படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி !

ர்வதேச சுற்றுலா தலமாக கருதப்படும் கன்னியாகுமரி கடலின் நடுவே திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும் என்று கடந்த 1999 ஆம் ஆண்டு தமிழக அரசு திட்டமிட்டது. அவ்வாறே, கடந்த 2000ம் ஆண்டில் நடுக்கடலில் 133 உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலையை அப்போது இருந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் திறந்து வைத்தார். அந்த வகையில், தற்போது உள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திருவள்ளுவர் சிலை அமைத்து நேற்றோடு (20.12.2024) 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதால், இச்சிலைக்கு மரியாதை செலுத்தும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை *தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.* அதாவது, முதல்வர் *ஸ்டாலின் கூறியிருப்பதாவது, ” *சமத்துவம் போற்றும் உலக பொதுமறை படைத்த அய்யன் திருவள்ளுவருக்கு,* நமது நாடு தொடங்கும் குமரி எல்லையில் வானுயர சிலை அமைத்து 25 ஆண்டுகள் ஆகிறது. முப்பில்லாத் தமிழ் முத்தமிழ் படைத்த அய்யன் வள்ளுவருக்கு, முத்தமிழ் வித்தகர் கலைஞர் அமைத்த சிலையை *‘# Statue Of Wisdom’* என கொண்டாடுவோம்” என்று மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்

கருத்துகள்