*லெனின் பிறந்த நாளில்..,*
இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான மற்றும் செல்வாக்குமிக்க தலைவர்களில் ஒருவராக இருக்கிறார்.
அவரது அரசியல் கருத்துக்கள் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு ரஷ்ய அரசியலை வடிவமைக்க உதவியது.
இன்றுவரை ரஷ்ய வரலாற்றின் ஒருங்கிணைந்த பகுதியாக தொடர்ந்து உள்ளது. ரஷ்ய புரட்சி எழுத்து புரட்சியாகும். மக்களின் மனநிலையில் மாற்றம் கொண்டுவர முழுக்க முழுக்க எழுத்தாலேயே அந்நாட்டு மக்களுக்கு எடுத்து சொல்லப்பட்டது.
புரட்சிக்கர எழுத்துக்களுக்கு சொந்தக்கார எழுத்தாளர் யார் என்றே தெரியாமல் மக்கள் அவரது எழுத்துக்களை பின்பற்ற ஆரம்பித்தனர். விடுதலை வேட்கை விண்ணை முட்டியது. அந்த நேரத்தில் ரஷ்ய அரசாங்கம் பல புரட்சிகர பத்திரிக்கைகளை தடைசெய்தது. சந்தேகம் உள்ள எழுத்தாளர்களை நாடுகடத்தியது. கொன்று குவித்தது. அப்படி நாடு கடத்தப்பட்ட எழுத்தாளர்களுள் ஒருவர் லெனின். நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட லெனின், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்த கம்யூனிஸ்ட்களின் உதவியால் இஸ்க்ரா என்ற பத்திரிகையை தொடங்கினார்.
இஸ்க்ரா என்றால் தீப்பொறி என்று அர்த்தம். ஜெர்மனியில் பிரசுரிக்கப்பட்டு ரகசியமாக ரஷியாவிற்குள் கொண்டு செல்லப்பட்டு பிரபலமானது. இறுதியில் லெனின் யாரென்று அறியப்படும் நாளன்று குள்ளமாக, வழுக்கை
விழுந்த ஒரு மனிதன் மேடையேறினார். மக்கள் சில நிமிட மௌனத்திற்கு பிறகு அவரைக் கொண்டாடி தீர்த்தனர். கம்யூனிசம் ரஷியாவில் மலர்ந்தது.லெனின் இரக்கமற்றவராக இருந்தாலும் அவர் நடைமுறைவாதியாகவும் இருந்தார். ரஷ்ய பொருளாதாரத்தை ஒரு சோசலிச மாதிரியாக மாற்றுவதற்கான அவரது முயற்சிகள் ஸ்தம்பித்தபோது, பல புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தினார், அங்கு தனியார் நிறுவனங்களின் அளவு மீண்டும் அனுமதிக்கப்பட்டது, இது அவரது மரணத்திற்குப் பிறகு பல ஆண்டுகள் தொடர்ந்தது.
1918 இல், லெனின் ஒரு படுகொலை முயற்சியில் இருந்து நூலிழையில் தப்பினார், ஆனால் பலத்த காயமடைந்து உடல் நலம் பாதிக்கப்பட்டது. 1922 இல் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது, அதில் இருந்து அவர் முழுமையாக குணமடையவில்லை. அவரது வீழ்ச்சியடைந்த ஆண்டுகளில், ஆட்சியின் அதிகாரத்துவமயமாக்கல் பற்றி கவலைப்பட்டார், ஜோசப் ஸ்டாலினின் அதிகரித்து வரும் அதிகாரம் குறித்தும் கவலை தெரிவித்தார்.
தொடக்க காலத்தில் லெனின், ஸ்டாலினை ஆதரித்ததாகவும் பின்னர் ஸ்டாலினின் சர்வாதிகாரத்தனத்தை அவர் விமர்சித்தும் வந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து ஸ்டாலினை நீக்கவும் லெனின் முடிவு செய்திருந்ததாகவும் கூறுகிறார்கள்.
இதனால் அதிருப்தி அடைந்த ஸ்டாலின், விஷத்தைக் கொடுத்து லெனினை கொலை செய்ததாகவும், எப்பொழுதும் தமது எதிரிகளை ஒழித்துக் கட்ட ஸ்டாலின் விஷத்தைத்தான் கையிலெடுப்பார் என்றும் சொல்லப்பட்டது. போராளிகள் இறப்பு எப்போதும் பூடகம் நிறைந்தவைகளாகவே இருந்திருக்கின்றன. புரட்சியாளர்களுக்கு எப்பொழுதும் சகாக்களே சங்கடம் தந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதே நிதர்சனம்.
இங்கிலாந்திலிருந்து
சங்கர் 🎋
கருத்துகள்
கருத்துரையிடுக