படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

இனிய காலை வணக்கம் ." புறநானூற்றில் வஞ்சப்புகழ்ச்சி இடம் பெற்ற பாடல் ஒன்று உண்டு. தொண்டைமான், அதியமான் என்கிற இருவரிடையே போர் மூளவிருக்கிறது. அதைத் தடுக்கத் தூதுவந்த ஒளவை, தொண்டைமானின் படைக்கருவிகளைப் பார்த்து 'இவை புத்தம் புதிதாக இருக்கின்றன. ஆனால் அதியனின் கருவிகளோ ஓயாமல் போரில் ஈடுபட்டு நுனி மழுங்கி கூர் முரிந்து கிடக்கின்றன' என்று சொல்லி அதியன் வீரன் என்பதை உணர்த்திப் போரை நிறுத்தியதாக அந்தப் பாடல் மூலம் தெரிகிறது. புகழ்வதைப் போல இகழ்ந்தாலும் , அதிலிருக்கும் சூட்சமத்தை எல்லோராலும் உள்வாங்கிக் கொள்ள முடிவதில்லை. சிலர் அதையே புகழ்ச்சி என்று எண்ணி ஏமாறுவதும் உண்டு. தன்முனைப்பு அதிகம் இருப்பவர்கள் கோமாளியாக இருப்பதையே பெருமையாக்க் கருதிக் கொள்வார்கள். அப்படிப்பட்டவர்கள் எந்தக் கட்டத்திலும் தங்களை மாற்றிக் கொள்ள முடியாது." முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப. 198" .இந்த நாள் உண்மையான பாராட்டுகளால் உள்ளம் மகிழும் இனிய நாளாக அமையட்டும்.

கருத்துகள்