கலைத்தந்தை என்று போற்றப்பட்ட கருமுத்து தியாகராஜன் செட்டியார் 1893ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தார்.
*இன்றைய நாளில் பிறந்தவர்.*
(16-ஜூன்)
*கருமுத்து தியாகராஜன்.*
🌟 கலைத்தந்தை என்று போற்றப்பட்ட கருமுத்து தியாகராஜன் செட்டியார் 1893ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தார்.
🌟 இவர் இலங்கையில் கொழும்பு புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்றார். இலங்கையின் மலையக தோட்டத் தொழிலாளர் நலன்களுக்காக அங்கு பத்திரிக்கை ஒன்றையும் தொடங்கி நடத்தினார்.
🌟 இந்தியா திரும்பிய தியாகராஜன் மதுரையில் மீனாட்சி மில் என்ற தொழில் நிறுவனத்தை நிறுவினார். நூல் ஆலையும், நெசவு ஆலையும் அமைத்தார். தொடர்ந்து பல ஊர்களில் நூற்பு ஆலைகளை நிறுவினார்.
🌟 இவர் தமிழ்மீது தனி ஆர்வம் காட்டி வந்தார். இளம்வயதிலேயே புத்தகம் படிப்பதிலும் தமிழ் இலக்கண, இலக்கியங்களிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். இதன் காரணமாக தூய தமிழில் தமிழ்நாடு என்னும் நாளிதழை பல ஆண்டுகள் நடத்தி வந்தார்.
🌟 கலைத்தந்தை, வள்ளல், தொழில் மேதை என்றெல்லாம் போற்றப்பட்டவரான கருமுத்து தியாகராஜன் செட்டியார் 1974ஆம் ஆண்டு மறைந்தார்.
கருத்துகள்
கருத்துரையிடுக