Ramadevi Rathinasamy
மூணாறு...கடல் மட்டத்திலிருந்து 1800 மீட்டர் உயரத்தில் தென்னகத்து காஷ்மீர் என்ற செல்லப்பெயருடன் தென்னிந்தியாவின் மூன்றாவது மலைவாழிடமாக சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கிறது. தேயிலை...தேயிலை...தேயிலை....எங்கெங்கும் தேயிலைத் தோட்டங்கள் மனதை மயக்குகிறது. நயமக்காடு, நல்லதண்ணி, குண்டலை ஆகிய மூன்று ஆறுகள் கூடுமிடம் என்பது மூணாறுக்கான பெயர்க் காரணம். வளைந்து நெளிந்து செல்லும் பாதைகள் பயணத்திற்கு மேலும் கிக் சேர்க்கிறது.
வருடத்திற்கு எத்தனை முறை சென்றாலும் 'வா வா' வென மேலும் மேலும் ஆசையூட்டி ஈர்க்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் மீதான காதல் மட்டும் ஏனோ குறைவதில்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக