அண்டைமொழிகள் அழிந்தது ஏன்? கவிஞர் இரா. இரவி

அண்டைமொழிகள் அழிந்தது ஏன்? கவிஞர் இரா. இரவி ***** கர்னாடகத்தில் இந்தி மொழியை ஏற்றதனால் கன்னட மொழி அழிந்ததாக அறிவிக்கின்றனர் ! வடமாநிலங்களில் இந்தியை ஏற்றதனால் அவர்களின் தாய்மொழியை மறந்தனர் ! மும்மொழியை ஏற்றிட்ட மாநிலங்களில் தம்மொழி அழிந்ததாக புலம்புகின்றனர் ! இருமொழிக் கொள்கையே என்றும் நன்று தாய்மொழி தமிழும் உலகமொழி ஆங்கிலமும் போதும் ! இலக்கணம் இலக்கியம் நிறைந்திட்ட மொழி இனிய தமிழ் மொழி இருக்கையில் ! மந்தி மொழியான இந்திமொழி எமக்கு எதற்கு? இந்தியை அன்றும் இன்றும் என்றும் எதிர்ப்போம் ! மொழிக்காக உயிர் நீத்த வரலாறு தமிழருக்கு உண்டு மொழியை உயிருக்கு மேலாக மதிப்பவன் தமிழன் ! ஒண்டவந்த பிடாரி ஊர்பிடாரியை விரட்டிய கதையாக ஒண்டவரும் இந்தியை என்றும் எதிர்ப்போம் ! தமிழகத்தில் இருமொழிக் கொள்கை என்றும் தொடரும் இந்தியை கட்டாயமாக்க துடிப்பதை நிறுத்துக! கல்வி நிதியை வழங்காமல் இருப்பது கொடுமை கல்வியில் சிறந்த தமிழ்நாட்டுக்கு அநீதி ஏன்? மாநில சுயாட்சிக்கு மரியாதை தருங்கள் ஒன்றிய அரசு தமிழக அரசை ஒன்றிட வேண்டும் ! அண்டை மாநிலங்களில் அழிந்ததைக் கூறினோம் அன்னைத் தமிழை அழிந்திட விடவே மாட்டோம் ! •••••

கருத்துகள்