26.1.2025 கவியரங்கம் - 30 - "திருக்குறளை தேசிய நூலாக்கு " மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக்கவியரங்கம், மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் நடந்தது. "திருக்குறளை தேசிய நூலாக்கு " என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது.
26.1.2025 கவியரங்கம் - 30 - "திருக்குறளை தேசிய நூலாக்கு "
மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக்கவியரங்கம், மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் நடந்தது.
"திருக்குறளை தேசிய நூலாக்கு " என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது.
மாதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம், மதுரை, வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.தலைவர் பேராசிரியர் சி .சக்திவேல் தலைமையில் கவியரங்கம் நடந்தது தமிழ்ச்செம்மல் செயலர் கவிஞர் இரா.இரவி அனைவருக்கும் குடியரசு தின நாள் வாழ்த்துக்கள் சொல்லி வரவேற்றார் .பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம், முன்னிலை உரையாற்றினார் .
கவிஞர்கள் இரா.இரவி , இரா.கல்யாணசுந்தரம், கு .கி கங்காதரன், புலவர் மகா . முருகு பாரதி,கி .கோ குறளடியான் , இளையாங்குடி மு .இதயத்துல்லா, தென்காசி புலவர் ஆறுமுகம் , லிங்கம்மாள், அனுராதா ,ஆசிரியர் சிவ சத்யா ,அவரது 10.வயது மகன் பிரேம் மித்ரா , மா .முனியாண்டி, அஞ்சூரியா க . செயராமன் , பா.பழனி, கு .பால் பேரின்பநாதன் , இந்தி ஆசிரியர் வேல்பாண்டியன் ஆகியோர் கவிதை பாடினார்கள்.
10.வயது பிரேம் மித்ரா முதல் 85. வயது இரா.கல்யாணசுந்தரம் வரை கவிதை படித்தனர்
குடியரசு தினத்தை முன்னிட்டு கவிஞர்கள் அனைவரும் ஒன்றிய அரசுக்கு திருக்குறளை தேசிய நூலாக்கிட வேண்டுகோள் வைத்தனர் ..
துணைச்செயலர் கு .கி கங்காதரன் நன்றி கூறினார்
கவியரங்கம் நடத்த மாதாமாதம் மணியம்மை பள்ளியை நன்கொடையாகத் தந்து உதவும் இப்பள்ளியின் தாளாளர், மன்றத்தின் தலைவர் பி . வரதராசன் அவர்களுக்கு கவிஞர்கள் நன்றி கூறினார்கள்.
படங்கள் மதுரை உலா ரெ.கார்த்திகேயன்,இரமேஷ் கை வண்ணம்.
கருத்துகள்
கருத்துரையிடுக