இனிய காலை வணக்கம் ." உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் கோபம் அடைவது அழகாக இருக்க முடியாது. மகத்தான மனிதர்களின் இலக்கணம் அமைதி காப்பதும், சஞ்சலப்படாமல் நடந்து கொள்வதும் தான். கோபப்பட்டால் பல பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியாமல் இன்னும் அதிகம் சிக்கலை ஏற்படுத்தி விடும் .அதனால் முடிந்த அளவிற்குக் கோபம் வராமல் பார்த்துக் கொள்வதும், கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வதும் அவசியம். கோபமாக இருக்கிறபோது எந்த முடிவையும் எடுக்கக் கூடாது .கோபத்தை ஒத்திப் போட்டால் நாம் எதற்காக்க் கோபப்படுகிறோமோ அது தேவையில்லாத நிகழ்வு என்பதை அறிந்து கொள்ள முடியும்.
கோபமும் அவசரமும் உன்னதமான தகவல்களையும் தவறாகப் புரிந்து கொள்ளச் செய்யும்...
முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப. 184" .இந்த நாள் நிதானத்தால் களிப்புறும் இனிய நாளாக அமையட்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக