வருடத்திற்கு இருமுறை ஒரு மணி நேரம் மாற்றம் காணும் *பிரிட்டன் கடிகாரங்கள்..,*இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋
வருடத்திற்கு இருமுறை
ஒரு மணி நேரம் மாற்றம் காணும்
*பிரிட்டன் கடிகாரங்கள்..,*
பிரிட்டனில் வருடத்திற்கு இரண்டு முறை, கடிகாரத்தில் ஒரு மணி நேரம் முன்னதாகவும், ஒருமுறை பின்னோக்கியும் மாற்றி வைக்கப்படும். இந்த செய்தியை பலரும் அறிந்திருக்கலாம். அதாவது கடிகாரங்கள் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேரம் பின்னோக்கிச் செல்லும்.
மார்ச் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேரம் முன்னோக்கி செல்லும். இந்த வழக்கம் முதன்முதலில் 1916 இல் முதல் உலகப் போரின் போது இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது போரின் போது எரிபொருள் பயன்பாட்டை சேமிக்கவும் , சூரிய ஒளியை முழுமையாக பயன்படுத்தவும் உதவும் என்கிற அடிப்படையில் நடைமுறைக்கு வந்தது.
கடிகாரங்களை முன்னும் பின்னும் நகர்த்துவதற்கான இந்த யோசனையை 1895 இல் நியூசிலாந்தின் ஜார்ஜ் வின்சென்ட் ஹட்சன் என்ற பூச்சியியல் வல்லுநரால் புரிந்துரைக்கப்பட்டது என்கிறார்கள்.
வில்லியம் வில்லட் என்கிற கொத்தனார் ஒரு நாள் குதிரையில் செல்கிறபோது
கோடைகாலத்தில் வெயில் அதிக நேரம் இருப்பதை உணர்ந்து
மக்கள் வெளியுலக புழக்கத்திற்கு தங்களை ஈடுப்படுத்திக்கொள்ளவும், சூரிய ஒளியை உடலில் வாங்கிக்கொள்ளவும், இதுபோல் ஒரு மணி நேரத்தை நீடிப்பது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்ததாகவும் சொல்கிறார்கள்.மேலும் பெஞ்ச்மன் பிராங்க்ளின் அவர்கள் மக்களின் எரிபொருள் பயன்பாடு கணிசமாக குறையும் என நம்பி இதை ஆதரித்தார்.இந்த நடைமுறைப்படி, அக்டோபர் மாதம் இறுதி வாரக்கடைசியில் கடிகாரத்தின் முட்கள் ஒரு மணி நேரத்திற்கு பின்னோக்கி வைக்கப்படும். இந்தியாவிற்கும் இங்கிலாந்திருக்கும் இடையேயான நேர இடைவெளி 5 மணி 30 நிமிடங்கள். உதாரணத்திற்கு இந்தியாவில் மாலை 5:30 என்றால் , இங்கிலாந்தில் நண்பகல் 12.00. ஸ்மார்ட்போன்கள், தொலைக்காட்சிகள், மடிக்கணினிகள் போன்ற இணையத்துடன் இணைக்கப்பட்ட எந்த சாதனமும் தானாகவே மாறிவிடும்.. இருப்பினும் அலாரம் வைக்கும் கடிகாரங்கள், கைக்கடிகாரங்கள், கார் மற்றும்
வானொலி போன்ற இணையத்துடன் இணைக்கப்படாத பிற சாதனங்கள்
நாமாக தான் கைப்பட மாற்றி வைக்க வேண்டும்.
குளிர்காலத்தில் சீக்கிரமே இருட்டிவிடும் என்பதால் பள்ளி கல்லூரி மற்றும் பணிக்கு செல்பவர்கள் வீடு திரும்பும் போது, வெளிச்சமாக இருக்கும். கூடவே பனிமூட்டத்தில் விபத்துகள் நடப்பது தவிர்க்கப்படும். இதற்கு இந்த ஒரு மணி நேர மாற்றியமைப்பு ஓரளவு உதவியாக இருக்கிறது என்பது உண்மை.
வருடத்திற்கு இரண்டுமுறை கடிகாரத்தை ஒரு மணி நேரம்
முன்னும் பின்னுமாக மாற்றுவதற்கு பதில் அரசாங்கம் ஒரு வருடத்தில் ஒரு குறிப்பிட்ட நாளை நிர்ணயித்து 30 நிமிடம் முன்னுக்கோ அல்லது பின்னுக்கோ வைத்துக் கொள்ளலாம்.
30 நிமிட மாற்றத்தால் எந்த பெரிய இழப்பும் எற்படப்போவதில்லை. இது ஒரு யோசனை தான். இருப்பினும்
இங்கிலாந்து மக்கள் ஒரு சம்பிரதாயத்தை அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுத்து அதிலிருந்து வெளியே வரமாட்டார்கள்.
இங்கிலாந்திலிருந்து
சங்கர் 🎋
கருத்துகள்
கருத்துரையிடுக