அரியலூர் மாவட்டம், திருமானூரில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 175ஆம் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா

அரியலூர் மாவட்டம், திருமானூரில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 175ஆம் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா அரியலூர் மாவட்டம் திருமானூரில் உள்ள பிரிலியண்ட் பள்ளி வளாகத்தில், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 175ஆம் திருவள்ளுவர் சிலையினை, தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் மாண்புமிகு சா.சி.சிவசங்கர் அவர்கள் திறந்து வைத்தார். இவ்விழாவில், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் , அரியலூர் மாவட்டக் கல்வி அலுவலா் திருமிகு. ஜெ.சங்கர், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் முதுமுனைவர் அரங்க. பாரி, ஔவைக்கோட்டம் மு.கலைவேந்தன், பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் பல்வேறு தமிழறிஞர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

கருத்துகள்