கலைச்சொல் தெளிவோம்! 124 : அதரி-valve
இலக்குவனார் திருவள்ளுவன்
29 March 2015 அகரமுதல
வால்வு (valve) என்பதற்குக் கால்நடையியலிலும் மீனியலிலும் தடுக்கிதழ் என்றும், வேளாணியலில் தடுக்கிதழ், ஒருபாற்கடத்தி என இருவகையாகவும், பொறிநுட்பவியலில் தடுக்கிதழ், அடைப்பிதழ், ஓரதர், கவாடம் என நால்வகையாகவும், மருத்துவயியலில் ஒருவழி மடல், கதவம் தடுக்கிதழ், கவாடம் என நால்வகையாகவும், மனையியலில் ஓரதர், வேதியியலில் கவாடம், வால்வு என இருவகையாகவும் பயன்படுத்துகின்றனர்.
அதர் என்னும் சொல் சங்க இலக்கியங்களில் 43 இடங்களில் வருகின்றது. பெரும்பாலும் வாயில் என்னும் பொருளே கையாளப்படுகின்றது.
ஆனினம் கலித்த அதர்பல கடந்து (புறம் 138:1)
மாயாக் காதலொடு அதர்ப்படத் தெளித்தோர் (நற்றிணை : 218.5)
இதன் அடிப்படையில் பிற சொற்களைக் காட்டிலும் ஓரதர் என்பது வால்வு (valve) என்பதற்கு நெருங்கி வருகின்றது. எனினும் ஓரதர், ஈரதர் எனில், எண்ணிக்கையைக் குறிப்பதாக அமையும். எனவே அதரி என்றும் இருமுக அதரி என்றும் குறிப்பிடலாம்.
அதரி-valve
இருமுக அதரி-two port valve
இருமுனை அதரி-bicuspid valve
காப்பதரி-safety valve
குண்டதரி-ball valve
கோண அதரி-angle valve
போக்கதரி-exhaust valve
மாற்றதரி-by valve
மும்முக அதரி-three port valve
மும்முனை அதரி-tricuspid valve
வளிதொடுப்பதரி-air starting valve
வளியதரி-air valve
வளிவிடுஅதரி-air release valve
விழிப்பொலி அதரி-alarm valve
இவ்வாறு பிற அதரிகளையும் குறிப்பிடலாம்.
அதரி அறை
valve chamber
அதரி இருக்கை
valve seat
அதரி இளக்கி
valve lifter
அதரி இறுக்கி (தலையல்ல. (தலைப்புப் பகுதியில் இருந்து இறுக்கமான மூடுதலைக் குறிப்பது)
valve head
அதரித் தொடர்வி
valve follower
அதரி நோய்கள்
valve diseases
அதரி வரிசைப்படுத்தி
valve guide
அதரிக் கலம்
valve chest
அதரிக் குறடு
valve wrench
அதரித் தண்டு
valve stem
அதரித் தன்னியக்கம்
valve autonomy
அதரித் தொடர்
valve train
அதரிப் பெருக்க மின்சுற்று
valve amplified circuit
அமுக்கி அதரி
compressor valve
அரிப்பெதிர் அதரி
ammonia valve
அழுத்த விடுவிப்பு அதரி
pressure-relief valve
அழுத்தக் குறைப்பு அதரி
pressure reducing valve
அழுத்தச் சீராக்கு அதரி
pressure-regulating valve
அளவீட்டு அதரி
metering valve
இடைத்திரை அதரி
diaphragm valve
இரட்டை ஈர்ப்பு அதரி
dual-gravity valve
இரட்டை மும்முனைய அதரி
double triode valve
இரு கதுப்பதரிப் பிதுக்கம்
mitral valve prolapse
இரு கதுப்பதரியின் முன் கதுப்புகள்
anterior cusps of mitral valve
இரு கதுப்பு அதரி / இடநெஞ்சறை அதரி
bicuspid valve / left atrioventricular valve / mitral valve
இருமுக அதரி
two port valve
இருமுனைய-மும்முனைய அதரி
diode-triode valve
இருவழி அதரி
two-way valve
இழையுருளை அதரி
sleeve valve
உட்கவர் அதரி
absorber valve
உட்கொள் அதரி
intake valve
உந்துதண்டு அதரி
piston valve
உருள் அதரி
wheel valve
உள் வேறுபாட்டு அதரிகள்
interior differential valves
உள்வழி அதரி
inlet valve
ஊசல் அதரி
corliss valve
ஊசி அதரி
needle valve
எச்சரிக்கை அதரி
alarm valve
எண்ணெய் நீர்ப்பு அதரி
oil dilution valve
எதிர் அழுத்த அதரி
back-pressure valve
ஏற்றதரி
lift valve
ஒடுக்கு அதரி
valve arrester
ஒருவழி அதரி
one way valve
ஒழுகு அதரி
bleed valve
ஒழுக்கு அதரி
flow valve
கதுப்பு அதரி
cuspid valve
கலக்கும் அதரி
mixing valve
காணி அதரி
detector valve
காரை அதரி
cement valve
காளான் அதரி
poppet valve / mushroom valve
காற்றழுத்தக் கட்டுப்பாட்டு அதரி
pneumatic control valve
காற்று அதரி
air valve
காற்று அமுக்கி அதரி
air-compressor valve
காற்று கொள்ளிட அதரி
air aspirator valve
காற்று நுழைவாய் அதரி
air-inlet valve
காற்றுப் புறவழி அதரி
air bypass valve
காற்று விடு அதரி
snifter valve
காற்று விடுவிப்பதரி
air release valve
காற்று வெளிசெல் அதரி
blow valve
காற்றுத் தொடக்க அதரி
air starting valve
காற்றுத்துடிப்பு அதரி
air pulsed valve
கிடைமட்ட அதரி
level valve
கீழ் மலக்குடல் அதரி
inferior rectal valve
கீழ்ப்பெரு நாள அதரி
valve of inferior vena cava
குத்துயர அதரி
altitude valve
கூம்பு அதரி
cone valve
கொட்டு அதரி
dump valve
கோள அதரி
globe valve
சந்தி அதரி
junction valve
சம அதரிகள்
equivalve
சமச்சரிவு அதரி
miter valve
சமனுறு அழுத்த அதரி
balanced valve
சமன்செய் அதரி
balancing valve
சாய்வு அதரி
oblique valve
செங்கோண பின்னழுத்த அதரி
angle back-pressure valve
செயற்கை அதரி
prosthetic valve
செருகு அதரி
plug valve
செலுத்து அதரி
transmitting valve
தடுப்பு அதரி
check valve
தடைப்பு அதரி
choke valve
தணிவு அதரி
relief valve
தானியங்கி அதரி
auto-start valve
தானியங்குக் கட்டுப்பாட்டுப் பின்னூட்ட அதரி
automatic-control servo valve
திசையுறு கட்டுப்பாட்டு அதரி
directional control valve
திணறல் தவிர்ப்பு அதரி
antisuffocation valve
திண்ம நீக்கு அதரி
blowoff valve
திருப்பு அதரி
rocking valve
திரும்பிடா அதரி
non return valve
திரும்பு அதரி
reflux valve
திரையிடப்பட்ட அதரி
screened valve
திறன் கட்டுப்படுத்து அதரி
power control valve
நால்வழி அதரி
four-way valve
நாவாய் அதரி
kingston valve
நாள அதரிகள்
venous valves
நீராவி அதரி
steam valve
நீராவி நிறுத்து அதரி
steam stop valve
நீர்மமிலா அதரி
aneroid valve
நுரையீரல் அதரி
pulmonary valve
நுரையீரல் அதரி நோய்
pulmonary valve disease
நுரையீரல் நாடி அதரி பின்னொழுக்கு நோய்
pulmonary valve regurgitation
நெஞ்சுமேலறை அதரிகள்
atrio-ventricular valves
பக்கவாட்டு அதரிப் பொறி
side valve engine
விரைவியக்க அதரி
flutter valve
பந்து அதரி
ball valve
பல்வலை அதரி
multigrid valve
பாய்மக் கட்டுப்பாட்டு அதரி
fluid-controlled valve
பாய்வு அதரி
flush valve
பாய்வு கட்டுப்பாட்டு அதரி
flow control valve
பிறழ்மைய அதரி
eccentric valve
பிறை அதரி
semilunar valve
பின் வாய் அதரி
anal valve
பின்பாய்வு அதரி
backwater valve
பின்னூட்ட அதரி
servovalve
புடை இணைப்பிலா அதரி
puppet valve
புறவழி அதரி
bypass valve
பெரு நாடி அதரி
aortic valve
பெரு நாடி அதரி நோய்
aortic valve disease
பெரு நாடிப் பிறைஅதரி
aortic semilunar valve
மிதப்பு அதரி
float valve
மிதப்பு அதரி நிலை
float valve stand
மின்வேதி அதரி
electrochemical valve
மின்னணு அதரி
electron valve
முன் அதரிகள்
nicole valves
மூச்சுதவி அதரி
breathing valve
வடி கால் அதரி
drain valve
வடிப்பதரி
discharge valve
வட்டிகை அதரி
disc valve
வண்ணத்துப்பூச்சி அதரி
butterfly valve
வரிச்சுருள் அதரி
solenoid valve
வழியமைவதரி
(இங்கே குரல்வளையைக் குறிக்கவில்லை.)
throttle valve
வளிம அதரி
gas valve
வாயில் அதரி
gate valve
வானொலி அதரி
radio valve
விரிநுழைவு அதரி
telescoping valve
விரிவு அதரி
expansion valve
வில்காப்பு அதரி
internal spring safety relief valve
வெளிப்போக்கு அதரி
exhaust valve
வெளியீட்டு அதரி
output valve
வெளியேற்று கட்டுப்பாட்ட தரி
escape valve
வெற்றிடக் காப்பு அதரி
vacuum relief valve
- இலக்குவனார் திருவள்ளுவன்
- அகரமுதல 72: பங்குனி 15, 2046 / மார்ச்சு 29,2015
கருத்துகள்
கருத்துரையிடுக