உரைகல்லின் உரைக்கோவை
============================
லியொனார்டோ டாவின்சி
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
**பிறந்த தினம் ஏப்ரல் 15, 1452
**நினைவு தினம் மே 2, 1519
**உலக புகழ் பெற்ற ஓவியர்.
**லியொனார்டோ டா வின்சி அடிப்படையாக ஒரு ஒவியர்.
**இவருடய "மோனா லிசா" (Mona Lisa) ஒவியம் உலகில் மிகவும் புகழ் பெற்ற ஓவியம்.
**இன்றுவரை தன் மந்திரப் புன்னகையால் உலகையே மயக்கிக் கொண்டிருக்கும் மோனலிசா ஓவியம் வரைந்தவர்.
லியொனார்டோ டா வின்சென்ட்
1452-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி இத்தாலியிலுள்ள வின்சி என்ற இடத்தில் பிறந்தார்.பெற்றோர் செர் பியரோ டா வின்சி- கத்தரீனா.
இவர் தந்தையார் ஒரு நில உரிமையாளர் தாய் ஒரு விவசாயிகள் குடும்பப் பெண். டாவின்சியின் அப்பாவும் அம்மாவும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தனர். இதனால் தாயின் அன்பும் அரவணைப்பும் இல்லாமல் தந்தையுடன் வளர்ந்து வந்தார் டாவின்சி.
சிறு வயதிலேயே வரைவதிலும் மாதிரி வடிவங்களை உருவாக்குவதிலும் ஆர்வம் காட்டினார் டாவின்சி.மகனுக்கு ஓவியத்தில் இருக்கும் ஆர்வத்தைக் கண்ட தந்தை வெர்ரோச்சியோ என்பவர் நடத்தி வந்த ஓவியக்கூடத்தில் டாவின்சியை சேர்த்தார்.
ஓவியக்கூடத்தில் சேர்ந்த டாவின்சி ஓவியம் மட்டுமில்லாமல் சிற்பம் இசை போன்ற பல கலைகளிலும் தேர்ச்சி பெற்றார். இதனால் அந்த ஓவியப்பள்ளி வாழ்க்கை டாவின்சிக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. கலைக்கூடத்தில் பயிற்சி முடித்த பின் மனித வாழ்க்கையின் யதார்த்த நிலையை ஓவியமாகத் தீட்ட ஆரம்பித்தார்.
இவருக்கு இடது கைப்பழக்கம் இருந்தாலும் இரண்டு கைகளாலும் ஒரே சமயத்தில் ஓவியம் வரையக்கூடிய ஆற்றல் இவரிடம் இருந்தது. இவர் தன் விளக்கக் குறிப்புகளையும் கடிதங்களையும் இவர் வலப்பக்கமாக ஆரம்பித்து இடது பக்கமாக எழுதுவார்..இவரது எழுத்துக்களை முகம் பார்க்கும் கண்ணாடியின் மூலம்தான் படிக்க முடியும்.
டாவின்சிக்கு அதிக ஞாபக சக்தி இருந்தது. இவருக்கு குதிரைகள் என்றால் மிகவும் விருப்பம். இவர் நல்ல உடல் வலிமையுடன் திகழ்ந்தார். குதிரை லாடங்களை வெறும் கைகளால் இரண்டாக உடைக்கக்கூடிய வலிமையும் பெற்றிருந்தார். இயற்கையை அதிகம் நேசித்தவர். ஓவியங்களில் இயற்கையை பிரதிபலித்தார்.இயற்கையை பிரதிபலித்த முதல் ஓவியர். தன் ஓவியங்களில் எந்த கட்டுப்பாட்டையும் விதிமுறைகளையும் பின்பற்றியதில்லை. இவர் ஓவியங்களில் ஒளியையும் அதன் நிழலையும் தத்ரூபமாக வரைந்து காட்டிய முதல் ஓவியர் .டாவின்சி. இயற்கையை மட்டுமல்லாமல் விலங்குகளையும் பறவைகளையும் மிகவும் நேசித்தார்.
விமானங்கள் கண்டுபிடிக்கப்படாத காலக்கட்டத்தில் வான் குடையைப் பற்றி சிந்தித்து துல்லியமாக வரைந்தவர் டாவின்சி. கடிகாரம் கண்டுபிடிக்கப்படாத ஒரு சூழ்நிலையில் அலாரம் பற்றி சிந்தித்திருக்கிறார்.நீராவி பற்றியும் பீரங்கிகள் பற்றியும் கப்பல் வடிவமைப்பு பற்றியும் சிந்தித்து வரைந்தார். எந்த அறிவியல் கருவிகளும் கண்டுபிடிக்கப்படாத அந்தக் காலகட்டத்திலேயே ஒரு தாயின் கருப்பையில் குழந்தை எப்படி இருக்கிறது என்பதை கற்பனை செய்து வரைந்தவர்.
அறிவியல் துறையிலும் ஆர்வம் காட்டியவர் டாவின்சி.நூல் நூற்கும் இயந்திரம், திருகாணி செய்யப்பயன்படும் கருவி, மண் தூக்கும் கருவி போன்றவற்றுக்கான வரைபடங்களை வரைந்தார்.இவர் பறக்கும் எந்திரங்கள், பாராசூட், ராணுவ டாங்கிகள் போன்றவற்றுக்கான மாதிரிப் படங்களையும் முதலில் வரைந்தார்.
லியோனார்டோ டா வின்சி, ஓவியம், சிற்பம், கட்டிடக் கலை, இசை, அறிவியல், கணிதம், பொறியியல், தாவரவியல், உயிரியல், வானவியல் முதலிய பல்வேறு துறைகளில் வியக்கத்தக்க மேதையாக விளங்கினார் .
லியோனார்டோ டா வின்சி வரைந்த கடைசி விருந்து மற்றும் மோனோலிசா போன்ற ஓவியங்கள். புகழ் பெற்றவை.
இறுதி இராவுணவு ஓவியம் மிலான் நகரில் அருளன்னை மரியா கோவில் என்னும் வழிபாட்டிடத்தை உள்ளடக்கிய துறவற இல்லத்தின் உணவறைச் சுவரில் வரைந்தார். இவ்வோவியம் இத்தாலிய மறுமலர்ச்சிக் காலத்தின் சிறப்பான படைப்பாகவும் இயேசு அருந்திய இறுதி விருந்தைச் சித்தரிக்கும் ஓவியங்களுள் முதன்மையானதாகவும் கருதப்படுகிறது. கடைசி இரவு விருந்து என்ற ஓவியத்தை 1495இல் வரையத் தொடங்கி, 1498 இவர் வரைந்து முடித்தார்.இந்த ஓவியம் சுண்ணாம்புக் கலவைச் சாந்து பூசிய சுவரில் வரைந்த சுவரோவியம் இவர் அதிகாலையில் எழுந்து ஓவிய வேலையைத் தொடங்கினால் மாலை வரையும், பசி தாகம் என்று பாராமல் ஓவியம் வரைவார். இவர் வரைந்த தலைசிறந்த சுவரோவியம் ஆகும்.
இவர் ஐநூறு வருடங்களுக்கு முன் வரையப்பட்ட மோனாலிசா என்கிற ஓவியம் உலகப் புகழ் பெற்றது.இதை போல் ஒரு ஓவியம் இன்று வரை வரையப்படவில்லை.இந்த ஓவியத்தின் உதட்டில் புன்னகை இருந்தாலும் அவரது கண்களில் ஒருவித சோகம் தெரிகிறது. மோனாலிசா ஓவியத்தை ஃபிரெஞ்சு மன்னர் முதலாம் பிரான்ஸிஸ் 12 ஆயிரம் பிராங்குகள் கொடுத்து வாங்கினார்.
மோனலிசா என்ற மந்திரப் புன்னகை ஓவியம் ஆறு ஆண்டுகள் எடுத்துக் கொண்டு ஓவியத்தை வரைந்து முடித்தார் டாவின்சி. உலகப் புகழ் பெற்ற மோனலிசா ஓவியத்தை வறுமையில் வாடிய போதுதான் வரைந்தார் டாவின்சி.எப்போதும் மாறாத புன்னகை சிந்தும் உலகப்புகழ் மிக்க மோனாலிசா ஓவியத்தை இவர் வரைந்தார். புன்னகை பூக்கும் எழில்மிகு ஓவியத்தின் ரகசியம் குறித்து பலர் ஆய்வு செய்து வருகின்றனர். பாரிஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் இந்த ஓவியம் உள்ளது. மோனாலிசா உள்ளிட்ட ஓவியங்கள் மீது எக்ஸ்ரே கதிர்களை பாய்ச்சி பரிசோதனை செய்தனர். அதில் மோனாலிசா ஓவியத்தை லியோனார்டோ டா வின்சி 30 அடுக்கு பெயிண்டிங் (வண்ணம்) செய்து இருப்பது தெரிய வந்தது.ஒவ்வொரு வண்ண கலவை அடுக்கு களும் 40 மைக்ரோ மீட்டர் அதாவது மனிதனின் மயிர் தடிமன் அளவுக்கு நுண்ணியமாக வரையப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.மோனாலிசா ஓவியத்தில் மேங்கனிஷ் ஆக்சைடு என்ற ரசாயண கலவையின் மூலம் ஓவியர் டா வின்சி வரைந்துள்ளார். ஓவியம் பளபளப்பாக இருப்பதற்கு அதன் மீது இவர் காப்பர் உலோகத்தை பயன் படுத்தியுள்ளார்.
1519-ஆம் ஆண்டு மே 2-ஆம் நாள் தமது 67-ஆவது அகவையில் இயற்கை எய்தினார்.
ஓரளவுக்கு கணிசமான எண்ணிக்கையிலான சித்திரங்களும் இருபதுக்கும் குறைவான வண்ண ஓவியங்களும் ஒரு சில குறிப்பேடுகளும் மட்டுமே இன்று இவருடைய ஓவியத்திற்கு சான்றாக உள்ளன. இவற்றைக் கொண்டுதான் இவருடைய அதிசயத் திறமைகளை வியக்க முடிகிறது.இவர் அறிவியல் மற்றும் பொறியியல் ஆய்வுகளைப்பற்றி குறிப்புகளாகவும் படங்களாகவும் சுமார் 13,000 பக்கங்களில், குறிப்புப் புத்தகங்களில் பதிவுசெய்துள்ளார்.
500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மோனா லிசா ஓவியம், மர்மங்களால் சூழப்பட்டுள்ளது.
இந்த ஓவியத்தின் பின் இருக்கும் இரகசியம் மற்றும் சதிக் கோட்பாடானது, டான் பிரவுனின் நாவலான 'டா வின்சி கோட்' வெளியான பின்பு தான் தெரிந்தது. மேலும்இந்த நூல் அதிகம் விற்பனையாகியுள்ளது.இந்த வரலாற்று சிறப்புமிக்க நாவல் மோனாலிசாவின் அடையாளம் மற்றும் இவரது புன்னகையின் இரகசியம் மீது நிறைய சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்பியது.
இத்தாலியிலுள்ள கலாச்சார பாரம்பரியத்திற்கான தேசிய குழுவினர் (National Committee for Cultural Heritage), மோனா லிசா ஓவியத்தின் கண்களைப் பெரிதுபடுத்தி பார்த்த போது, அதில் எழுத்துக்களும், எண்களும் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளனர். அந்த எழுத்துக்கள் ‘LV’ என்றும், வேறு சிலருக்கு ‘CE’ அல்லது ‘B’ என்றும் தோற்றமளிக்கிறது. அதன் பின்னணியில் இணையும் இடத்தில் ’72’ என்ற எண்ணைப் போன்று தோற்றமளிக்கும் குறியீடுகளும் தெரிகின்றன. ‘LV’ என்பது வரைந்தவரின் கையெழுத்துப் பெயரையே குறித்தாலும் (LV = Leonardo da Vinci), மீதி இருக்கும் குறியீடுகளின் அர்த்தம் என்ன என்று அறியக் கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
தொகுப்பு முருகுவள்ளி
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
***கட்டுரைகள் தொகுப்புகள் மற்றும் நூல்களில் இருந்தும்
இணைய தளங்களில் இருந்தும் எடுத்து சேர்த்த தரவுகள்.
கருத்துகள்
கருத்துரையிடுக