மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கை வண்ணம். இரா.இரவி

அனைவருக்கும் வணக்கம்! கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் “முத்தமிழ் முற்றம்” நிகழ்ச்சியாக "26.05.2025" மாலை 5.00 மணிக்கு தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் "சிலம்பு போற்றும் அறம் " என்ற தலைப்பில் முனைவர். சங்கீத் ராதா உதவிப் பேராசிரியை, தியாகராசர் கல்லூரி அவர்கள், அறத்தை இயற்கை அறம், இல்லறம், பெண்ணறம், சொல்லறம் என்று நால்வகையாகப் பிரித்து இயற்கை அறத்துடன் தொடக்கத்தையும் இல்லறம் மற்றும் பெண்ணறம் ஒன்றோடு ஒன்று எவ்வாறு தொடர்புடையது என்பதைப் பற்றியும், சொல்லறம் சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் பாத்திரத்தின் முக்கியத்துவத்தை அதிகமாக்கி கதைக்கு ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது என்றும் வள்ளுவம் தந்த குறளோடு ஒப்பிட்டு வாசகர்களுடன் மிக உற்சாகமாக கலந்துரையாடலுடன் சிறப்புரையாற்றினார். கலந்துகொண்ட வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.

கருத்துகள்