படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி . ஒரு புத்தகம் என்ன செய்யும்? ஒரு அம்மாவின் அனுபவ பகிர்வு.

படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி . ஒரு புத்தகம் என்ன செய்யும்? ஒரு அம்மாவின் அனுபவ பகிர்வு. --------------------+---------++----------------------------- எந்த படமோ,புத்தகமோ என்னை பாதித்து என் வாழ்க்கையின் திருப்பு முனையாக அமையவில்லை. ஆனால், என் மகனுக்கு ஒரு புத்தகம் அவ்வாறு அமைந்தது. என் ஒரே மகன்,பத்தாவது வரை சராசரி மாணவன் தான். கணக்கு வராது.ஆங்கிலம் நன்றாக வரும்.மற்றவை சுமார். படிப்பில் அவன் பெரிதாக எதுவும் சாதிப்பான் என்று நான் நினைக்கவில்லை. எனக்கு கொஞ்சம் வருத்தம் ஆனாலும்,சிலவற்றில் நான் practical. என் கருத்து,படிப்பே வராத குழந்தைகள் இருக்கிறார்கள் தானே?இல்லாவிட்டால்,முதல்,இரண்டாவது மூன்றாவது divisionகள் ஏன் இருக்கின்றன? எல்லோரும் தனது குழந்தை முதலாவது வர வேண்டும் என்று நினைத்தால்,அந்த மூன்றாம் division அல்லது fail ஆகும் குழந்தைகள் எங்கே போவார்கள்? ஆகவே,அவனிடம் காட்டிக்கொள்ளாவிட்டாலும்,அவனை எப்படியாவது ஒரு BA பாஸ் பண்ண வைத்து, என்னை மாதிரியே ஒரு Clerk உத்தியோகம் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆக,அவன் எதிர்காலம் பற்றிய வண்ண வண்ண கனவுகள் எனக்கு வரவில்லை. ஆனால் சிலவற்றில், நான் ரொம்பவுமே strict. எல்லோரிடமும் பேசுவது மற்றும் பழகுவதில் நாகரீகமும்,பண்பாடும் இருக்க வேண்டும். மிருகங்களிடமும்,ஏழைகளிடமும் இரக்கம் இருக்க வேண்டும்.தன் சக்திப்படி,தான தருமம் செய்ய வேண்டும். கூடாத நட்புகளில் இருந்து வெகு தூரம் விலகி இருக்க வேண்டும். படிப்பு ஒரு பக்கம், ஆனால் அதே சமயம்,நல்ல புத்தகங்களை படித்து அறிவையும் நற்குணங்களையும் வளர்க்க வேண்டும். என் கருத்து,ஒருடாக்டராகவோ,என்ஜினீயராகவோ, விஞ்ஞானியாகவோ ஆவது எவ்வளவு முக்கியமோ,அவ்வளவு,ஏன் அதை விட முக்கியம் ஒரு நல்ல குடிமகனாவது.இதை அவனுக்கு பல விதங்களிலும் புரிய வைத்தேன். இதில் மற்ற எல்லாம் நடந்தது ஆனால் கடைசி அறிவுரை மட்டும் நடக்கவில்லை.எங்கள் வீட்டில் நாங்கள் எல்லோருமே புத்தகங்களை தேடித்தேடி படிப்பவர்கள். என்னால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை. வீட்டில் எல்லோரிடமும் சொல்லி வருந்துவேன்.அப்பா நிறைய படிப்பார்.என் கணவரும் படிக்கிற டைப் தான். எல்லோருக்கும் இது கொஞ்சம் புதிராக தான் இருந்தது. எப்படியோ பத்தாவது பரீட்சை முடிந்தது.நானே மறுபடியும் Matric எழுதிய feeling. Result வரும் வரை leave தான்.அப்போது திடீரென்று புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தான். எனக்கு மிகவும் சந்தோஷம். Matric ல் Higher second division தான்.ஏதோ பாஸ் ஆகி விட்டானே என்று எனக்கு நிம்மதி. அடுத்து Plus 2 வில் Arts தான் எடுத்துக்கொண்டான். அவனுக்கு கணக்கு வராது ஆகவே நான் ஒன்றுமே சொல்லவில்லை. அதன் பிறகு நல்ல மாற்றம்!கணக்கு இல்லை என்று தெரிந்தவுடனேயே தன்னம்பிக்கை வந்து விட்டது போலும்! இரண்டு வருஷங்களும் நடந்த பரீட்சைகளில் எல்லாம்,8வது rank க்குள் இருந்தான்!எனக்கே வியப்பு. அடுத்தது என்ன என்ற கேள்வி எழுந்தது!எல்லோரும் தத்தம் குழந்தைகளை Engineering படிக்க வைக்கும் trend இருந்தது. நான் பொருளாதார ரீதியாக தயாராக இருந்தேன்.Loan போட்டுத்தான்! ஆனால் இவன் கணக்கில் weak. அதனால் யோசித்தேன். அவனே,"எனக்கு கணக்கு நன்றாக வராது,English நன்றாக வரும்.அதனால் நான் 5 years integrated Law வில் சேரப்போகிறேன் "என்று சொல்லிவிட்டான். எல்லோரும் ஒரே சமயத்தில் வேண்டாம் என்றார்கள். அப்போது சட்டம் படித்தால்,கோர்ட்டில் வாதாடுவது தவிர வேறு துறை இருக்கவில்லை.இளம் வக்கீல் என்றாலே,Affidavit காக Clients பின்னால் ஓடும் காட்சி தான் எல்லோர் கண் முன்பும் விரிந்தது. அதிகபட்சம்,PG முடித்து விரிவுரையாளராக போகலாம் அல்லது பரீட்சை எழுதி மாஜிஸ்ட்ரேட்டாக போகலாம்.அதற்கெல்லாம் மிக நல்ல student ஆக இருக்க வேண்டும். வேறு வேலை வாய்ப்பு இருக்கவில்லை.Practice செய்தால் காலை ஊன்றவே 10 அல்லது 12 வருஷங்கள் ஆகி விடும். என் ஆபீசில் எல்லோரும்,உங்களுக்கு இருப்பது ஒரு மகன்.Engineering ல் சேர்ப்பதை விட்டு விட்டு Law வில் சேர்க்கிறேன் என்கிறீர்களே என்றார்கள். சிலர் ஒரு படி மேலே போய், சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவான்.வேண்டாம் இந்த விஷப்பரீட்சை என்றார்கள். இவனோ பிடிவாதமாக இருந்தான். அரசு நடத்தும் கல்லூரியில், நடந்த பரிட்சையில் 200 பேர் எழுதினார்கள்.இவன் 8வது rank ல் பாஸ் செய்து இடமும் கிடைத்தது. Fees மிக குறைவு.வருஷத்துக்கு 5500.ஆக ஐந்து வருஷங்களுக்கு 30000க்கும் குறைவு. Engineering படிக்க தனியார் கல்லூரியில் 3 லட்சம்.இவன் மார்க்குக்கு அரசு கல்லூரியில் இடம் கிடைக்காது. நான் முடிவு செய்தேன்,அவனுக்கு என்ன இஷ்டமோ படிக்கட்டும்.நாளை நல்லது கெட்டது எது ஆனாலும் என் மேல் பழி வராது. மேலும், என்ஜினீயரிங் ஆனால் 3 லட்சம் செலவழித்திருப்பேன்.எனக்கு அப்போது இன்னும் 15 வருஷம் service இருந்தது.அந்தப்பணத்தை,அவன் ஒரு வெற்றிகரமான வக்கீலாக ஆகும் வரை அவனை support செய்வதில் செலவழிக்கலாம் என்று தோன்றியது. அப்புறம் யார் அதிர்ஷ்டத்தை யார் கண்டது?ஒரு வேளை வளமான எதிர்காலம் அமையவும் வாய்ப்பு இருக்கிறது என்று உள் மனது கூறியது. ஆக,அதில் சேர்ந்து விட்டான்.எல்லா பரீட்சைகளிலும் முதல் மூன்று rank ல் இருப்பான். 2nd year நடக்கும்போது என்னிடம் சொன்னான்,"அம்மா,நான் John Grisham ன் Rainmaker புத்தகம் படித்தேன்.அதில் வரும் ஹீரோ வக்கீல்.ஒரு Insurance case ஐ அவன் handle செய்த விதம் என்னை மிகவும் கவர்ந்தது.அன்றே நான் முடிவு செய்து விட்டேன்,Law தான் படிக்க வேண்டும் என்று"! நானும் அந்த புத்தகம் படித்திருக்கிறேன்.நல்ல புத்தகம் தான்! படித்து முடித்த பின் Cuttack High Court ல் ஒரு Senior கீழ் practice செய்தான்! ஒரு நாள் அவரால் வரமுடியவில்லை என்று இவனை சமாளிக்க அனுப்பி இருக்கிறார்! Surprisingly,அந்த Case ஒரு Insurance case!இவன் தனக்கு தெரிந்த வரை வாதாடி இருக்கிறான். Judge க்கு தெரியும் இவன் புது முகம் என்று.ஒரு வேளை இவன் பேசிய விதம் பிடித்ததோ அல்லது Insurance Company வக்கீலால் சரியாக தன் தரப்பை விளக்க முடியவில்லையோ,இவன் கட்சிக்காரருக்கு சாதகமாக தீர்ப்பு அளித்து விட்டார். அங்கு இருந்த senior Lawyers எல்லோரும் பாராட்டினார்களாம்.Judge, லேசான ஒரு நமட்டுப்புன்னகையோடு கிளம்பி விட்டாராம்! ஒண்ணரை வருஷங்கள் அங்கு இருந்தான்.பிறகு 2006ல் ஹைதராபாதில் ஒரு நல்ல வேலை வாய்ப்பு வந்தது.அப்போது அவனுக்கும் நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது.ஆகவே அதில் சேர்ந்து விட்டான். இப்போது வேறு வேலை.நல்ல சம்பாத்தியம்.Engineers அளவு...ஏன்,சொல்லப்போனால் சற்று அதிகமாகவே சம்பாதிக்கிறான்! எல்லாம் அந்த #John_Grisham ன் #Rainmaker புத்தகத்தின் உபயம்! சரவணன் தங்கப்பா.

கருத்துகள்