைத்திருந்த
இணையற்ற நம்பிக்கை.
"பொறுமையைவிடச்சிறந்த பொக்கிஷம்
உலகில் வேறெதுவும் இல்லை"
என்பது அவரின் வாக்கு.
"அதுவே அவர் வாழ்ந்த வாழ்க்கை"...
அனைவருக்கும்
என் மனம் கனிந்த,
"தியாகத்திருநாள்"
நல்வாழ்த்துகள்.
வாழ்க வாழ்க.
கருத்துகள்
கருத்துரையிடுக