*திரும்பிப்பார்க்கிறேன்* நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! *நூல் மதிப்புரை* கவிதாயினி குமாரி லெட்சுமி .மதுரை.
*திரும்பிப்பார்க்கிறேன்* நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
*நூல் மதிப்புரை* கவிதாயினி குமாரி லெட்சுமி .மதுரை.
வானதி வெளியீடு.தீன தயாளு தெரு ,தியாகராயர் நகர் .சென்னை .600017
தொலைபேசி எண்கள் 044- 24342810 - 24310769.
78 பக்கங்கள். ரூ.70/-
மூன்றடி கவிதையின் முடிசூடா மன்னன்
எம் போன்ற
கவிஞர்களை கண்டெடுத்து அரங்கேற்றிய
கவி கொலம்பஸ்.
மதுரை மண்ணின் பிரத்தியேக அடையாளம்
கல்லூரி வாசலே பார்க்காமல்
கல்லூரிக்கு நூல்கள் படிக்கத் தந்த
தமிழ் நுட்ப மேலாளர்
அடுத்தவரை
பாராட்ட
வள்ளல் வார்த்தைகள் கொண்டு
அர்ச்சிக்க தெரிந்த வஞ்சகம் இல்லாத நேர்முக சிந்தனை வாதி
என பல்வேறு சிறப்புகளுக்கும் சொந்தக்காரர் கவிஞர் ஹைக்கூ திலகம்
திரு இரவி அவர்கள் திரும்பிப் பார்க்கிறேன் என்னும் இந்நூலினை படைத்து இருக்கிறார்.
இது இவருடைய 33வது நூல்.
தனது சுற்றுலாத் துறை பணி காலத்தில் நடந்த சுவையான சம்பவங்கள்,, தான் சந்தித்த இனிமை மிகு மனிதர்களை குறித்து இந் நூலில் நாம் அறிய தந்திருக்கிறார்.
சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் இருந்த பணியாளர்களை துறையோடு இணைத்து நிரந்தர பணியாளர்களாக மாற்றிய மாண்புமிகு புரட்சித் தலைவர்
அவர்களை நன்றியோடு நினைவு கூர்ந்து தன் அனுபவங்களை இந் நூலில் தொடர்ந்து உள்ளார்.
இவர் தம் அனுபவங்கள், மனிதர்களின் நட்பு வட்டம், இவற்றிற்கெல்லாம் ஆன மைய புள்ளி இவர் சார்ந்த துறையாக இருந்திருப்பதை இவர் எழுத்துக்கள் நன்றாக நமக்கு உணர்த்துகிறது.
இந்த நூலின் அடிப்படை நோக்கமே உதவி உதவுதல் இதுதான். இதனால் ஏற்படும் ஆனந்தம் அலாதியானது. பொதுவாக நம் கவிஞர் ஏதாவது ஒரு படிப்பினையை தன் எழுத்துக்கள் மூலம் விதைப்பதில் மிகவும் கை தேர்ந்தவர்.
அடிப்படையாகவே யாரைப் பார்த்தாலும் அன்போடும் நட்போடும் பழக தன் மனச் சிறகை விரித்து காத்திருப்பவர். இச்சிறந்த குணமே இவரது நட்பு வட்டம் மற்றும் தொடர்புகளுக்கு எல்லாம் சாத்தியமாக அமைந்துள்ளது.
பெருமதிப்பிற்குரிய கலாம் ஐயா அவர்கள் குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட
போது எல்லோரும் தான் பார்த்துக் கொண்டிருந்தோம் ரவி ஐயாவிற்கு மாத்திரம் அவரை வாழ்த்தி, வாழ்த்து மடல் கவிதை எழுத எப்படி தோன்றியது?
மதிப்பிற்குரிய இறையன்பு ஐயா அவர்கள் நூல்கள் வெளியீட்டு விழாவிற்கு கலாம் ஐயா வருகிறேன் என்றதும் இவர் மதிப்பிற்குரிய இறையன்பு அவர்களின் நூல்கள் அனைத்தையும் என். சி பி எச் மேலாளர் அவர்களிடம் மொத்தமாக பெற்று ஒரே நாளில் கலாம் ஐயா அவர்களின் இல்லத்திற்கு புது டெல்லி க்கு அனுப்பி வைத்தல் என்பது எப்படி சாத்தியமாயிற்று? இவரது , பிறருக்கு உதவிடும் நோக்கமும், பொதுநல சிந்தனையுமே இதற்கெல்லாம் காரணமாய் அமைந்தது. இறையன்பு அய்யாவிடம் புலிப்பால் ரவி என பட்டம் பெற்றது இதனால்தான். இப்படி சுவாரஸ்யமாக பல செய்திகளை இந்த நூலில் நமக்கு அறிமுகம் செய்திருக்கிறார். கவிஞர் ரவி
தன்னை பகுத்தறிவு பாதைக்கு மடைமாற்றம் செய்து வைத்த மணியம்மை பள்ளியின் தாளாளர்
தொடங்கி அம்மா நிர்மலா மோகன் அவர்கள் முதல் தம்பி கவிக்குயில் கணேசன், கலாம் சுப்பிரமணியன் என அவரது நட்பு வட்டம் நீண்டு கொண்டே போகிறது ...விமானம்
யாருக்காகவாவது காத்திருக்குமா?
கலைஞர் நூலகத்தில் உணவகம் திறந்தது எப்படி? மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வாகன காப்பகம் மீண்டும் தொடங்கியது
எங்ஙனம்? இப்படி பல சுவராசியமான கேள்விகளுக்கும் பதில் தெரிய இந்த நூலினை அவசியம் நாம் படித்து தெரிய வேண்டும்.... உலக நாயகனை தொலைபேசியில் இவருக்கு அறிமுகப்படுத்தி வைத்த பிரபலம் யார்? என்ன பேசினார் கமலஹாசன்?....
ஆசிரியர் சாலமன் பாப்பையா ஐயாவின் மனிதநேய பண்பு இவற்றையெல்லாம் நமக்கு விரிவாக விளக்கி சொல்லி இருக்கும் கவிஞர் திரு ரவி அவர்களுடன்
நமது முன்னாள் தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அவர்கள் தொலைபேசியில் அழைத்து என்ன பேசினார்கள் ஏன் பேசினார்கள். கலைஞர் தொலைக்காட்சியில் ரமேஷ் பிரபா அவர்கள் இவரோடு சேர்த்து இன்னும் 50 பிரபலங்களுக்கு எப்படி கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு வாய்ப்பு கொடுத்தார் இப்படி பல அரிய சுவையான செய்திகளையும்
நமக்கு சிறப்பாக தந்திருக்கும் இந்த திரும்பிப் பார்க்கிறேன் என்ற நூல் கவிஞர் திரு ரவி அவர்களின் கலைப்பயணத்தில் இன்னும் ஒரு மைல்கல்..
*நேர்மறை சிந்தனை* *+* *மனிதநேயம்* *=* *கவிஞர் இராஇரவி* என்பதை இந்த நூல் மெய்ப்பித்
திருக்கிறது.
திரும்பிப்
பார்க்கிறேன் என்ற இந்த நூல் மூலம் தன்னை பலரும் திரும்பி பார்க்க செய்திருக்கிறார் கவிஞர் என்பதில்
சிறிதும் ஐயம் இல்லை.
.
கருத்துகள்
கருத்துரையிடுக