மணியான மொழியார் மணிமொழியனார்! கவிஞர் இரா. இரவி!
கடையெழு வள்ளல்களை படித்து இருக்கிறோம்.
கண்டவர்கள் நம்மில் யாருமில்லை இங்கு
கடையெழு வள்ளல்களின் மொத்த உருவம்
கனிவான மொழியாளர் மணிமொழியனார்
பணம் இருப்பவர்களிடம் மனம் இருக்காது
பழைய பழமொழியைப் பொய்யாக்கியவர்!
பணமும் நல்ல மனமும் படைத்த மாமனிதர்
பண்போடு இலக்கியத்திற்கு வழங்கி வருபவர்!
இலக்கியம் என்றவுடன் விடுதியின் அரங்கை
இன்முகத்துடன் தந்து உதவிடும் உதவியாளர்!
கவிஞர்கள், எழுத்தாளர்கள் சங்கமித்து மகிழ
கல்லூரி விடுதியை வேடந்தாங்கல் ஆக்கியவர்!
பேசுகின்ற பேச்சில் திருக்குறள் மேற்கோளின்றி
பேசுங்கள் என்றால் முடியாது அவரால்!
வள்ளுவத்தை வாயில் உச்சரிப்பது மட்டுமன்றி
வள்ளுவம் வழியில் வாழ்ந்து வரும் நல்லவர்!
வருடாவருடம் திருக்குறள் திருவிழா நடத்துபவர்!
வாரிசுகளையும் திருக்குறள் திருவிழா நடத்த வைத்தவர் !
மணியான மொழியார் நமது மணிமொழியனார்புகழ்
மண்ணில் நூற்றாண்டுகள் கடந்து நீடுழி வாழும் !
கருத்துகள்
கருத்துரையிடுக