படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

இவ்வளவுதான் வாழ்க்கை.... Cast Away திரைப்படத்தில், டொம் ஹாங்ஸும் அவரது சகாக்களும் சென்ற விமானம் எதிர்பாராத விதமாக கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகிறது. தனது சகாக்கள் அனைவரும் விபத்தில் இறந்து போக, டொம் ஹாங்கஸ் மாத்திரம் அதிஷ்டவசமாக உயிர் தப்புகிறார். கடல் அவரை மனித நடமாட்டம் எதுவுமே இல்லாத ஒரு தொலைதூர தீவில் கொண்டு வந்து கரை ஒதுக்குகிறது. ஆம்... யாருமில்லாத தீவு.... வாழ்வதா...? அல்லது சாவுக்கு சரணடைவதா? என்ற மனப் போராட்டம் ஹாங்கிஸிடம் ஆரம்பிக்கிறது. சாவுக்கு சரணடைய மறுக்கிறார். தன் மனைவி, பிள்ளைகள் நண்பர்கள் மற்றும் தான் வாழ்ந்த உலகம் மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவரிடம் பிறக்கிறது. உயிர் வாழ வேண்டுமென்ற உள்ளுணர்வு ஏற்படுகிறது. ஆனால் மனித நடமாட்டம் அற்ற தீவில் எப்படி உயிர் பிழைத்து வாழ்வது...? மரங்களில் ஏறி இருந்த கனிகளை சாப்பிடுகிறார். கடலில் இறங்கி கிடைத்த மீன்களை பிடித்து பசியை போக்குகிறார். தன் பார்ஸிஸ் இருந்த மனைவி, பிள்ளை குட்டிகளின் படத்தை எடுத்து அவ்வப்போது பார்த்துக்கொள்கிறார். ஒரு கைப்பந்தில் ஒரு முகத்தை வரைந்து அதற்கு "வில்ஷன்" என்று பெயரிட்டு அதனை தனது உற்ற நண்பனாக்கி, அவருடன் பேசி மகிழ்கிறார். அங்கே மலை உச்சியில் ஏறி ஒரு கொடியை நாட்டுகிறார். நெருப்பை மூட்டிப் பார்க்கிறார் வருகின்ற, போகின்ற கப்ல்கள் அவரை அடையாளம் கண்டு, அவரை காக்க வரும் என்று நம்புகிறார். நாட்கள் உருண்டோடுகின்றன. இப்படியே அங்கே சில வருடங்களைக் கழிக்கிறார். ஆனாலும் நம்பிக்கை இழக்க வில்லை. அன்பு மனைவி, பாசமான பிள்ளைகள் உயிர் நண்பர்கள் மறு பக்கத்தில் தனக்காக இருப்பார்கள் என்ற நம்பிக்கை அவரை உற்சாகப் படுத்துகிறது. இந்த நம்பிக்கை அவரை உயிர் வாழ ஊக்குவிக்கிறது. கடைசியாக பல நாள் பாடுபட்டு மரக்கட்டைகளால் ஒரு படகு செய்கிறார். அதில் ஏறி நம்பிக்கையோடு கடலில் குதிக்கிறார். கடல் அலைகள் தரும் மரண பயத்தை மீறிப் பயணிக்கிறார். பிறகு அதிஷ்டவசமாக வந்த ஒரு கப்பல் அவரை இனங்கண்டு பாதுகாத்து மீட்கிறது. மட்டற்ற மகிழ்ச்சியுடன் தான் வாழ்ந்த உலகம் நோக்கிச் செல்கிறார். ஆனால் அங்கே அவருக்கு ஏமாற்றம் காத்திருந்தது. அவரது அன்பு மனைவி கொஞ்ச காலம் அழுது விட்டு, அவர் இறந்ததாக நினைத்து மறு மணம் செய்துகொண்டிருப்பதைக் காண்கிறார். அவரது பிள்ளைளும், நண்பர்களும் அவர் இறந்ததாக நினைத்து சில நாட்கள் துக்கம் அனுஷ்டித்துவிட்டு, மறந்து வாழ்வதைப் பார்க்கிறார். யாரும் அவரை அங்கே தேடிக்கொண்டோ, நினைத்துக்கோண்டோ இருக்கவில்லை. உலகம் அதன் பாட்டில் ஆரவாரமின்றி ஓடிக்கொண்டிருப்தைக் காண்கிறார். ◼ நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்! நீங்கள் பல்லாண்டுகளாக படும் கஷ்டங்கள் இன்னல்கள்.பலவற்றக்கும், இவ்வளவு பாடுபடத் தேவையில்லை என்பதை ஒரு நாள் தெரிந்து கொள்வீர்கள் ◼ நீங்கள் உலகை விட்டும் மறைந்த பிறகு உங்கள் முயற்சிகள் பலவற்றுக்கு மதிப்போ மரியாதையோ இருக்காது. ◼ முதலில் நீங்கள் உங்களுக்காகவும், உங்கள் ஆத்தும நலனுக்காகவும் வாழப் பழகுங்கள். ◼ நீங்கள் மறைந்த பிறகு இந்த உலகம் உங்களுக்காக அதன் ஓட்டத்தை நிறுத்தாது.

கருத்துகள்