உரைகல்லின் உரைக்கோவை ********************************* ஏப்ரல் -11 ^^^^^^^^^^^^ ஜோதிராவ் புலே =============== *** மகாத்மா ஜோதிராவ் புலே பிறந்த தினம் ஏப்ரல் 11- 1827 நினைவு தினம் நவம்பர் 28- 1890
உரைகல்லின் உரைக்கோவை
*********************************
ஏப்ரல் -11
^^^^^^^^^^^^
ஜோதிராவ் புலே
===============
*** மகாத்மா ஜோதிராவ் புலே
பிறந்த தினம் ஏப்ரல் 11- 1827
நினைவு தினம் நவம்பர் 28- 1890
பிறப்பிடம்
^^^^^^^^^^^^^
ஜோதிராவ் புலே 1827 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள சதாரா மாவட்டத்தில் உள்ள லால்கன் என்ற கிராமத்தில் பிறந்தார். பெற்றோர் கோவிந்த்ராவ்-சிம்னாபாய்.
பெயர் காரணம்
^^^^^^^^^^^^^^^^^^^^
சுடர் ஒளி என்ற பொருளில் ஜோதி என இவருக்குப் பெயர் சூட்டினர்..இவரின் பெயர் ஜோதிராவ் கோவிந்தராவ் புலே.இவரின் குடும்பப் பெயர் கோர்கி என்பதாகும்..பூ வணிகம் செய்ததால் இவர்களை புலே என்று அழைக்கப்பட்டனர்.உண்மையான குடும்பப் பெயரான கோர்கிக்கு பதிலாக புலே என்ற பெயர் நிலைத்துவிட்டது.
கல்வி
^^^^^^^
இவரின் ஏழு வயதில் ஜோதி ஒரு மராத்தி பள்ளியில் சேர்ந்து தொடக்க கல்வியைக் கற்றார்.ஜோதிராவ் புலே படிப்பில் மிகுந்த அறிவும் ஆர்வம் கொண்டு கற்றார். தன் தந்தைக்கு தோட்ட வேலைகளுக்கு உதவியாக இருக்க பள்ளியில் இருந்து நிறுத்தப்பட்டார்.
ஜோதியின் பக்கத்து வீட்டில் இருந்த ஒரு உருது ஆசிரியரும், ஒரு கிருத்துவ மதபோதகரும் ஜோதி யின் தந்தையிடம் மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வலியுறுத்தினார்கள். பதினான்காவது வயதில் பூனாவில் உள்ள ஸ்காட்லாந்து மிஷ்னரி பள்ளியில் மீண்டும் சேர்ந்தார். இவர் ஸ்காட்லாந்து மிஷ்னரி பள்ளியிலும், புத்வர் அரசு பள்ளியிலும் பள்ளிப் படிப்பை முடித்தார்.
பள்ளியைத் தொடங்குதல்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
தாமஸ் பெயினின் படைப்பான மனித உரிமைகள் என்ற புத்தகம் ஜோதிராவ் புலேயின் சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பெண்கள் கல்வி அறிவு பெறுவதன் மூலம் மட்டுமே உண்மையான சமூக மாறுதலை அடைய முடியும் என்று இவர் எண்ணினார்.
தன் மனைவி சாவித்திரிபாய்க்கு கல்வி கற்றுக் கொடுத்தார்.1848ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புத்தர்வதே என்ற இடத்தில் ஒரு வீட்டில் மகர், மங் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கான முதல் பள்ளியை தனது 21வது வயதில் தொடங்கினார்.
தாழ்த்தப்பட்ட பெண் களுக்கு கல்வி கற்றுத்தர எந்த ஆசிரியர்களும் முன்வராத போது தன் மனைவி சாவித்திரியை அப்பள்ளியின் ஆசிரியராக நியமித்தார். 1851 சூலை 3ஆம் நாள் மற்றொரு பெண்கள் பள்ளியை புத்காவர்பேத் என்ற இடத்தில் தொடங்கினார். எட்டு மாணவிகளோடு துவக்கப்பட்ட இந்த பள்ளி நாற்பத்தி எட்டு மாணவிகளாக எண்ணிக்கையில் உயர்ந்தது.
1851-52ஆம் ஆண்டுகளில் மேலும் இரண்டு பள்ளிகளை பெண்களுக்காக திறந்தார். 1855ஆம் ஆண்டு மாலை நேரப்பள்ளி ஒன்றினை நிறுவினார்.மாணவர்களின் பயன்பாட்டிற்கு சுதேசி நூல் நிலையம் ஒன்றையும் தொடங்கினார். மாணவிகளுக்கு உணவும், ஆடையும் வழங்கினர்.
1853 செப்டம்பர் 10ம் நாளன்று தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் கல்வி வளர்ச்சி கழகம் ஆரம்பித்தார்.
அனாதை இல்லம் தொடங்குதல்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
மறைமுகமாக தங்கி விதவைகள் பிரசவம் செய்துக் கொள்ளவும், அவர்கள் பெற்ற குழந்தைகளை வளர்ப்பதற்கும் பூனாவில் ஒரு அனாதை இல்லத்தை தொடங்கினார்.
சத்திய சோதக் சமாஜ் சங்கம் தொடங்குதல்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
1873 செப்டம்பர் 24ல் ஜோதிபா தன் ஆதரவாளர்களை பூனாவிற்கு அழைத்து, சத்திய சோதக் சமாஜ் அதாவது ‘உண்மை நாடுவோர் சங்கம்’ என்ற நிறுவனத்தை தொடங்கினார். தீனபந்து இந்த சங்கத்தின் பத்திரிகையாகும்.
ஜோதிபா சூன் 1, 1873ல் அடிமைத்தனம் என்ற புத்தகத்தை வெளியிட்டார். நேர்மையான வாழ்க்கை வாழும் எந்த மனிதனையும், தன் குடும்பத்தில் ஒருவனாக ஏற்றுக்கொண்டு, அவனோடு சேர்ந்து உணவு உண்ண தயாராக இருக்கிறேன்” என்று அந்த புத்தகத்தில் அறிவித்தார்.அமெரிக்க கறுப்பின மக்களின் விடுதலைக்கு பாடுபட்ட போராளிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இந்த புத்தகத்தை சமர்பித்திருந்தார்.
1876-77 ஆண்டுகளில் மராட்டியத்தில் மிகக்கொடூரமான பஞ்சம் ஏற்பட்டது. பட்டினியால் பல லட்சம் மக்கள் மாண்டார்கள். இந்த பஞ்சத்தில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள மக்கள் வேறு ஊர்களுக்கு செல்லும்போது தங்கள் குழந்தைகளை தங்கள் ஊரிலே விட்டுக்சென்றனர். இந்த குழந்தைகளைக் காப்பாற்ற சத்திய சோதக் சமாஜ், 1877 மே 17ல்‘விக்டோரியா அனாதை இல்லம் ஒன்றை தொடங்கியது.
ஆலைத்தொழிலாளர் சங்கமும்- நூல் வெளியிடும்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஜோதிபாவின் நண்பருமான லோகந்தேவுடன் இணைந்து ஆலைத்தொழிலாளர் களின் உரிமைக்குக் குரல் கொடுக்க 1880ஆம் ஆண்டு முதல் ஆலைத்தொழிலாளர் சங்கத்தை உருவாக்கினார்.விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி 1883ஆம் ஆண்டு சூலையில் விவசாயிகளின் சாட்டை என்ற நூலை எழுதி வெளியிட்டார்.
*** மகாத்மா பட்டம்
^^^^^^^^^^^^^^^^^^^^
காந்திக்கு மகாத்மா பட்டம் கிடைப்பதற்கு முன், 1888-ம் ஆண்டு மே மாதம் 11-ம் தேதி புனேயில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஜோதிராவ் புலேயின் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளைப் பாராட்டி மக்கள் இவருக்கு 'மகாத்மா’ என்ற பட்டம் சூட்டினர். அதன் பிறகு, இவரை மகாத்மா புலே என்றே மக்கள் அழைத்தனர்.
மறைவு
^^^^^^^^^^
மகாத்மா ஜோதிராவ் புலே 1890 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் தேதி தமது 63 ஆம் அகவையில் மறைந்தார்.
இவரின் இறுதி நூல்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
சர்வஜனிக் சத்ய தர்ம புஷ்தக் என்ற நூலை எழுதினார். இந்நூல், மனிதர்களுக்குள்ளே ஒற்றுமையையும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தையும் வலியுறுத்து கிறது. இந்நூலில் வேதங்களின் புனித தன்மையை மறுத்து, நான்கு சாதி அமைப்பை எதிர்த்துள்ளார்.
பக்கவாதத்தால் இவரின் வலது பக்க உடல் அசைவற்று போனதால் தனது இடது கையினால் எழுதினார். இந்நூலை 1889-ஏப்ரல்-1ஆம் தேதி முடித்தார். இவர் மரணத்திற்கு பின்பு 1891இல் இந்நூல் வளர்ப்பு மகன் யஷ்வந்த்தால் பதிப்பித்து வெளியிடப்பட்டது.
தொகுப்பு. ..... முருகுவள்ளி
கருத்துகள்
கருத்துரையிடுக