சேலம் மாவட்டம்- பொன். குமார்,
சேலம் மாவட்டத்திற்கு என்று ஒரு தனி வரலாறு உண்டு. கற்காலம் முதலே அதன்
வரலாறு தொடர்கிறது. கிருஸ்து பிறப்பிற்குப் பின்னே அதன் வரலாறு அறிய முடிகிறது.
பாண்டிய வம்சத்தினர் இரண்டாம் நுாற்றாண்டில் சேலத்தை ஆண்டுள்ளனர். நான்காம்
நூற்றாண்டில் பல்லவ வம்சத்தினர் ஆண்டுள்ளனர். ஐந்தாம் நுாற்றாண்டு வரை பல்லவர்
ஆட்சித் தொடர்ந்துள்ளது.
ஆறாம் நாற்றாண்டில் மஹேந்திர வர்மா பல்லவன் ஆண்டுள்ளான். கிருஸ்து பிறப்பதற்கு
முன்பு பரவிய புத்த மதமும் ஜைன மதமும் ஏழாம் நுரற்றாண்டில் பலவீனமடையத்
தொடங்கியது. மீண்டும் எட்டாம் நூற்றாண்டில் பாண்டிய வம்சம் பலமடைந்தது. ஒன்பதாம்
நுாற்றாண்டில் சைவ சமயம் சேலத்தில் பரவத் தொடங்கியது.
பல்லவர்களின் கை ஓங்கினாலும் பத்தாம் நுாற்றாண்டில் சோழர்களின் ஆட்சி சேலத்தில் நிகழ்ந்தது. பதினொன்றாம் நுாற்றாண்டிலும் தொடர்ந்தது. சேலத்தின் சில பகுதிகளில் கோசல்யாவின் ஆதிக்கம் பனிரெண்டாம் நுாற்றாண்டில் பரவத்தொடங்கியது. பதினான்காம் நுாற்றாண்டின் பிற்பகுதியில் விஜய நகர பேரரசின் கீழ் சேலம் வந்தது. பதினைந்தாம் நுாற்றாண்டின் முன் பகுதியில் சாலுக்கியன், பின்பகுதியில் பாளையக் காரர்கள், கைப் பற்றத் தொடங்கினர். பதினாறாம் நுாற்றாண்டில் மதுரை நாயக்கர்களின் ஆட்சி நடந்தது. பின்னர் ஆத்துாரில் கிருஷ்ண தேவராயர் நுழைந்தார். பதினேழில் மண்ணின் மைந்தர்களான கெட்டி முதலிகளும் நாயக்கர்களும் ஆளத் தொடங்கினர். பதினெட்டில் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆண்டுள்ளனர். பதினெட்டாம் நுாற்றாண்டு பிற் பகுதியில் பிரிட்டிஷ் கட்டுப் பாட்டில் சேலம் வந்தது.
1772ஆம் ஆண்டு சேலத்திற்கு முதல் மாவட்ட ஆட்சியர் நியமிக்கப் பட்டார். இருபதாம் நுாற்றாண்டில் வளரச்சிப் பணிகள் தொடங்கப் பட்டன. தண்டவாளங்கள் மற்றம் சாலைகள் அமைக்கப் பட்டன. 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற இந்தியாவின் சுதந்திர பூமியானது சேலம் . 1951இல் மைசூர் ஸ்டேட் மற்றும் தமிழ்நாடு ஸ்டேட் ஆகிய இரண்டுக்கும் இடையில் கிராமங்கள் மாற்றிக் கொள்ளப்பட்டன.
சேலம் குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பது ரோமானிய பேரரசர் டைபீரியஸ் கிளாடியஸ் நீரோ (37-68 கி.பி) என்பவரின் வெள்ளி நாணயங்கள் 1987 இல் சேலம் மாவட்டத்தில் உள்ள கோனேரிபட்டி என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து தெளிவாகிறது.
சேரலம் என்பது சேலம் ஆனது என்பதற்கு ஏத்தாப்பூர் செப்பேட்டில் உள்ள ' சாலிய சேரமண்டலம் ' என்னும் தொடரை ஆதாரமாகக் கூறுவர். சேரவரையன் மலையும் இதற்கு இன்னொரு சான்றாக இருக்கிறது. சைலம் என்ற சொல்லிற்கு மலைகளால் சூழ்ந்த வாழிடம் என்பது பொருள். இதனால் சைலம் என்பதே திரிந்து சேலம் ஆனது என்பதற்கு ஆதாரங்கள் ஏதுமில்லை. இவ்வூரை சைலம் எனக் குறிப்பிடும், ஆவணங்களோ கல்வெட்டுகளோ எதுமில்லை. ஆனால் சேலம் எனவே குறிப்பிடும் கல்வெட்டுகள் மாவட்டம் முழுவதும் கிடைக்கின்றன. சேலத்தின் முதன்மை மலைத் தொடர் சேர்வராயன் மலை. சேர+அரையன் என்பதின் திரிபே சேர்வராயன் என்றாகும். அரையன் என்பதற்கு அரசன் என்று பொருள். எனவே சேரலம் என்பதின் திரிபு சேலம் என்றானது எனலாம். ஏத்தாப்பூர் செப்பேடு இவ்வூரைச் "சாலிய சேரமண்டலம்" எனக் குறிப்பிடுகிறது. எனவே, சேரலம் என்னும் பெயரே காலப்போக்கில் திரிந்து சேலம் என வழங்கப்பட்டது எனக் கூறுவதற்குச் சிறு ஆதாரங்கள் உண்டு. 'சேலம்' என்றால் 'மலைகள் சூழ்ந்த இடம்' என்று பொருள். சேலை நெசவில் பெயர்பெற்று சேலையூர் என்ற பெயர் சேலம் என காலப்போக்கில் மருவியது எனவும் கூறுவர். இலக்கண விதிப்படி சேல்+அம் = சேலம் என புணரும். சேல் ஆறும் ஏரிகளும் நிறைந்த பகுதிகளில் மீன்கள் நிறைய கிடைத்ததால் இப்பெயர் பெற்றிருக்கலாம் எனவும் கூறலாம் என்றாலும் சேரன் ஆண்டதால் சேர்வராயன் மலை ஆயிற்று என்பது போல சேரலம் என்பது 'சேலம்' ஆயிற்று என்பதே சரியாகத் தோன்றுகிறது.
ஆட்சியர்கள்
சேலம் மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியர் கிண்டர்ஸ்லே. ஆண்டு 1772. தற்போது சேலம் மாவட்டத்தின்
ஆட்சியராக இருப்பவர் திரு. ச. அ. இராமன். (2020)இவர் 171ஆம் மாவட்ட ஆட்சியர் ஆவார்.
எல்லைகள்
சேலம் மாவட்டம் முன்பு பரந்து விரிந்து இருந்தது. தமிழ் நாட்டிலேயே பெரிய மாவட்டமாக
இருந்தது. கொங்கு நாட்டில் இருந்தாலும் சேலம் மாவட்டம் வட கொங்குஎன்று அழைக்கப்பட்டது.
பிரிக்கப் படாத மாவட்டத்தின் எல்லையாக வடக்கே ஒசூரும்
தெற்கே தாத்தையங்கார் பேட்டையும் மேற்கே பள்ளி பாளையமும் ( காவிரி ஆறு)
இருந்தது.
நிர்வாக வசதிக்காக ஆட்சிச் செய்ய ஏதுவாக முதன் முதலில் 02. 10. 1965 அன்று சேலம்
மாவட்டம் சேலம்- தர்மபுரி என இரண்டாக பிரிக்கப் பட்டது. மீண்டும் அதே காரணத்துக்காக 02.02, 1997 அன்று சேலம் மாவட்டம் சேலம்- நாமக்கல் என பிரிக்கப்பட்டது. தற்போது வடக்கே தர்மபுரியும் தெற்கே நாமக்கல்லும், மேற்கே திருச்செங்கோடும் கிழக்கில் சின்னசேலமும் அமைந்துள்ளது. தென் மேற்கில் கர்நாடக எல்லைத் தொடங்குகிறது.
தமிழகத்தில் சேலம் பெரிய மாவட்டங்களில் ஒன்றாக விளங்குகிறது. சேலம் மாவட்டத்தின்
மொத்த பரப்பளவு 5205 சதுர கிலோ மீட்டர் ஆகும்.
சேலம் மாவட்டத்தில் தற்போது சேலம் , சங்ககிரி , எடப்பாடி , மேட்டுர் , ஓமலுார் ,
ஏற்காடு , ஆத்தூர் , கெங்க வல்லி , வாழப் பாடி என ஒன்பது தாலுக்காக்கள் உள்ளன.
சேலம் கடல் மாவட்டத்தில் இருந்து 284 மீட்டர் உயரத்தில் உள்ளது. சேலத்தில் கோடை
காலத்தில் வெப்ப நிலை அதிக பட்சம் 39.8 செண்டி கிரேடு ஆகவும் குறைந்த பட்சம் 31.0
சென்டி கிரேடு ஆகவும் இருந்து வருகிறது. குளிர் காலத்தில் அதிக பட்சம் 31.0 சென்டி
கிரேடு என்றும் குறைந்த பட்சம் 18.0 சென்டி கிரேடு என்றும் இருந்து வருகிறது.
சட்ட மன்றதொகுதிகள்
சேலம் மாவட்டம் சட்ட மன்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. 2011 ஆம் ஆண்டு மறுசீரமைப்பிற்குப் பிறகு பதினொரு சட்ட மன்றத் தொகுதிகளை உள்ளடக்கி உள்ளது. அவை
கெங்கவல்லி ( தனி)
ஆத்துார் ( தனி )
ஏற்காடு ( தனி மலை)
ஓமலுார்
மேட்டுர்
எடப்பாடி
சங்ககிரி
சேலம் ( மேற்கு )
சேலம் ( வடக்கு )
சேலம்(தெற்கு)
வீரபாண்டி
பாராளு மன்றத் தொகுதிகள்
ஓமலுார், எடப்பாடி , சேலம் ( மேற்கு ) , சேலம் ( வடக்கு ) , சேலம் ( தெற்கு )வீரபாண்டி ஆகிய ஆறு சட்ட மன்றத் தொகுதிகள் சேலம் பாராளுமன்றத் தொகுதியாக உள்ளது. கெங்க வல்லி, ஆத்துார் , ஏற்காடு ஆகிய சட்ட மன்றத் தொகுதிகள் கள்ளக் குறிச்சி
பாராளுமன்றத் தொகுதியுடன் இணைக்கப் பட்டுள்ளது. சங்ககிரி சட்ட மன்றத் தொகுதி
நாமக்கல் பாராளுமன்றத் தொகுதியுடனும் மேட்டூர் சட்ட மன்றத் தொகுதி தர்மபுரி
பாராளுமன்றத் தொகுதியுடனும் இணைக்கப் பட்டுள்ளது.
மாநகராட்சி
சேலம் மாவட்டத்தின் தலை நகரம் சேலம் ஆகும். 1966 ஆம் ஆண்டு முதல் சேலம்
நகராட்சியாத இருந்து 1995 ஆம் ஆண்டு நுாற்றாண்டு விழா கண்டு 1979 ஆம் ஆண்டு சிறப்பு நிலை நகராட்சி ஆனது சேலம் கண்ட பெருவளர்ச்சியாலும் பொருளாதார முன்னேற்றத்தாலும் 01.06.1994 அன்று மாநகராட்சி என்று உயர்வு பெற்றது. இதனுடன் சூரமங்கலம் நகராட்சிி இணைக்கப் பட்டது. மேலும் ஜாரி கொண்டலாம் பட்டி டவுன் பஞ்சாயத்து , கன்னங்குரிச்சி டவுன் மற்றும் 21 கிராமங்களும் சேர்க்கப் பட்டுள்ளன. சேலம் மாநகராட்சியின் பரப்பளவு 91.34 சதுர கிலோ மீட்டர் ஆகும். சேலம் மாநகராட்சி நான்குமண்டலங்களாகவும் அறுபது வார்டுகளாகவும் பிரிக்கப் பட்டுள்ளன.சேலம் நகரம் தமிழ் நாட்டின் ஐந்தாவது பெரிய நகரம் போல சேலம் மாநகராட்சியும் தமிழகத்தில் ஐந்தாவது பெரிய மாநராட்சி ஆகும். மக்கள் தொகை 2011 இன் கணக்கெடுப்புப்படி 8,31,038. ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 8036 பேர் வசிக்கின்றனர்.
சேலம் மாநகராட்சியைச் சுற்றி நான்கு மலைகள் அரணாக உள்ளன. வடக்கே நகர மலை, தெற்கே ஜருகு மலை, வடக்கே கஞ்ச மலை, கிழக்கே கோது மலை என நான்கு மலைகள். சேலம் மாநகராட்சியை திருமணிமுத்தாறு இரண்டாக பிரிக்கிறது.
சேலம் நகாரட்சியின் முதல் தலைவர் டி. ஆர்புத்நாட்,. ஆண்டு 1866. இவர் நியமிக்கப்
பட்டவர். வார்டு உறுப்பினர்களுக்கு தேர்ந்தொடுக்கப் படும் அதிகாரம் அளிக்கப் பட்டு 1888ஆம் ஆண்டு முதல் தேர்ந்தெடுக்கப் பட்ட தலைவர் ஆனவர் ஷேக் முஹைதீன் கான் பஹதுார். நகராட்சியின் கடைசித் தலைவருமாக மாநகராட்சியின் முதல் மேயருமாக சூடாமணி இருந்துள்ளார். இறுதியாக மேயராக இருந்தவர் செளண்டப்பன். ராஜாஜி அவர்களும் சேலம் நகரவையின் தலைவராக இருந்துள்ளார். அப்போது அவர் ஊதியம் எதுவும் பெற்றுக் கொள்ளவில்லை.
நகரா ட்சிகள்
சேலம் மாவட்டத்தில் நான்கு நகராட்சிகள் உள்ளன. மேட்டூர் தேர்வு நிலை நகராட்சியாகவும் ஆத்துார் , எடப்பாடி ஆகியவை கிரேடு 1 நகராட்சியாகவும் நரசிங்கபுரம் மூன்றாம் நிலை நகராட்சியாகவும் உள்ளன.
ஒன்றியங்கள்
சேலம் மாவட்டத்தில் சேலம் , வீர பாண்டி, பனமரத்துப் பட்டி, அயோத்தியாபட்டணம் , வாழப் பாடி, ஏற் காடு, பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், கெங்கவல்லி , தலை வாசல் , கொளத்துார் , நங்க வல்லி , ஓமலுார் , தார மங்கலம், காடையாம்பட்டி , சங்ககிரி, கொங்கனாபுரம்,, மகுடஞ்சாவடி, எடப்பாடி, மேச்சேரி என இருபது ஒன்றியங்களும் இவைகளின் கீழ் மொத்தம் 385 கிராம பஞ்சாயத்துகளும் உள்ளன.
இலக்கிய வாதிகள்
சேலம் இலக்கியத்தில் புகழ் பெற்று விளங்கியது. இலக்கிய உலகத்தில் சேலம் கவனத்தை ஈர்த்தது. பிரிக்கப்படாத போதும் பிரிக்கப்பட்ட போதும் சேலம் இலக்கிய வாதிகள் சிறந்து விளங்கியவர்களாகவே இருந்தனர். இருந்தும் வருகின்றனர். ராஜாஜி, நாமக்கல் கவிஞர், பகடால நரசிம்மலு நாயுடு, ப. வே. மாணிக்க நாயகர், ச. து. சி. யோகி, சோலை இருசன், சி. மணி, தமிழ் நாடன், கோ. பெ. நா., தி. முருகு சுந்தரம், எழுஞாயிறு, ஜலகைக் கண்ணன், எஸ். டி. எஸ், இரா. வேங்கிடசாமி, கோ. வேள்நம்பி, கு. ராஜவேலு, சேலம் பா. அன்பரசு, சி. மணி, ஃ பரந்தாமன், மகரிஷி, புஷ்நாகி ராஜண்ணன், அனுராதா ரமணன், க. இந்திரசித்து, கி. தமிழமுதன், கே. எம். கோபால், நஞ்சுண்டன் என காலம் சென்றவர்கள் சிறந்து விளங்கியவர்களாகவே இருந்தனர். இருந்தும். வருகின்றனர். இருப்பவர்களை பட்டியலிட்டால் பக்கங்கள் நீளும். ஓவ்வோர் எழுத்தாளரும் ஒவ்வொரு விதத்தில் தனித்து இயங்கினர். பல்வேறு படைப்புகளைத் தந்தனர். ஓவியர்களும் கலைப்பணியை ஆற்றினர். சேலத்தை அறியச் செய்து சேலத்திற்கும் பெருமைச் சேர்த்து வருகின்றனர்.
சிற்றிதழ்கள்
சேலம் மாவட்டம் இலக்கியத்தில் முக்கிய பங்காற்றியதுடன் சிற்றிதழ்களிலும் இடம்
பெற்றுள்ளது. சேலம் மாவட்ட முதல் இதழ் மாவட்ட கெசட். ஆண்டு 1857. இது அரசிதழ். இரண்டாவது சேலம் சுதேசாபிமானி.இலக்கிய இதழ். ஆண்டு 1877, ஆசிரியர்
பகடால் நாசிம்மலு நாயுடு. 1881 ஆம் ஆண்டு கலாநிதி. 1893 ஆம் ஆண்டு சேலம் பானு.
பின்னர் 1899 இல்
தட்சிண் தீபம். இருபதாம் நுாற்றாண்டின் தொடக்கத்தில் ராஜாஜி சாஸ்திர பரி பாஷச் சங்கத்தாரின் பத்திரிகை வந்துள்ளது. தொடர்ந்து தமிழ் நாடு , தென்னாடு, திராவிடாபிமானி என பல சிற்றிதழ்கள் வெளியாகி உள்ளன. சேலத்திற்கு பெருமைச் சேர்த்த இதழ்கள் நடை மற்றும் அஃ ஆகியவையாகும். முன்னதன் ஆசிரியர் சி.மணி. பின்னதன் ஆசிரியர் ஃபரந்தாமன். சண்ட மாருதம் , விமரிசனம் , அன்னம் , தேனமுதம், எழில் , நீ , பிரபஞ்சம் , மல்லி வரிப்புலி , வைஸ்யன் , செளராஷ்டிரா முரசு, வன்னிய மணி, பாரி, செங்குந்தன், பூந்தோட்டம் , நகர ஜோதி , மந்திரி, மக்கள் குரல், மனம், தமிழ் நெறி, நல்ல மாணவன்,அரும்பு போன்ற இதழ்களும் வந்துள்ளன. 1951ஆம் ஆண்டு பகுத்தறிவு இதழாக ஜலகைக் கண்ணனைக் கொண்டு பகுத்தறிவும் 1964ஆம் ஆண்டு கிள்ளி வளவனைக் கொண்டு பெரியாரிசம் போன்ற இதழ்களும் வந்துள்ளன. பின்னர் உளி, முகடு, நவீன அகம் புறம், குலவை, வேட்கை, ஜன்னல் பார்வை , எண்ணச் சோலை, சேலம் ஆன் லைன், மூன்றாவது கண், வேர்வைத் துளி, வெற்றிச் சிறகுகள், தமிழ்ச் சிறகு, இனிது இனிது, உங்கள் ரீடர்ஸ், சேலம் செய்தி, தக்கை, கம்ப்யூட்டர், தமிழ் நெட் போன்ற சிற்றிதழ்கள் வந்துள்ளன. மேட்டூர் பகுதியில் இருந்து விசும்பு என்னும் சிற்றிதழ் வந்தது. அதில் சிற்றிதழ்கள் குறித்த அறிமுகம் செய்யப் பட்டு தமிழகம் எங்கும் பரவலானது. தற்போது மணல் வீடு, துாறல் , சாளரம் போன்ற சிற்றிதழ்கள் மட்டுமே தொடர்ந்து வந்து கொண்டுள்ளன.
படப்பிடிப்பு மையம்
தமிழகத்தில் திரைத் துறையினரின் ஆக்கிரமிப்பு அளவிடற்கரியது. திரைத் துறையின்
அபார வளர்ச்சிக்கு சேலமும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. 1917 ஆம் ஆண்டு
பேசாத படம். இந்தியாவின் முதல் பேசும் படம் ஆலம் ஆரா 1931 ஆம் ஆண்டு வெளியானது. இதே ஆண்டிலேயே தமிழகத்தில் காளி தாஸ் திரையிடப் பட்டது. 1936ஆம் ஆண்டு சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் என்னும் படப் பிடிப்புத் தளம் அமைக்கப் பட்டது. சேலம் ஏற்காடு செல்லும் வழியில் ஏற்காடு மலைப் பகுதியின் அடிவாரத்தில் அமைந்திருந்தது. இதன் உரிமையாளர் டி. ஆர். சுந்தரம். ( திருச்செங்கோடு ராமலிங்க சுந்தரம்)தமிழகத்து மையமாக சேலம் இல்லை எனினும் திரை உலகினரை சேலத்திற்கு திரும்பிப் பார்க்கச்செய்தது. சேலத்துக்கு திரும்ப வைத்தது . ' சதி அகல்யா ' என்பது இதன் முதல் படம். நூற்றுக்கும்மேற் பட்ட படங்கள் தயாரிக்கப் பட்டுள்ளன. பாரதி தாசன், பட்டுக் கோட்டைக் கல்யாண சுந்தரம் , கண்ண தாசன், கவி. கா. மு. ஷெரீப் ஆகிய கவிஞர்களும் மு. கருணா நிதி , எம். ஜி. ராமச் சந்திரன் , பி. யு. சின்னப்பா, எம். என். நம்பியார், ஆர். எஸ் .மனோகர் , டி. எம், சௌந்தர் ராஜன் ஆகிய கலைஞர்களும் மாடர்ன் தியேட்டர்ஸில் பங்குக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. தற்போது அதன் அடையாளமாக அதன் முகப்பு மட்டுமே உள்ளது.மாடர்ன் தியேட்டர்ஸ் போல் சொந்த படங்கள் தயாரிக்காமல் படப் பிடிப்புத் தளம் அமைத்து வாடகைக்கு விட்டது ரத்னா ஸ்டுடியோ. ரத்னா சாமி பிள்ளை என்பவாரல் 1948ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது ஆகும். சேலம் பெங்களூர் நெடுஞ்சாலையில் மாமாங்கம்் பகுதியில் செயல் பட்டது.
கல் வெட்டுகள்
கல் வெட்டுகள் காலத்தின் பதிவுகள். காகிதம் இலலா காலத்தில் கல்லில் எழுத்துக்களாக வெட்டி, செதுக்கி பதிவு செய்து வந்தனர். வரலாற்றுக் குறிப்புகளாக, ஆவணங்களாக அவை விளங்குகின்றன. எராளமான கல்வெட்டுகள் இருந்தாலும் சிலவே கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்திலும் கண்டு பிடிக்கப் பட்ட சில காலத்தைப் பேசிக் கொண்டுள்ளன. மல்லுார் அருகே பொன் பரப்பிப்பட்டியில் உள்ள பொன் சொரிய மலையில் திருக் குறள் செதுக்கப் பட்டுள்ளது.
தன்னுான்
பெருக்கற்
குத் தான் பி
நி துானுன்
பா னெங்ங
ன மாளுமருள்
251ஆம் குறளின் கல் வெட்டு அமைப்பு.
வாழக் குட்டப் பட்டி ஊரில் ' எல்லாம் தலையான சோழங்க தேவ முதலி ' என்றும் ஒரு கல் வெட்டு உள்ளது. மேலும் சோழங்கத் தேவனைப் பற்றிய கல் வெட்டுக்கள் அலவாய்ப்பட்டியிலுள்ள திரு எகாம்பரமுடைய நாயனார் கோவில் ஏரியில் உள்ளன. மூக்குத்திப்பாளையம் கிராமத்தில் மோழிப் பாறைக் காட்டில் ஊாரழியாகிய மாத்தன் என்பவன்' அக்கை சாலை கங்கை' என்ற பெயரில் குளம் வெட்டியதைக் காண முடிகிறது. சேலம் நாமக்கல் மாவட்ட எல்லையிலுள்ள் மல்லுாரைச் சுற்றியே இந்த ஊர்கள் உள்ளன.
ஆத்தூரில் ஆறகழூரில் உள்ள திருக்காமீசுவரமுடைய காயனார் கோவில் கருவறையின் வடக்கு புறச் சுவரில் உள்ள கல் வெட்டில் பூசைச் செய்ய வழங்கும் உரிமைப் பற்றி இருக்கிறது. மகதை மண்டல நாட்டினருக்கு தியாகண நாயக்கர் கல் வெட்டிக் கொடுத்த உடன் படிக்கைத் தகவலை இக் கோவிலில் உள்ள மற்றொரு கல் வெட்டுத் தெரிவிக்கிது. வாழப்பாடி அருகிலுள்ள பேளுரில் உள்ள செக்கடிப்பட்டி என்னுமிடத்தில் ஒரு கல்வெட்டு உள்ளது. பேளூர்க் கோட்டையைக் கட்டியவன் பாளையக்காரன் லட்சுமண நாய்க்கன் கட்டியதாக ஒரு குறிப்பு காணப் படுகிறது. மேலும் ஆத்துார்க்கோட்டையைக் கட்டியவன் சின்னம நாய்க்கன் என்றும் ஒரு தகவல் பதிவாகி உள்ளது. பேளூரிலுள்ள தான்தோன்றீஸ்வரர் கோவிலிலும் ஒரு கல் வெட்டு உள்ளது. இது சுந்தரச் சோழனின் காலத்தைச் சேர்ந்தது ஆகும்.
நடு கற்கள்
தமிழ் நாட்டில் பழங்காலத்தில் நடு கற்கள் நடப் படுவது வழக்கம். போரில் உயிர் துறந்த வீரர்களுக்காக நடப் படுபவை நடு கற்கள். வீரத்தின் மாண்பைப் போற்றுவதாகவும் நடப் பட்டுள்ளன. வீரர்கள் பெருமைப் பேசப் படுவதால் வீரக்கல் என்றும் அழைக்கப்படுவதுண்டு. சேலம் மாவட்டத்திலும் ஏராளமான நடு கற்கள் உள்ளன. சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள பெருமாள் கோவிலில் ஒரு நடு கல் உள்ளது. ஒரு வீரன் மரணம் அடைந்ததைக் காட்சியாக விளக்குவது போல் அமைந்துள்ளது. மல்லூர் அருகே நாழிக்கல் பட்டி கிராமத்தில் கோட்டைக் கரடு அடிவாரத்திலுள்ள தோட்டம் ஒன்றில் ஒரு நடு கல் உள்ளது. போர்க் களக் காட்சியை நினவூட்டுவது போல் செதுக்கப் பட்டுள்ளது. மல்லுார் அருகே உள்ள அம்பமாபாளையம் ஏரிக் கரையோரம் உள்ள சிங்காரத் தோப்பில் ஒரு நடுகல் உள்ளது. ஆண் , பெண் இருவரும் கை குவித்து வணங்கும் நிலையில் உருவங்களைக் காண முடிகிறது.
கோட்டைகள்
சேலம் மாவட்டத்தில் கோட்டைகள் பல உள்ளன. அவைகள் மன்னர் காலத்திலும்
ஆங்கிலேயர் காலத்திலும் கட்டப் பட்டவையாகும். கோட்டைகள் பாதுகாப்புக்காகவும் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் கட்டப் பட்டனவாகும். கோட்டைகள் பழங்கால வரலாற்றைப்
பேசுபவையாகவும் கட்டடக் கலைக்குச் சான்றாகவும் விளங்குகின்றன. கோட்டைகள்
செயற்கை அரணாக நின்றுள்ளன.
ஆத்தார் கோட்டை
ஆத்துாரில் வசிட்ட நதிக் கரையின் வட புறம் ஆத்துார் கோட்டை அமைந்துள்ளது. இதன்
கோட்டைச் சுவர் பெருங் கற்பாறைகளால் கட்டப் பட்டதாகும். மூன்று பக்கமும் கருங்கல் கரைகள் ஒரு புறம் நதியாக அரண் உள்ளது.
தொல்லியல் துறை பாதுகாத்து வந்தாலும் சுற்றுப் பகுதிகள் ஆக்கிரமிப்பால் மறைக்கப் பட்டு உள்ளது. ஆறு ஓடியதால் ஆற்றுாராக இருந்தது காலப் போக்கில் ஆத்துராகியது என்பர்.
பேளூர்க் கோட்டை
வசிஷ்ட நதியின் கரையில் கட்டப் பட்டுள்ள மற்றொரு கோட்டை பேளூர்க் கோட்டை. இதில் தடாகங்களும் சமுத்திரங்களும் ஏற்படுத்தப் பட்டுள்ளன. இது மண்ணாலான கோட்டையாகும். தற்போது கோட்டை ஒரு மேடாகக் காட்சி அளிக்கிறது.
ஓமலூர்க் கோட்டை
ஓமலூரில் ஓடிய சரபங்க நதியின் இரு கிளைகளுக்கிடையே ஓமலுார்க் கோட்டைக் கட்டப்ட்டுள்ளது. இரு புறம் நீரால் அமைந்ததால் இது தீவுக் கோட்டை ஆகும். இரண்டு சுற்று வளைவு மதில்களில் உள்ளும் வெளியும் கொத்தளங்கள் இருந்தன. கொத்தளங்கள் மீதே பீரங்கியை நிறுத்தும் விதம் அமைக்கப் பட்டுள்ளது
காவேரிபுரம் கோட்டை
சேலம் மைசூர் எல்லையில் காவேரிபுரம் கணவாயில் நிதி காவல், சிக்க காவல் என இரண்டு கோட்டைகள் கட்டப்பட்டுள்ளன. கணவாய் வழியே எதிரிகள் வருவதற்குத் தடைச் செய்யவே இந்த கோட்டைகள் கட்டப்பட்டுள்ளன.
ஆறகலூர் கோட்டை
ஆத்தூருக்கு அருகில் ஆறகலூர் உள்ளது. இங்கு ஒரு கோட்டை இருந்துள்ளது. இது மண்
கோட்டையாக இருந்ததால் விரைவிவேயே அழிந்து விட்டது. இன்று இங்கு ஊரே
உள்ளது. இதுவும் வசிஷ்ட நதியின் கரையிலேயே கட்டப் பட்டுள்ளது.
சங்ககிரி கோட்டை
ஆத்தூர் கோட்டை , ஒமலூர்க் கோட்டை, காவேரி புரம் கோட்டைப் போலன்றி சங்ககிரி கோட்டை மலைக் கோட்டை ஆகும். மூன்று புறமும் உயர்ந்து ஒரு புறம் ஏறிச் செல்லும் வண்ணம் இயற்கையாகவே அமைந்துள்ளது. சங்கு வடிவில் தோற்றம் தருவதால் சங்கு கிரி என அழைக்கப் பட்டது. தற்போது மருவி சங்ககிரி ஆனது. மலை மீது பத்து மதில்கள் போர் புரிவதற்கு எற்ற வகையிலும் பாது காப்பிற்கு ஏற்ற வகையிலும் , மலைக் கோட்டை அமைந்துள்ளது. மேலும் அடைக்கலம் புகவும் அடைத்து வைக்கவும் பயன்பட்டுள்ளது. அடைத்து வைத்தவர்களை சித்திரவதை செய்வதற்கும் சான்றாக பல இடங்கள் உள்ளன. இங்குள்ள தூக்கு மேடையில்தான் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்டார் என்பது வரலாறு. இந்துக் கோயில்களும் உள்ளன. பாபர் மசூதியும் இருக்கிறது.
சேலம் மாவட்டத்தில் மேலும் பல கோட்டைகள் இருந்துள்ளன. காடையாம்பட்டி, சாம்பள்ளி, பொட்டனேரி, மேச்சேரி ஆகிய இடங்களிலும் இருந்துள்ளன. வெள்ளையர் வசமாக்கப்பட்டு வெள்ளையருக்கு ஆதரவு தர மறுத்தவர்களின் கோட்டைகள் அழிக்கப்பட்டு விட்டன. தற்போது ஆறகலூர் மற்றும் சங்ககிரி கோட்டை மட்டுமே சான்றாகக் காட்சித் தருகின்றன.
சேலம் மாவட்டத்தின் சேலம் மாநகரின் மையப்பகுதிக்கு கோட்டை என்று பெயர். முன்பு பொது பேருந்து நிலையம் இருந்தது., தற்போது பழைய பேருந்து என இயங்கி வருகிறது. இங்கும் ஒரு கோட்டை இருந்துள்ளது என்கின்றனர் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள். இங்குள்ள ஒரு தெருவிற்குப் பெயரே குண்டு போடும் தெரு ( gun firing sirect) என்பதாகும். திருமணி முத்தாறு கரையில் அமைக்கப் பட்டுள்ளது. கோட்டைப் பெருமாள் என்று ஒரு கோவில் இன்றும் இருந்து வருவது குறிப்பிடத் தக்கதாகும். கோட்டைப் பெருமாள் கோவிலைச் சுற்றி குடியிருப்பவர்கள் பெரும்பாலும் முஸ்லிம் பெருமக்கள் என்பதும் ஓர் அம்சம்.
மக்கள் தொகை
சேலம் மாவட்ட தொகை 2011 ஆம் ஆண்டு கணக்கு எடுப்புப் படி 34,80,008. ஆண்கள் 17,80569.பெண்கள் 16,99, 439. 1000 ஆண்களுக்கு 957 பெண்கள் உள்ளனர். 2001 இல் 929 ஆக பெண்கள் விகிதம் 957 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத் தக்கது. தமழ் நாட்டின் மொத்த சதவிகிதத்தில் 4.83 சதவீதமாகும். இந்தியாவில் மாவட்ட அளவில் 89ஆம் இடத்தில் உள்ளது.
மொத்த மக்கள் தொகையில் கல்வி அறிவு பெற்றவர்கள் 73.23 சதவீதமாகும். 2001 இல்
கல்வி அறிவு பெற்றவர்களின் சதவிதம் 65.09 சதவிதமாகும். பத்தாண்டுகளில் 8.14 சதவிதமாக
உயர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. படித்த ஆண்களின் எண்ணிக்கை 13,00,874. பெண்களின்
எண்ணிக்கை 10,10, 841.
நகரத்தில் வசிப்பவர்கள் 46.09 சதவீதம். மற்றவர்கள் கிராமத்தில் வசித்து வருகின்றனர். ஒரு
சதுர கிலோ மீட்டருக்கு 663 நபர்கள் என்னும் அளவில் உள்ளது. 2001 இல் 17.20
சதவீதமாக இருந்த மக்கள் பெருக்கம் 2011 இல் 15.37 சதவிகிதமாக குறைந்துள்ளது.
வரவேற்கக் கூடியதாக உள்ளது. மக்களிடையே ஒரு விழிப்புணர்வு எற்பட்டுள்ளதையும்
காட்டுகிறது.
பள்ளிகள்
சேலம் மாவட்டத்தில் கல்வியின் பங்கு முக்கியத்துவம் பெற்றதாகும். சேலத்தில் 1850 ஆம்
ஆண்டு முதல் பள்ளி தொடங்கப் பட்டது. முதல் பள்ளி பெற்றோார்களால் பண உதவி
செய்து நடத்தப் பட்டுள்ளது. 150 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது 2000க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன.
கல்லுாரிகள்
அரசுக் கலைக் கல்லுாரியே சேலத்தின் முதல் கல்லுாரி ஆகும். 1856 ஆம் ஆண்டு ஓர்
ஆங்கிலப் பள்ளியாகத் தொடங்கப் பட்டு 1857 ஆம் ஆண்டு ஜில்லா பள்ளிக் கூடமாகி 1886
ஆம் ஆண்டில் கல்லூரி வகுப்புகள் தொடங்கப் பட்டு 1879 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை
கல்லுாரி என்று தகுதி பெற்று 1944 ஆம் ஆண்டில் முதல் நிலைக் கல்லுாரியாக உயர்வு
பெற்றது.நகரவைக் கல்லுாரியாக இருந்து 1960 ஆம் ஆண்டே அரசுக் கல்லுரி ஆனது. இக்
கல்லுாரி குமாரசாமிப் பட்டியில் அமைந்துள்ளது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, வட ஆற்காடு, தென் ஆற்காடு ஆகிய பகுதி மக்களுக்குக் கல்வி வழங்கிய பெருமைப் பெற்றது. இன்று ஏராளமான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. மற்றும் பொறியியல், மருத்துவம், தொழில் நுட்ப கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.
பல்கலைக் கழகங்கள்
சேலத்தில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஓமலுாருக்கு முன் கருப்பூர் என்னுமிடத்தில் அரசு பொறியியல் கல்லுாரிக்கு அருகில் அமைந்துள்ளது பெரியார் பலகலைக் கழகம். சமூக நீதிக்கு வழி வகுத்த பகுத்தறிவு சிந்தனையைப் பரப்பிய
தந்தை பெரியார் பெயரில் இப் பல்கலைக் கழகம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. 1997 ஆம்
ஆண்டு 17.09.1997 அன்று பெரியார் பிறந்த தினத்தில் இப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டுள்ளது.
சேலம், நாமக்கல் , தர்மபுரி , கிருஷ்ண கிரி ஆகிய மாவட்டங்களை விவகார எல்லையாக
கொண்டுள்ளது. இப் பல்கலைக் கழகத்தில் ஏறத்தாழ அறுபது கல்லுாரிகள் இணைந்து செயல்படுகின்றன. தரமான கல்வி அளித்தல், உயர் கல்வி வழங்கல் , ஆரய்ச்சிக்கொள்ளுதல் ஆகியவை நோக்காங்களாக உள்ளன. மற்றொரு பல்கலைக் கழகம் வினாயாக மிஷன்ஸ் பல்கலைக் கழகம். இது தனியாருடையதாகும். 2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. சேலத் திலிருந்து கோவைச் செல்லும் தேசிய நெடுஞ்சானலையில் அரியானுாரில்அமைந்துள்ளது.
மேட்டுர் அணை
சேலத்திற்கு சிறப்பு மேட்டூர் அணை. கர்நாடகம் தொடங்கி தமிழகம் வழியாக ஓடி முடிவில் கடலில் கலக்கிறது காவேரி ஆறு,
தமிழகத்தில் தர்ம புரியில் ஹொகேனக்கல் நீர் வீழ்ச்சியாக மக்களை மகிழ்விக்கிறது.
சேலத்தில் மேட்டுர் வழியாக சித்தா மலை மற்றும் பால மலை ஆகிய இரண்டு மலைகளுக்கிடையே பயணித்தது. மேலும் மேட்டூருக்கு அருகில் சித்தேஸ்வரன் மலை
மற்றும் தங்க மலை ஆகியவையும் உள்ளன. நீரைத் தேக்கி விவசாயத்திற்கும் மின்சாரத்
தேவைக்கும் பயன் படுத்த வேண்டும் என்னும் நோக்கத்தில் ஓர் அணை கட்ட
முடிவெடுக்கப் பட்டது.தஞ்சை மாவட்ட விவசாய மக்களின் கோரிக்கையே ஒரு முக்கிய
காரணம். முடிவெடுத்தவர் சர் ஆர்தர் காட்டன். ஆண்டு 1834. தொடங்கப் ப்டடது 1923 முடிக்கப்பட்டது1934. 10000 பணியாளர்கள் ஈடுபடுத்தப் பட்டு முடித்துள்ளனர். ஒரு நல்ல திட்டம் நிறைவேற ஒரு நுாற்றாண்டு ஆகி விட்டது. கட்டி முடிக்கப் பட்ட போது ஆசியாவிலேயே பெரிய அனைணயாக இருந்தது. தற்போது தமிழகத்திலேயே பெரியது என்னும் பெருமையுடன் விளங்குகிறது. 1934 ஆம் ஆண்டு கவர்னர் ஸடேன்லி என்பவரால் திறந்து வைக்கப் பட்டது. இதனாலே இவர் பெயராலே மேடடூர் அணை அழைக்கப் படுகிறது. அணையின் அகலம் 5300 அடி. உயரம் 170 அடி. ஆயினும் 120 அடி வரை சேமிக்க முடியும். மொத்த பரப்பு 2.2. மில்லியன் ஹெக்டேர். மேட்டூர் அணையினால் சேலம் , ஈரோடு , நாமக்கல், கரூர் , திருச்சி , தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 271000 ஏக்கர் நிலங்கள் பயன் படுகின்றன.ஆனால் அணையைக் கட்ட பல கிராமங்களும் அழிக்கப் பட்டுள்ளன என்பதையும் மறக்க முடியாது.மேட்டூர் அணையின் முன்புறம் ஒரு பெரிய நீர்ச் சுரங்கம் அமைக்கப் பட்டு நீர் மின் திட்டச் சுரங்கம் மூலம் மின்சாரம் தயாரிக்கப் படுகிறது. சேலம் மக்களின் தாகத்தைத் தீர்த்து வைப்பதும் மேட்டூர் அணையேயாகும். நீர் ஆதாரம் தருகிறது என்பதுடன் மின்சாரமும் தயாரித்து தருகிறது. மேட்டூர் அணை இன்று ஒரு சுற்றுலா மையமாகவும் விளங்குகிறது. அணைமுன் ஒரு பூங்காவும் அமைக்கப் பட்டுள்ளது. மிக உயர்ந்து நின்று சேலத்தின் கம்பீரமாக பெருமைச் சேர்க்கிறது
மின் திட்டங்கள்
சுரங்க மின் நிலையம்
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப் படும் நீரானது ஒரு சுரங்கப் பாதை வழியாக வெளியேறி ஆற்றில் கலக்கிறது. சுரங்கப் பாதையில் ஒரு மின் நிலையம் உள்ளது. பெயர் சுரங்க மின் நிலையம் (tunel power house). இதன் உற்பத்தித் திறன் ஒரு மணி நேரத்திற்கு 200 மெகா வாட். மேலும் நெருஞ்சிப்பேட்டை வரை நான்கு இடங்களில் கதவணை மின் நிலையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இதன் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 120 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப் படுகிறது.
அனல் மின் நிலையம்
மேட்டூரில் புனல் மின் நிலையம் தவிர அனல் மின் நிலையம் ஒன்றும் உள்ளது. 210 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட 4 பிரிவுகள் உள்ளன. ஒரு மணி நேரத்திற்கு மொத்தம் 810 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப் படுகிறது. எரி பொருளாக நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. நிலக்கரி ஒரிசாவிலிருந்து வரவழைக்கப் படுகிறது. தற்போது 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு புதிய அனல் மின் நிலையம் கட்டப் பட்டு உள்ளது.
குடி நீர் வசதி
சேலம் மாநகர் மக்களுக்குக் குடிநீர் மிக அத்தியாவசியமான ஒன்றாகும். தொடக்கக் காலத்தில்
கிணறுகள் மூலம் மட்டுமே குடிநீர் பிரச்சனை தீர்க்கப் பட்டு வந்தது. திருமணி முத்தாறும் ஒரு முக்கிய பங்காற்றி உள்ளது. ஏரிகளும் குடிநீரைத் தந்து உதவியுள்ளன. 1908 ஆம்
ஆண்டு சேலத்திலிருந்து பனமரத்துப் பட்டி செல்லும் வழியில் அமைந்துள்ள பனமரத்துப்பட்டி ஏரி மூலம் குடி நீர் வழங்கப் பட்டது. மக்கள் பெருக்கத்தால் பற்றாக் குறை ஏற்பட்டு மேட்டூரிலிருந்து சேலத்திற்கு நீர் கொண்டு
வர திட்டமிடப் பட்டு பல்வேறு போராட்டங்களிடையே 1952 ஆம் ஆண்டு காவேரி நீர்கொண்டு வரப் பட்டது. இத் திட்டத்தின் பெயர் சேலம் மேட்டூர் குடி நீர்த் திட்டம். இது மாநகராட்சிக் கட்டுப் பாட்டில் வருகிறது. அடுத்து சேலம் ஆத்தூர் கூட்டுக் குடி நீர்த்திட்டம். இது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது.இடையிலுள்ள கிராமங்களுக்கும் குடி நீர் வழங்க வழி வகை செய்யப் பட்டுள்ளது. தற்போதைய தேவை ஒரு நாளைக்கு 110 மில்லியன் லிட்டர் ஆகும். ஆனால் 70 மில்லியன் லிட்டரே ஒரு நானைக்கு வழங்கப் பட்டு வருகிறது. 2040 ஆம் ஆண்டு உலக வங்கிஉதவியுடன் ஒரு நபருக்கு 135 லிட்டர் வீதம் குடி நீர் வழங்க திட்டமிட்டு பணி தொடங்கப்பட்டுள்ளது.
மலைகள்
சேலம் மாவட்டத்தைச் சுற்றி ஏராள மலைகள் உள்ளன. சேலம் என்றால் மலைகள் சூழ்ந்த மலைகள் பகுதி என்று பொருள் ஆகும். நகர மலை, ஜெருகு மலை, கோது மலை, கல்ராயன் மலை, சேவ்ராயன் மலை, பால மலை,சங்ககிரி மலை, கஞ்ச மலை, பச்சை மலை ஆகிய மலைகள் உள்ளன. மேலும் கிழக்கு மலைத் தொடரும் சேலத்தக்கு அரணாக உள்ளன. நகர மலை சேலத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. சேவராயன் மலையிலேயே ஏற்காடு என்னும் சுற்றுலாத் தளம் உள்ளது. பால மலையிலேயே மேட்டுர் அணை கட்டப் பட்டுள்ளது. கஞ்ச மலையில் இரும்புத் தாது உள்ளது என்று ஓர் இரும்பாலை அமைக்கப் பட்டு இயங்கி வருகிறது.
ஆறுகள்
சேலம் மாவட்டத்தில் காவேரி , திருமணிமுத்தாறு , வசிஷ்ட நதி , சரபங்கா நதி என நான்கு நதிகள் ஓடின. ஓடுகின்றன.
காவேரி கர்நாடகாவில் உள்ள குடகு மலையில் தொடங்கி தமிழகத்தில் நுழைந்து ஹொகேனக் கல்லில் நீர் வீழ்ச்சியாகி பின்னர் சேலம் மாவட்டத்தில் மேட்டூர் வழியாக பவானிச் சென்று பல்வேறு மாவட்டங்களைக் கடந்து இறுதியாக பூம்புகார் என்னுமிடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. காவேரியின் குறுக்கேயே மேட்டூர் அணை கட்டப் பட்டுள்ளது.
இரண்டாவது முக்கியமான ஆறு திருமணி முத்தாறு. சேவ்ராயன் மலையின் அடிப்பகுதியில் தொடங்கி சேலத்தின் நகரத்தின் முக்கியப் பகுதிகளில் ஓடி மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் பாய்ந்து முடிவில் காவேரி ஆற்றில் கலக்கிறது. முத்து இந்த ஆற்றிலிருந்து கிடைத்ததாக ஒரு செய்தியும் உண்டு. அதனாலே முத்தாறு என பெயர் பெற்றது என்பர். இன்று திருமணி முத்தாறு சேலம் நகரின் முதன்மைச் சாக்கடையாக்கப்பட்டுள்ளது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.
வசிஷ்ட நதியின் தொடக்கம் ஆத்துார். பின்பு பட்டுத் துறை , தலைவாசல், ஆறகலூர் ,சித்தேரி ஆகிய ஊர்களில் நுழைந்து கடலூர் சென்று வங்கக் கடலில் ஐக்கயமாகி தன் பயணத்தை முடித்துக் கொள்கிறது. முடிவதற்கு முன் சுவேதா ஆற்றுடன் கலந்து விடுகிறது. இதன் குறுக்கே ஆறகலூர் , பெரியேரி என்னும் இடங்களில் அணைகள் கட்டப்பட்டுள்ளன.
சரபங்கா நதி சேவ்ராயன் மலையின் தொடங்கி ஓமலூர் வழியாக எடப்பாடி சென்று இறுதியாக காவேரி ஆற்றில் கலக்கிறது.
மேலும் சேலத்தில் உள்ள ஜருகு மலை , போத மலை , நகர மலை, கஞ்ச மலை ஆகிய மலைகளில் இருந்தும் ஒவ்வோர் ஆறு மழைக் காலங்களில் உற்பத்தியாகி பல்வேறு பகுதிகளில் வலம் வருகிறது.
ஏரிகள்
சேலத்தின் முக்கிய நீர் வளங்களாக இருந்தவை, இருப்பவை ஏரிகளாகும்.சேலத்தில் எண்ணற்ற ஏரிகள் இருந்துள்ளன. அம்மா பேட்டை , சுக்கம் பட்டி , மூக்கனேரி , தாதகாப் பட்டி , அம்மாப்பாளையம், சூரமங்கலம், நெய்க்காரப் பட்டி, வாழக் குட்டப் பட்டி , ஆண்டிப்பட்டி, பனமரத்துப்பட்டி , பொன்பரப்பி, பஞ்சம் தாங்கி, மரவன், சக்கிலி, தாதுபாய்க்குட்டை, லோகி செட்டி , சீலாவரி, துலுக்கன் , சேலத்தாம்பட்டி , அச்சுவான், இலுப்பை மரம் , கன்னங்குறிச்சி, நரசோதிப்பட்டி, அழகாபுரம் , பூலாவரி , சந்தியூர், மல்லுார் , வீரபாண்டி , வேம்படி தாளம் , இளம்பிள்ளை, சிங்காளந்தபுரம் ஆகியவை சில. பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. ஆற்றை ஒட்டியும் பல ஏரிகள் அமைந்துள்ளன. மழைக் காலங்களில் நீரை சேமித்து வைத்து வறட்சிக் காலங்களில் நீர்வளத்துக்குப் பயன் படுபவையாக ஏரிகள் பயன் பட்டு வருகின்றன. ஆனால் பெரும்பாலான ஏரிகள் அழிக்கப் பட்டு விட்டன. சேலம் மாநகர வளர்ச்சியில் மரவனேரி, சக்கிலி ஏரி , தாதுபாய்க்குட்டை ஏரி , பஞ்சம் தாங்கி ஏரி ,லோாகி செட்டி ஏரி , சீலாவரி ஏரி ஆகியவை 'மூழ்கி 'க் கிடக்கின்றன என்பதே உண்மை
திருத்தலங்கள்
கோவில் இல்லாத ஊரில் குடி இருக்காதே என்பர். ஆனால் கோவில் இல்லாத ஊரே இல்லை என்னும் நிலை ஏற்பட்டுள்ளது.தெருவிற்கு ஒரு கோவில் உருவாக்கப் பட்டுள்ளது.நுாலகத்திற்கு என்று ஓர் அறை ஒதுக்கப் படுகிறதோ இல்லையோ கட்டாயம் சாமிக்கு என்று ஓர் அறை இருக்கும். சேலத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத் தலங்கள்.
கைலாச நாதர் கோவில்
சேலத்தில் தாரமங்கலத்தில் கைலாச நாதர் கோவில் உள்ளது. இது சேலத்தின் அழகிய கோவில் ஆகும். கோவிலுக்குப் பல சிறப்புகள் உண்டு. இராஜகோபுரத்தை யானைகளும்
குதிரைகளும் இழுப்பது போல் அமைக்கப் பட்டுள்ளது. கல்லான சங்கிலிகள் ஒரு சிறப்பு.
துாண்கள் மற்றொரு சிறப்பு. இராமர் வாலியை மறைந்திருந்து தாக்கினான் என்பது
இராமாயணத்தில் ஒரு காட்சி. இக் காட்சியை தூண்களில் காண முடிகிறது.இராமர் உருவம் இருக்கும் துாண் பின் நின்று பார்த்தால் வாலி தெரிவான். அதே வாலி உருவம் இருக்கும் துாண் பின் நின்று பார்த்தால் இராமர் தெரியான். மேலும் சிங்கம் , யாளி
ஆகியவற்றின் வாயில் கல் உருண்டைகள் உருட்டும் வகையில் செதுக்கப் பட்டுள்ளன. ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம் 9 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை சூரிய கிரகணம் மூலஸ்தான சிவலிங்க மூர்த்தி மேல் விழும் வண்ணம் கோபுரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ராமர் கோவில்
சேலத்திலிருந்து அரூர் செல்லும் சாலையில் உள்ளது இராமர் கோவில். கோவிலின் உள்ளே இருபத்தெட்டு துாண்கள். மூன்று இசைத் துாண்கள் மகா மண்டபத்து உள்ளே உள்ளன. தூண்கள் தாரமங்கலத்து கைலாச நாகர் கோவில் போன்றவை. தூண்களில் யாளி, சிங்கம் , யானை, குதிரை
என விலங்குகளின் சிற்பங்களும் ராமாயண , தசாவதார
ஆகியவற்றின் காட்சிகளும் பொறிக்கப் பட்டுள்ளன.
தான்தோன்றீஸ்வரர் கோவில்
சேலத்தில் இருந்து தும்பல் செல்லும் வழியில் அமைக்கப் பட்டுள்ளது தான்றீஸ்வரர்
கோவில். இங்கும் தூண்களில் யாளிகள் உண்டு. தாரமங்கல கைலாச நாதர் கோவிலில்
சிங்கம் வாயிலில் உருளும் கல் இருப்பது போல இங்கும் காணப் படுகிறது. தாரமங்கலம் கைலாச நாதர் கோவில் , அயோத்தியா பட்டணம் , பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் ஆகிய மூன்றின் வேலைப் பாடுகளும் ஒன்றாக உள்ளன.
சிற்பக் கலைகளுக்குச் சான்றாக விளங்குகின்றன.
முருகன் கோவில்
சேலத்திலிருந்து ஆத்துார் செல்லும் வழியில் உள்ள அயோத்தியா பட்டணத்திலிருந்து
தெற்கே ஒரு குன்றின் மீது கட்டப் பட்டுள்ளது. கந்தாஸ்ரமம் என்றழைக்கப்படுகிறது. இங்கு கன்னிமார் ஓடை உள்ளது. இது இருபதாம் நூற்றாண்டு கட்டப்
பட்டதாகும். புதுக் கோட்டையைச் சேர்ந்த ஸ்ரீ சந்தானாந்தா கனவில் முருகன் தோன்றி கூறியதால் கட்டப் பட்டது என்று கூறுவாரும் உண்டு. பதினெட்டு கைகளை உடைய மகா லட்சுமி, பதினாறு அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர், இதே பதினாறு அடி உயரத்தில் ஆஞ்சநேயருக்கு இணையான பஞ்சமுக விநாயகர் ஆகிய சிற்பங்களும் உள்ளன.
வடசென்னி மலை
சேலத்தில் இருந்து சென்னை செல்லும் வழியில் ஆத்தூரைத் தாண்டி வடசென்னிமலை என்னுமிடத்தில் ஒரு குன்றின் மீது வடசென்னிமலை முருகன் கோயில் உள்ளது.
சித்தர் கோவில்
சேலத்தில் இருந்து இளம் பிள்ளைச் செல்லும் வழியில் உள்ளது. இக் கோவில் கஞ்ச
மலை மீது அமைந்துள்ளது. சித்தர்கள் வாழ்ந்ததாகக் கூறப் படுகிறது. இம் மலையிலிருந்து
இரும்புத் தாது கிடைக்கிறது என்றே இரும்பாலை இதையொட்டி கட்டப் பட்டுள்ளது.
சுகனேஸ்வரர் கோவில்
சேலம் மாநகரில் திருமணிமுத்தாற்றின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
கிளிவண்ணமுடையார் என்றும் கூறுவர். ஈஸ்வரன் கோவில் என்பதே மக்கள் வழக்கு.மிக
பழமை வாய்ந்தது. இரண்டு மண்டபங்கள் உள்ளன.இரண்டிலும் பத்தொன்பது துாண்கள். அருகில் ஒரு குளம். ஒரு நந்த வனமும் உள்ளது.
பெருமாள் கோவில்
திருமுணிமுத்தாற்றின் கரையோரம் அமைந்துள்ள மற்றொரு கோவில் பெருமாள் கோவில். கோட்டைப் பகுதியில் அமைந்துள்ளது. கோட்டைப் பெருமாள் கோவில் என்று மக்களிடையே பிரசித்தம். கோட்டை ஒரு போர்த்தளம் என்றாலும் பெருமாள் நிரந்தரமாக உள்ளார். கோட்டைப் பெருமாள் கோவில் ஓர் இந்துக் கோவில் என்றாலும்
கோவிலைச் சுற்றி வசிப்பவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்களாக உள்ளனர்.
ஆயிரம் லிங்கம்
சேலத்திலிருந்து ஈரோடு செல்லும் பிரதான சாலையில் அரியானுர் என்னுமிடத்தில் ஒரு குன்றின் மீது ஒரு லிங்கம் வழிபட அமைக்கப் பட்டு உள்ளது. தரையிலிருந்து முதன்மை லிங்கத்தை வழி படும் வரை இருபுறமும் லிங்கங்கள் அமைக்கப் பட்டுள்ளன. காண்போரைக் கவரச் செய்கிறது. இக்கோவில் அண்மையில் உருவாக்கப் பட்டதாகும். இவ்வாறு அண்மையில் உருவாக்கப்பட்ட கோவில்கள் சேலம் எங்கும் உள்ளன. பழமையான கோவில்களும் உள்ளன.
சுப்பிரமணிய சுவாமிகள் ஆசிரம கோவில்
சேலம் நகரின் கிழக்குப் புறம் ஒரு சிறு மலை உள்ளது. மக்கள் மலைக்கு நாமம் இட்டு மலையை
நாமமலை என அழைத்து வருகின்றனர். அடிப் பகுதியில் ராமர் கோவில் உள்ளது. அகத்தியர் சுனை ஒன்று உள்ளது. இங்கு சோமேஸ்வர கடவுள் ஆலயம்
பராமரிக்கப் பட்டு வருகிறது.
.
சேலம் மாநகரில் மட்டும் ராஜகணபதி, கோட்டை பெரிய மாரியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன், கிச்சி பாளையம் சின்ன மாரியம்மமன்,
வழி வாய்க்கால் காளியம்மன்,
கன்னிகா பரமேஸ்வரி , சின்ன திருப்பதி , ஸ்ரீ பாண்டுரங்கா நாதா சுவாமி, பட்டைக்கோவில் ஸ்ரீ பிரசன்னா வரதரஜர் , எல்லைப் பிடாரி அம்மன், நெத்தி மேடு கரிய
பெருமாள் என ஏராள கோவில்கள் உள்ளன. பெரு தெய்வங்கள் , சிறு தெய்வங்கள் என எல்லா தெய்வங்களும் சேலத்தில் ஆக்கிரமித்துள்ளன. சேலம் மாநகரில் பேர்லாண்ட்ஸ் பகுதியில்
ஒரு திருப்பதி கோவில் கட்டப் பட்டுள்ளது.
சேலத்தில் தெய்வங்கள் இருந்தாலும் சேலத்துக்கு முனியப்பன் நிலம் என்றே பெயர். சேலம் மாவட்டத்துக்குள் எண்ணிலடங்கா முனியப்பன்கள் உள்ளனர். மக்கள் முனியப்பனைக் காவல் தெய்வமாக வழி பட்டு வருகின்றனர்.சேலம் கோட்டைப் பகுதியில் மாநகராட்சிக்கு அருகே அரசு அதி நவீன சிறப்பு மருத்துவமனைக்கு எதிரே ஒரு கோவில். அதில் இருக்கும் தெய்வத்தை மக்கள் தலை வெட்டி முனியப்பன் என்கின்றனர்.
உண்மையில் அது புத்தர் என்கிறார் கவிஞர் தமிழ் நாடன்.முனியப்பன் என்றால் உயரமும் ஒரு கம்பீரமும் இருக்கும். சேலம் பெங்களுர் பிரதான சாலையில் மாமாங்கம்
என்னுமிடத்தில் வெண்ணங்குடி முனியப்பனும் மேட்டுர் அணை முன் உள்ள ஒரு முனியப்பனும் மிகவும் பிரசித்தி பெற்றவர்கள் ஆவர்.
சேலம் மாகரில் ஆடி மாததத்தில் மாரியம்மன் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். கோட்டை, குகை, அன்னதானப்ப, செவ்வாய்பேட்டை மாரியம்மன், லைன்மேடு, சஞ்சீவிராயன் ஆகிய இடங்களில் உள்ள மாரியம்மன்களுக்கு ஒரு சேர விழா ஆடி மாதம் நடத்தப்படும். சுற்றுப்பறத்தில் உள்ள மற்ற அம்மன்களுக்கு, தை அல்லது மாசி மாதம் விழா நடத்தப் படும். வேறு வேறு மாதங்களில் விழா நடத்தப்
படுவதால் இங்கிருப்பவர் அங்கும் அங்கிருப்பவர் இங்கும் சென்று உறவு தொடர ஏதுவாக உள்ளது.
ஆடி மாதம் பதினெட்டு அன்று ஆடிப் பெருக்கை முன்னிட்டு மக்கள் மேட்டூர் சென்று
நீராடி மகிழ்கின்றனர். காவேரி சங்கமிக்கும் பவானி கூடுதுறைக்கும் செல்வர். பொங்கலின் போது கரி நாள் அன்று அதாவது திருவள்ளுவர் தினத்தன்று மக்கள் சேலம் நெத்தி
மேட்டில் அமைந்துள்ள கரிய பெருமாள் கரடு ஏறி பெருமாளை வணங்கி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
பஞ்ச பூத திருத்தலங்கள்
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவை ஐந்தும் சேர்ந்ததே உலகம் என்பர். இதனை உணர்த்தும் வகையில் தான் இறைவன் பஞ்சபூத திருத்தலங்களில் கோவில் கொண்டு இருக்கிறார் என்பர். காஞ்சீபுரத்தில் (நிலம்) ஏகாம்பரேஸ்வரராகவும், திருவானைக்காவலில் (நீர்) ஜம்புகேஸ்வரராகவும், திருவண்ணாமலையில் (நெருப்பு) அருணாசலேஸ்வரராகவும், காளஹஸ்தியில் (காற்று) காளத்தீஸ்வரராகவும், சிதம்பரத்தில் (ஆகாயம்) நடராஜராகவும் வீற்றிருந்து அருள்பாலித்து கொண்டிருக்கிறார் என்பர். இந்த ஐந்து திருத்தலங்களும் தென்னிந்தியாவிலேயே அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல சேலம் மாவட்டத்திலும் பஞ்சபூத திருத்தலங்கள் உள்ளன. இவை வசிஷ்ட நதிக்கரையோர பஞ்சபூதத் திருத்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சேலம் மாவட்டத்தில் தொடங்கி விழுப்புரம் மாவட்ட எல்லை வரையில் வசிஷ்ட நதிக்கரை ஓரத்தில் இந்த 5 ஆலயங்களும் அமைந்திருக்கின்றன. வசிஷ்ட மகரிஷி யாகம் செய்த நதிக்கரையோரம் என்பதால் இது வசிஷ்ட நதி என்று பெயர்பெற்றது என வரலாறு கூறுகிறது.
சேலம் மாவட்டம் பேளூரில் (நிலம்) தான்தோன்றீஸ்வரராகவும், ஏத்தாப்பூரில் (நீர்)சாம்பமூர்த்தீஸ்வரராகவும், ஆத்தூரில் (நெருப்பு) காய நிர்மலேஸ்வரராகவும், ஆறகளூரில் (காற்று) காமநாதீஸ்வரராகவும், விழுப்புரம் மாவட்ட எல்லையில் உள்ள கூகையூரில் (ஆகாயம்) சொர்ணபுரீஸ்வரராகவும் சிவபெருமான் அருளாட்சி புரிகிறார் என்பர். இந்த ஐந்து திருத்தலங்களும் வசிஷ்ட நதிக்கரையிலேயே அமைந்திருப்பது ஒரு சிறப்பம்சம்.
தியாகனூர் புத்தர் சிலை
சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம் தியாகனூரில் இரு புத்தர் சிலைகள் உள்ளன. 01. தியாகனூர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள புத்தர் சிலை02. திறந்த வெளியில் உள்ள புத்தர் சிலை. இச்சிலைகள் ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்தவை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் இப்புத்தரை தியாகன் என்றே அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் குறிப்பிட்டு வந்தனர். அதற்கு காரணம் புத்தர் பெருமானின் துறவு வாழ்க்கை. ஞானம் பெறுவதற்காக தம்முடைய மனைவி, மக்கள், உறவினர்கள், அரச வாழ்க்கை ஆகிய அனைத்தையும் தியாகம் செய்ததால் தியாகன் என அழைக்கப்பட்டார். எனவே இவ்வூர் தியாகன் + ஊர் = தியகனூர் எனப் பெயர் பெற்றது என்கின்றனர். தியாகனூரின் தென்பகுதியில் உள்ள வயல்பகுதியில் உள்ள வேப்பமரத்தடியில் ஒரு புத்தர் சிலை இருந்தது. நிலத்தின் உரிமையாளர் இச்சிலையை பாதிக்காத வண்ணம், இச்சிலையை சுற்றி உள்ள நிலத்தை விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்து இருக்கின்றார். விவசாயி கே துரைசாமி புத்த விகார் அமைக்க 1955 இல் 20 சென்ட் நிலம் தனமாக வழங்கினார். பெங்களூரில் உள்ள பௌத்த பிக்குகள் இக்கிராம மக்களுக்கு முறையான வழிமுறையை பயிற்சி அளிக்க விரும்பினர். இதற்கு ஆகும் செலவினங்கள் அனைத்தும் அவர்கள் ஏற்பதாக உறுதியளித்தும் மக்கள் விருப்பம் இல்லாததால் தமக்கு தெரிந்த முறையில் இன்றும் வணங்கி வருகின்றனர்.பல நூற்றாண்டுகளாக திறந்த வெளியில் இருந்த இச்சிலைக்கு 50 இலட்சம் ரூபாயில் ஒரு தியான மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இத்தியான மண்டபத்தை சேலம் மாவட்ட ஆட்சியாளர் மகரபூஷணம் போதி கன்று ஒன்றை நட்டு 28 ஜூன் 2013ல் திறந்து வைத்தார்.100 பேர் அமரும் அளவிற்கு இத்தியான மண்டபம் உள்ளது..
மசூதிகள்
சேலம் மாவட்டத்தில் ஏராளமான மசூதிகள் உள்ளன. அவைகளில் முக்கியமானது சேலம் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஜாமியா மசூதி ஆகும்.இது திப்பு சுல்தானால் கட்டப்பட்டது. திப்பு சுல்தான் இம் மசூதியில் தொழுததாகவும் கூறப படுகிறது. எனினும் மிக பழமையானது சேலம் கோட்டையிலுள்ள சின்ன மசூதியாகும். செவ்வைப் பகுதியில் ஒன்றும் அன்னதானப் பட்டியில் ஒன்றும் சூரமங்கலம் பகுதியில் ஒன்றும் உள்ளது. மேலும் முகமது புரா மற்றும் ஜலால் புரா ஆகிய பகுதிகளிலும் தலா ஒரு மசூதி உள்ளது. மசூதிகள் தவிர கோரி மேடு , சேலம் , செவ்வாய் பேட்டை, சன்னியாசி கண்டு ஆகிய இடங்களில் தர்காக்கள் உள்ளன.
சர்ச்சுகள்
சேலம் மாநகரின் பழமையான சர்ச் சேலம் செவ்வாய்ப் பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஜெயராணி சர்ச் ஆகும்.1864 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. 1924ஆம் ஆண்டு சூரமங்கலம் பகுதியில் செயின்ட் ஜோசப் சர்ச் தொடங்கப் பட்டுள்ளது இதற்கு அடுத்ததாக ஜான்சன் பேட்டையில் 1933 ஆம் ஆண்டு செயின்ட் அந்தோனி சர்ச் தொடங்கப் பட்டது.
1991 ஆம் ஆண்டில் மாநகரின் பிறிதொரு பகுதியான சன்னியாசிக் குண்டில் ஒரு சர்ச்
கட்டப் பட்டுள்ளது. இவைகள் கத்தோலிக் சர்ச் ஆகும். அண்மையில் சேலம் மாநாரில்
பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியின் நான்கு ரோடு அருகில் குழந்தை ஏசு பேராலாயம் கட்டப் பட்டுள்ளது, ஆண்டு 1994. இது மிகப் பெரியது.
சேலத்தில் உள்ள மிகப் பழமையாான லெக்லர் சர்ச், செவ்வாய் பேட்டயில் சி.எஸ்.ஐ.
பள்ளி வளாகத்தில் அமைந்தது ஆகும்.1829ஆம் ஆண்டு முதல் செயல் பட்டு வருகிறது.
சேலத்தின் மையப் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ மனை எதிரில் கிறிஸ்ட் சர்ச் அமைந்துள்ளது. 1875 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இதே போன்ற கிறிஸ்ட் சர்ச் அரிசி பாளையத்திலும் காக்கையன்
சுடுகாட்டிலும் உள்ளது.
ஏற்காடு
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப் படும் ஏற்காடு சேலம் மாவட்டத்தின் கிழக்கு மலைத் தொடரில் சேர்வராயன் மலைப் பகுதியில் அமைந்துள்ளது.சேலத்தில் இருந்து இதன் துாரம் 36 கி மீ. இதன் பரப்பு 382. 67 ச.கி.மீ.. கடல் மட்டத்தில் இருந்தது 4966 அடி உயரத்தில் உள்ளது. ஏற்காட்டின் மையப் பகுதியில் ஓர் ஏரி உள்ளது. காட்டுக்குள் அதாவது வனத்துக்குள் இருப்பதால் ஏரிக் காடு என்பது ஏற்காடு ஆகியது என்பர். இங்கு கடல் மட்டத்தில் இருந்து 5326 அடி உயரத்தில் சேவராயன் கோவில் உள்ளது. இதனால்சேவராயன் மலை என்றானது என்னும் தகவலும் உண்டு. இங்கு கிள்ளியூர் நீர் வீழ்ச்சி உள்ளது. பகோடா முனை முக்கிய பகுதியாகும். எற்காடு மலை மீது இருந்து பார்த்தால் சேலம் நகரம் முழுமையாக தெரியும். ஏரியில் படகு சவாரி செய்யவும் வசதி உண்டு. இம்மலையின் முதன்மையான பயிர் தேயிலை. சேலத்தின் முக்கிய சுற்றுலா பகுதியாகவும் ஏற்காடு விளங்குகிறது.
பூங்காக்கள்
சேலம் மாவட்ட மக்களுக்கு பொழுது போக்குவதற்கான அம்சங்கள் குறைவு. மக்களின்
பொழுது போக்கு இடங்களாக சில பூங்காக்களே உள்ளன. சேலம் மாநகரில் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஐந்து ரோடு செல்லும் சாலையில் நான்கு ரோடுக்குஅருகில் அண்ணா பூங்கா அமைந்துள்ளது. ஏற்காடு அடிவாரத்தில் குருமம்பட்டி
என்னுமிடத்தில் ஒரு விலங்குகள் பூங்கா உள்ளது, இது தவிர மலையில் அண்ணா பூங்கா ஒன்று உள்ளது.
விமான நிலையம்
சேலத்திலிருந்து பெங்களுர் நெடும் சாலையில் ஓமலுார் அருகில் காமலாபுரம்
என்னுமிடத்தில் ஒரு விமான நிலையம் உள்ளது. சேலம் விமான நிலையம் ( salem aiport) என்பது பெயர்.1993 ஆம் ஆண்டு தொடங்கப் பட்டதாகும். சேலத்தில் இருந்து 20 கி. மீ தொலைவில் உள்ளது. இதன் பரப்பு 136 ஏக்கர், கிங் பிஷர் ஏரலைன்சுடன் இணைக்கப்பட்டுள்ளது. சேலத்துப் பயணிகள் ஆர்வம் காட்டாததால் பயன் படுத்தப் படாமல் இருந்தது.எனினும் தற்போது 2000 ஆம் ஆண்டு முதல் தேவைக்கு எற்ப பயன் படுத்தப்பட்டு வருகிறது.
தொடர் வண்டி நிலையம்
சேலம் பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய போருந்து நிலையம் ஆகிய நிலையங்களில் இருந்து தாரமங்கலம் செல்லும் வழியில் சூரமங்கலம் என்னுமிடத்தில் தொடர் வண்டி நிலையம் அமைக்கப் பட்டுள்ளது. தொடர் வண்டிகள் சந்திக்கும் இடம் என்பதால் அந்த இடத்துக்கு பெயர் ஜங்ஷன் என்றானது. சேலம் தொடர் வண்டி நிலையம் வழியாக மும்பை, டில்லி, கொல்கத்தா, கேரளா, கன்னியா குமரி என அனைத்து ஊர்களுக்கும் வண்டி உள்ளது. சென்னை மற்றும் பெங்களூருக்கு சேலத்திலிருந்தே நேரடியாக தொடர் வண்டி உள்ளது. 2007ஆம் ஆண்டு கோட்டம் (railway division) ஆக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. நடை மேடையும் எட்டாக அதிகரிக்க நடைபெற்று வருகிறது. கோட்டத்தின் மொத்த தூரம் 842 கி. மீீ.. தென்னக ரயில்வேயில் சேலம் முக்கியமானதாகும். தினசரி சராசரி 140 தொடர் வண்டிகள் சேலம் சந்திப்பில் வந்து செல்கின்றன. சேலத்தில் இருந்து திருப்பத்துார் வரை முதல் தொடர்வண்டி இயக்கப் பட்டது. நாள் 01.02. 1861. இதுவே பின்னர் சங்ககிரி வரை நீட்டிக்கப்பட்டது.
பேருந்து நிலையங்கள்
சேலத்தில் தற்சமயம் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் என இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. தற்போதைய பழைய பேருந்து நிலையமே முன்புசேலத்தின் பிரதான நிலையமாக இருந்தது. இங்கிருந்தே அனைத்து ஊர்களுக்கும் பேருந்து சென்றது. ஊர்களில் இருந்தும் வந்தன.மக்களின் பெருக்கத்தால் போக்கு வாத்து அதிகரிப்பால் இடப்பற்றாக் குறையால் பேருந்து நிலையத்தில் இருந்து ஐந்து ரோடு செல்லும் வழியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப் பட்டது.1990 ஆம் ஆண்டு அச்சுவான ஏரி மீது ஸ்வர்ணபுரி அருகே உருவாக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப் பட்டுள்ளது உள்ளூர் பேருந்துகள் வந்து செல்லும் நிலையமாக பழைய பேருந்து நிலையமும் வெளியூர் பேருந்துகள் வந்து செல்லும் நிலையமாக புதிய பேருந்து நிலையமும் உள்ளது. எந்த பிரச்சனைக்காக புதிய பேருந்து நிலையம் தொடங்கப்பட்டதோ மீண்டும் அதே இட நெருக்கடி. போக்குவரத்து நெரிசல். பழைய பேருந்து நிலையம் மாற்றியமைக்கப்பட்டு விரிவாக்கப்பணி நடைபெறுகிறது. போக்குவரத்து நெரிசலை சமாளிக்கு சேலம் மையப்பகுதியில் புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
பழைய பேருந்து நிலையம் முன்புறம் தலைமை அஞ்சல் அலுவலகம் மற்றும் தொலை
பேசித்துறையும் உள்ளது. ஒரு புறம் சுபாஷ் சந்தர போஸ் பெயரில் ஒரு மைதானம் உள்ளது. நேரு கலையரங்கம் உள்ளது. பின்புறம் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்ட ஒரு வணிக வளாகம் உள்ளது. மறுபுறம் கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பழைய பேருந்து நிலைய
அருகிலேயே உள்ளது. புதிய பேருந்து நிலையம் சுற்று பகுதியில் வியாபார தளமாக
உள்ளது. இரண்டிலும் புதிய பேருந்து நிலைய பகுதியே துரிதமாக வளர்ச்சி பெற்று
வருகிறது.1914 ஆம் ஆண்டு சேலத்திலிருந்து நாமக்கல் வரை முதல் பேருந்து இயக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகள்
சேலத்தில் பல நெடுஞ் சாலைகள் உள்ளன. இந்தியாவின் வட கோடியிலுள்ள
வாரனாசியில் இருந்து தென் கோடியில் உள்ள கன்னியா குமரி செல்லும் தேசிய நெடுஞ்
சாலை 7 சேலம் வழியாக செல்கிறது. சேலத்திலிருந்து உளுந்துார் பேட்டை வரை செல்லும் தேசிய நெடுஞ் சாலை 68 ஆத்துார் வழியாக சேலத்தைக் கடக்கிறது. சேலத்தில் இருந்து கன்னியா குமரி வரை நீள்கிறது தேசிய நெடுஞ் சாலை 47. சேலத்தில் உள்ள அயோத்தியா பட்டிணத்தில் தொடங்குகிறது மாநில நெடுஞ் சாலை 18. இது ஜோலார் பேட்டை வரைச் செல்கிறது. சேலத்தில் உள்ள அரியானுாரில் தொடங்கி வீரபாண்டி வழியாக திருச்செங்கோடு செல்கிறது. மாநில நெடுஞ் சாலை 86 a. மாநில நெடுஞ்சாலை 160 சேலத்தில் உள்ள அயோத்தியா பட்டிணத்தில் தொடங்கி பேளூர் வரைச் செல்கிறது.ஜாகீர் ரெட்டி பட்டியில் தொடங்கி ஐந்து ரோடு அஸ்தம்பட்டி வழியாக ஏற்காடு செல்லும் மாநில நெடுஞ் சாலை எண் 188.
பேருந்துகள்
1997ஆம் ஆண்டு வரை அண்ணா போக்குவரத்துக் கழகமாக இருந்து தற்போது தமிழ் நாடு அரசு போக்கு வாத்துக் கழகமாகி கோட்டம் 1ன் மூலம் சேலத்துக்கு பேருந்துகளை இயக்கி வருகிறது. பெரும் பான்மையான பேருந்துகளை இயக்குவதுடன் சேலம் மாவட்டத்தின்
அனைத்து பகுதிகளையும் இணைக்கிறது. அருகிலுள்ள மாவட்டங்களான நாமக்கல்், ஈரோடு , கரூர் , திருவண்ணா மலை , தர்மபுரி , கிருஷ்ண கிரி உள்பட அணைத்து மாவட்டங்களுக்கும் செல்கிறது.சென்னைக்குச் செலுத்துவதுடன் கர்நாடகா , ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் பயணிக்கிறது. மற்ற போக்குவரத்துக் கழகங்களான S.E.T.C.
K.S.R.T.C. , P.R.T.C. , ஆகியவைகளின் பேருந்துகளும் சேலத்திற்கு வந்து செல்கின்றன.
மருத்துவ மனை
சேலத்தின் மையப் பகுதியில் ஓர் அரசு மருத்துவமனை உள்ளது. அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லாரி மருத்துவ மனை என்பது அதன் பெயர். 1858ல் தொடங்கப்பட்டு 1871 ஆம் ஆண்டு மருத்துவ மனையாக்கப் பட்டது. பின்னர் 1884 ஆம் ஆண்டு நகரவை மருத்துவமனையாகி மக்களுக்கு வைத்தியம் செய்து வந்தது. செவிலியர் பயிற்சி நிலையமும் உண்டு. பின்னர் மருத்துவ மனையுடன் மருத்துவக்கல்லலூரியும் இணைக்கப் பட்டது. ஆண்டு 1986. தமிழ் நாடு டாக்டர் எம்.ஜி. ஆர், மருத்துவபல்கலைக் கழகத்துடன் இணைக்கப் பட்டதாகும்.மருத்துவத் கல்லுாரி தாரமங்கலம் செல்லும் வழியில் இரும்பாலைக்கு முன்பாக உள்ளது. ஆகஸ்ட் 2010 இல் 140 கோடி செலவில் அதி நவீன மருத்துவ மனையாக்கப் (super speciality hospital) பட்டுள்ளது . தமிழ் நாட்டிலேயே அதி நவீன மருத்துவ மனை எங்கும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.
மாவட்ட ஆட்சியரகம்
சேலத்தின் அடையாளமாகவும் பழமை வாய்ந்த கட்டடமாகவும் விளங்கியது சேலத்தின்
பழைய மாவட்ட ஆட்சியரகம். பழைய மாவட்ட ஆட்சியரகம் பயன் பாட்டுக்கு எற்றதல்ல என்றும் பாதுகாப்பு அற்றது என்றும் பல்வேறு நோக்கங்களுடனும் பழைய கட்டடம்் இடிக்கப் பட்டு புதிய கட்டடம் ஒன்று மாவட்ட ஆட்சியரகத்துக்குக் கட்டப் பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரகம் மட்டுமல்லாமல் ஒரே வளாகத்துக்குள்ளேயே அனைத்துத் துறைகளும் செயல்பட வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட மக்கள் எங்கும் அலைய வேண்டியதில்லை. ஒரு வளாகத்துக்குள்ளேயே அனைத்துத் துறைகளும் இருப்பதால் ஒரு வரம் என்றே குறிப்பிடலாம். சேலம் அரசு மருத்துவ மனையும் சேலம் மாவட்ட ஆட்சியரகமும் சேலத்தின் முக்கிய பகுதியில் புதிய பொலிவுடன் காட்சி அளிக்கின்றன.
அருங்காட்சியகம்
சேலத்தில் ஓர் அருங்காட்சியகம் 1976 ஆம் ஆண்டு சேலம் மாவட்ட ஓவிய எழுத்தாளர் மன்றம் குறிப்பாக கவிஞர் தமிழ் நாடன் , ஒவியர் எஸ்.கே.ராஜ வேலு ஆகியோர் உதவியுடன் மாவட்ட ஆட்சியர் திரு ஏ. எம். சுவாமி நாதன் அவர்களால் தொடங்கப்
பட்டது. சேலம் மாவட்டமே சொந்தமாக அருங்காடசியக்த்தை முதன் முதலாக அமைத்துக்
கொண்ட மாவட்டம் ஆகும்.
1979ஆம் ஆண்டு அருங் காட்சியகத் துறை சேலம் அருங்காடசியகத்தைத் தன் வசம்
எடுத்துக் கொண்டது. பல்வேறு கலைப் பொருள்கள் வைக்கப் பட்டுள்ளன. கண்டெடுத்த
சிலைகள் உள்ளன. கல்வெட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. சேலம் அருங்காட்சியகத்தில்
பழமையானவை இடம் பெற்று இருந்தாலும் சேலம் அருங்காட்சியகத்திற்கு ஒரு நிரந்தர இடம் இல்லை.
தொடக்கத்தில் தற்போதைய புதிய பேருந்துநிலையம் உள்ளதின் அருகில் இருந்தது. பின்பு கோட்டைப் பகுதிக்கு மாற்றப்பட்டது. அதி நவீன மருத்துவ மனைக்கு ஒதுக்கப்பட்டதால் தற்சமயம் பேர்லாண்ட்ஸில் உள்ள இசைக்கல்லூரி வளாகத்தில் இயங்கி வருகிறது.
நுாலகம்
சேலம் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான ஒரு மைய நுாலகம் உள்ளது. 1953 ஆம் ஆண்டு
முதல் மாவட்ட மைய நுாலகம் செயல் பட்டு வருகிறது. 1981 ஆம் ஆண்டு வரை வாடகைக்
கட்டடத்தில் இயங்கி வந்த மைய நுாலகம் சேலம் அரசுக் கலைக் கல்லூரியின் இடது
புறத்தில் சொந்த கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த நுாலகத்தில் தற்போது ஒரு
லட்சத்திற்கும் மேற்பட்ட நுால்கள் உள்ளன. 5000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். பருவ இதழ்களும் வரவழைக்கப் படுகின்றன. சேலத்தின் முதல் நூலகராக திரு. வேலாயுதம் அவர்கள் இருந்துள்ளார்.
மாவட்ட மைய நுாலகம் தவிர சேலம் மாநகரில் அம்மாபேட்டை , ஸ்வர்ணபுரி , சூரமங்கலம், கன்னங் குறிச்சி, குகை, அரிசிபாளையம் ஆகிய பகுதிகளில் கிளை நூலகங்கள் இயங்கி வருகின்றன. கோட்டைப் பகுதியில் இருந்த நுாலகம் சேலம் அதிநவீன மருத்துவ மனை தொடங்கப் பட்டதால் அதன் முன் புறம் உள்ள சாலை விரிவாக்கத்தின் போது இடிக்கப்பட்டு விட்டது. மாவட்டம் தோறும் பல்வேறு இடங்களில் நுாலகங்கள் உள்ளன. சேலம் மாநகரின் மற்றொரு முக்கிய நுாலகம் டாக்டர் சி. விஜயராகவாச்சாரியார் நினைவு நூலகம். சேலம் மாவட்டம் மைய நூலக எதிரிலேயே செரி சாலையில் உள்ளது. சேரராஜன் சாலையே செரி சாலையாக மருவி விட்டது. டாக்டர் சி. விஜயராகவாச்சாரியார் ஒரு பெரும் கங்கிரஸ் தலைவர். அவர் இறப்பிற்குப் பிறகு அவர் நினைவாக கட்ட வேண்டும் என்று ஒரு குழு அமைத்து முடிவெவெடுத்து கட்டப்பட்டது. குழுவுடன் ராஜாஜி, ஆர். டி. பார்த்தசாரதி ( விஜயராகவாச்சாரியார் பெயரன்), டாகடர் பி. சுப்புராயன் ஆகியோர் அடங்கிய அமைப்பும் ஏற்படுத்தப்பட்டு நகரவையிடம் நிலம் வாங்கி உருவாக்கப் பட்டது. 1965 ஆம் ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் அப்போதைய குடியாக தலைவர் அவர்களால் தொடங்கி வைக்கப் பட்டது. இதற்கென்றும் தனியாக வாசகர்கள் உள்ளனர்.
சேலம் விட்டரரி சொசைட்டி
சேலத்தில் அமைந்துள்ள சேலம் லிட்டரரி சொசைட்டி முக்கியமானதாகும். சேலம்
மக்களின் சமூக வாழ்வை முன்னேற்றுவதும் மக்களை அறிவுடையவர்களாக ஆக்குவதும்
இதன் நோக்கம் ஆகும். ஒரு முன்னேற்ற சங்கமாக 1872 ஆம் தொடங்கப் பட்டு பின்னரே
பெயர் மாற்றப் பட்டது. ராஜாஜி, பி. வி. நரசிம்ம ஜயர் , கே. ஜி. வெங்ட சுபா ஜயர்ஆகிய பிரபலங்கள் சந்திந்து அர்சியல், கலாச்சாரம், அறிவியல் குறிந்து விவாதித்துள்ளனர்.
தொழில்கள்
இரும்பாலை
சேலம் மாவட்டத்திற்கு பெயர் சொல்லும் விதமாக அமைந்துள்ளது சேலம் இரும்பாலை. இந்த ஆலை சேலத்தில் இருந்து தாரமங்கலம் செல்லும் வழியில் மிகப் பெரிய பரப்பளவில் அமைந்துள்ளது. சேலம் கஞ்ச மலையில் இரும்பு தாது உள்ளது என்றும் அதிலிருந்து இரும்பு எடுக்கலாம் என்று கட்டப் பட்டதாகும். உருக்காலையாக இருக்க வேண்டிய ஆலை தற்போது வெறும் உருட்டாலையாக உள்ளது. இதனால் சேலத்திற்கு இரும்பு நகரம் என்றும் பெயர் உண்டு.
பால் பண்ணை
தமிழ் நாடடில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பால் பண்ணை உள்ளது. தமிழ் நாடு அளவில் அதன் பொது பெயர் ' ஆவின் '. சேலத்தில் அதன் பெயர் சேலம் மாவட்டக்கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம். சுருக்கமாக சேலம் பால் பண்ணை. பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கிராம அளவிலுள்ள கூட்டுறவு சங்கங்கள் மூலம் பாலைக் கொள்முதல் செய்து பதப் படுத்தி பொட்டலங்களில் அடைத்து பொது மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது. தினசரி ஐந்து லட்சம் லிட்டருக்கு மேல் கொள்முதல் செய்து சென்னைக்கு இரண்டு லட்சம் அளவில் அனுப்பி விட்டு ஒரு லட்சத்து ஐம்பாதாயிரம் அளவில் சேலம் மாவட்ட மக்களுக்கு விநியோகித்து வருகிறது. மீதமுள்ள பாலை பவுடர், வெண்ணெய், நெய் ஆக்கி விறபனைச் செய்துவருகிறது. தமிழ் நாட்டில் பால் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபடும் நான்கில் ஒன்றாக விளங்குகிறது. கோவா போன்ற இனிப்பு வகைகளையும் உற்பத்திச் செய்து விற்பனைச் செய்து வருகிறது.
கிழங்கு தொழிற் சாலை
சேலம் மாவட்டத்தில் கிழங்கின் உற்பத்தி அதிகம் ஆகும். கிழங்கு ஒரு வகை உணவாக பயன்படுத்தப் பட்டு வருகிறது. எனினும் உபரியானவற்றை மாவாக்குவதற்கு, அரிசியாக்குவதற்கு ஏராளமான தொழிற்சாலைகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. இங்கு உற்பத்தியாகும் அரிசி (sago) மற்றும் மாவு (starch) ஆகியவை வட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றன. இதற்காக ஒரு கூட்டுறவு நிறுவனம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. சேகோ சர்வ் என்று சுருக்கமாகக் கூறப் படும் அந்த நிறுவனம் சேலம் பெங்களுர் சாலையில் இரும்பாலை செல்லும் வழிக்கு எதிராக அமைந்துள்ளது
வெள்ளி
சேலம் மாவட்டத்தின் முக்கிய தொழிலாக வெள்ளியிலான பொருள்கள் தயாரிப்பது ஆகும்.
சேலத்தில் நெசவுத் தொழில் பாதிக்கப் பட்ட போது மக்கள் வறுமையில் வாடிய வேளை
இத் வெள்ளித் தொழிலில் ஈடுப்ட்டனர். கொலுசு, மெட்டி, அரைஞான் ஆகியவைத் தயாரிக்கப் பட்டன. சேலத்தில் தயாரிக்கப் படும் வெள்ளிப் பொருள்களுக்கு ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் நல்ல வரவேற்பு உண்டு. ஆந்தி ராவில் இருந்து வெள்ளி கட்டிகள் வரவழைக்கப் பட்டு வெள்ளியிலான பொருள்கள் தயாரிப்பில்
எராளமான சேலம் மக்கள் ஈடுபட்டுள்ளனர். சேலம் மக்களின் ஆதாரமாக வெள்ளி உள்ளது. சேலத்தில் நெசவும் ஒரு முக்கியத் தொழில்.
மேக்னசைட்
சேலத்தில் கஞ்ச மலையில் இரும்பு கிடைக்கிறது என்றால் மற்றொரு புறம் மேக்னசைட் கிடைக்கிறது. சேலத்தில் இருந்து ஒமலுார் செல்லும் சாலையில் இரண்டு மேக்னசைட் நிறுவனங்கள் உள்ளன. ஒன்று தமிழ்நாடு மேக்னசைட். இரண்டு டால்மியா மேக்னசைட். தனியாருடையது.
சேலம் தந்த முதலமைச்சர்கள்
தமிழகத்திலேயே சேலம் மட்டுமே மூன்று முதலமைச்சர்களைத் தந்துள்ளது. பிரிக்கப்படாத சேலம் மாவட்டத்தில் ஒசூரில் தொரப்பள்ளி என்னுமிடத்தில் பிறந்த ராஜகோபாலாச்சாரி என்கிற ராஜாஜி தமிழகத்தில் சுதந்திரத்திற்கு முன்பும் சுதந்திரத்திற்கு பின்பும் முதலமைச்சராக இருந்துள்ளார். தற்போது எடப்பாடி கே. பழனிசாமி முதல் அமைச்சராக இருந்து வருகிறார். முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியும் மாடர்ன் தியேட்டர்ஸில் கதை வசனம் எழுதிக்கொண்டிருந்த போது சேலத்தில் வசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்கங்கள்
1.இந்திய தேசிய காங்கிரஸ்
1885ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப் பட்டது. இது வெள்ளையருக்கு
எதிரானது. இதன் நோக்கம் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத் தருவதுமாகும்.இந்த
இயக்கத்தின் தலைவர்களில் ஒருவாரான சி. விஜய ராகவ ஆச்சாரியார் சேலத்தைச் சேரந்தவர்
ஆவார். மற்றொருவர் ராஜகோாபால ஆச்சாரி ( சுருக்கமாக ,பரவலாக ராஜாஜி என்று
அழைக்கப் பட்டவர் ) இவரும் சேலத்தைச் சேர்ந்தவர். அப்போது பிரிக்கப்படாத மாவட்டம்.
1918ஆம் ஆண்டு சேலம் மாவட்ட அளவில் ஒரு காங்கிரஸ் கூட்டம் நடத்தத் திட்டமிட்டப்பட்டு
நடத்தப்பட்டுள்ளது. ஏற்பாடு செய்தவர் டி.ஆதி நாராயணா செட்டியார். முக்கியப்
பங்காற்றியவர் ராஜாஜி. 1920 ஆம் ஆண்டு நாக்பூரில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில்
சேலம் சார்பாக வி. கே. பெருமாள் செட்டியார் கலந்து கொண்டுள்ளார். 1923 ஆம் ஆண்டு
செபடம்பர் மாதம் மாநில காங்கிரஸ் கூட்டம் சேலத்தில் நடந்துள்ளது. 1927 ஆம் ஆண்டு
வ.உ. சிதம்பரம் பிள்ளை தலைமையில் காங்கிரஸ் இயக்கத்தின் மூன்றாம் அரசியல்
கூட்டம் நடத்தப் பட்டுள்ளது.
1942ஆம் ஆண்டு கொயட் இ
கருத்துகள்
கருத்துரையிடுக