காலிகள் – இலக்குவனார் திருவள்ளுவன் ஃஃஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 13 April 2025

காலிகள் – இலக்குவனார் திருவள்ளுவன் ஃஃஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 13 April 2025 அகரமுதல காலிகள் புதிய அறிவியல் – செவ்வாய்க் கிழமை, புரட்டாசி 2, 2043 12:03 இதிநே Tuesday, September 18, 2012 12:03 IST மூன்று கால்கள் கொண்ட இருக்கையை முக்காலி என்றும் நான்கு கால்கள் கொண்ட இருக்கையை நாற்காலி என்றும் நாம் சொல்கிறோம். அதைப்போல் உயிரினங்களையும் கால்களின் எண்ணிக்கை அடிப்படையில் பெயரிட்டு வகைப்படுத்துவது அறிவியல். மிகுதியான எண்ணிக்கையில் கால்கள் கொண்ட பூச்சியை ஆயிரங்கால் பூச்சி என்று சொல்வதுபோல் பின்வரும் பெயர்களின் அடிப்படையில் அவற்றிற்கான விளக்கங்களை நாம் அறிந்து கொள்ளலாம். எடுத்துக் காட்டாகச் சொல்வாதானால் பதின்காலி என்றால் பத்து கால்களை உடைய உயிரி இழுநகக்காலி என்றால் இழுத்துக்கொள்கின்ற நகங்களை உடைய கால்களைக் கொண்ட உயிரி எனலாம். இனி இத்தகைய உயிரிகளின் வகைகளைப் பார்ப்போம். அறுகாலி – hexapod ஆட்டுக்காலி – capriped ஆயிரங்காலி – millepede இணைப்புக் காலி – arthropod இருகாலி – biped இழுநகக்காலி – aeluropodous ஈரிரு காலி (நாற்காலி) – tetrapod உகைப்புக் காலி copepod எண்காலி – octopod ஏழிணைக்காலி – isopod ஒழுங்கிலி (விரற்) காலி – anomaliped ஒற்றைக்காலி – uniped குட்டைக்காலி – breviped கைபோல் காலி – brachiopod கோணற்காலி – taliped சாய்காலி – anglepod சிறகுக்காலி – pteropod சுணைக்காலி – chaetopod சுருள்காலி – cirriped தட்டைக்காலி – branchiopod தலைபோல்காலி – cephalopod தழைக்காலி – phyllopod துடுப்புக்காலி – pinniped நடைகாலி – Pereiopod நீந்துகாலி – Pleopod நுண்ணிழைக்காலி-Campodea நூறுகாலி – Chilopoda / centipede பதின்காலி – decapod பல காலி – polypod பற்பல காலி – myriapod/ myriopod பன்முகக்காலி – amphipod பாம்புவடிவக்காலி – anguiped பெருங்காலி – megapod, megapode முவ்விரல் காலி – ornithopod முன்விரல்காலி – aliped மெத்துக்காலி – tylopod வயிற்றுக்காலி – gasteropod http://www.newscience.in/articles/kalika – இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள்