படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

மாவீரன் அலெக்ஸாண்டர் நினைவு தினம்..,* வீரமும் விவேகமும் சம அளவில் அலெக்ஸாண்டரிடம் இருந்ததால் தான் அவருக்கு அந்த வானமும் வசப்பட்டது. இந்த உலகமே தனக்கு போதாது என்றவனுக்கு ஆறடி நிலமே போதுமானதாக இருந்தது என்று அலெக்ஸாண்டரை வருணிக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து. அலெக்ஸாண்டர் பேராசைக்காரன் என்ற பொருளை அந்த வரிகள் தந்தாலும், நாம் அந்த மாவீரனின் மறுபக்கத்தையும் பார்க்க வேண்டும். அவர் ஒட்டுமொத்த உலகையும் வெல்ல நினைத்தது உண்மைதான். ஆனால் வெற்றிகள் பல குவிந்தபோதும் அலெக்ஸாண்டர் அகம்பாவமோ ஆணவமோ கொள்ளவில்லை. மாறாக தான் கைப்பற்றிய தேசங்களையும், மன்னர்களையும், வீரர்களையும் கண்ணியமாக நடத்தினார் என்று தான் வரலாறு கூறுகிறது. உலக சரித்திரத்தில் அலெக்ஸாண்டரைப் போல் வேறு ஒரு மாவீரன் கிடையாது என்பதால் தான் அவரை அலெக்ஸாண்டர் தி கிரெட் என்று நினைவில் வைத்திருக்கிறது வரலாறு. அப்படிப்பட்ட மாவீரனுக்கு வீரம் பலத்தை தந்தது, விவேகம் புகழை தந்தது. அலெக்ஸாண்டர் இந்த உலகத்தை வெல்ல கிளம்பிய கிரேக்க பேரரசர். ஆனால் அவர் பயணம் இந்தியாவோடு நின்றுவிட்டது. அவர் திரும்ப நாடு செல்லும் வழியில் நோய்வாய்ப்பட்டு இறந்தார்.பெரும் செல்வங்களை ஈட்டிய அலெக்ஸாண்டர் தன் கடைசி ஆசையாக மூன்று கூறினார் : * எனக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் என் சடலத்தை தொடர்ந்து, அதன் பின் வரவேண்டும். * அடுத்து நான் ஈட்டிய அத்தனை செல்வங்களும் காட்சிப்பொருளாக தொடரவேண்டும். * என்னுடைய இரண்டு வெறும் கைகள், சவப்பெட்டிக்கு வெளியே தெரிய வேண்டும். அவர் இறுதி ஊர்வலத்தில் இந்த மூன்று ஆசைகளையும் பூர்த்தி செய்யப்பட்டன. அதற்கான காரணங்கள் இதுவாக தான் இருக்க முடியும். * மருத்துவர்கள் உடலை மட்டுமே குணப்படுத்த முடியும் ஆனால் உயிரைக் கட்டிக் காக்க முடியாது. * ஒருவன் சேர்த்த பெரும் செல்வங்களை அவனால் இறுதிவரை காக்க முடியாது. * இந்த உலகை விட்டு செல்லும் போது வெறும் கையோடு தான் செல்ல வேண்டும். ..., இந்த மூன்று தத்துவங்களை எடுத்து உரைக்க தான், அவருடைய இறுதி வேண்டுகோள் இருந்திருக்க வேண்டும். இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

கருத்துகள்