இனிய காலை வணக்கம் ." ஒரு தகவல் கேட்கப்படும் போது அதில் இரண்டு பொருட்கள் இருக்கின்றன என்பதை உணர வேண்டும். மேம்போக்கான ஒரு பொருள், ஆழமான ஒரு பொருள். மேம்போக்கான பொருள் ,ஆழமான பொருளுக்கு மாறுபட்டதாக மட்டுமில்லாமல் எதிரானதாக இருக்கலாம். எனவே வரிகளுக்கு இடையில் வாசிப்பது அவசியம். குரலின் ஏற்ற இறக்கம், முக பாவனை, உடல் மொழி ,உச்சரிப்பில் உள்ள இடைவெளி போன்ற அனைத்தையும் ஒருங்கே நோக்கி விட்டு நாம் தகவலைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் செய்தியை அனுப்பியவர் சொல்லுவதும், நாம் புரிந்து கொள்வதும் வெவ்வேறாக இல்லாமல் தகவல் முற்றுப் பெறும்."
முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப. 198" .இந்த நாள் உணர்ந்து, புரிந்து மகிழ்ச்சி அடையும் இனிய நாளாக அமையட்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக