படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி !

மிழ்மொழியின் சிறப்பு தமிழ் இலக்கிய, இலக்கணச் சிறப்புடைய மொழி. உலகமே போற்றுகின்ற திருக்குறள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட பெருமை உடையது. “சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே அதை தொழுது படுத்திடடி பாப்பா” என்று பாரதியார் குறிப்பிடுகின்றார். “அமிழ்தத்தைக் கடைந்தால் அதிலிருந்து கிடைக்கும் அரிய சொல்லே தமிழ்” என்று போற்றுகின்றார் நாமக்கல் கவிஞர். இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழாய் வளர்ந்து, செந்தமிழாய் வலம் வரும் ஒரே மொழி தமிழ் மொழியாகும். கம்பர், ஔவையார், திருவள்ளுவர், பாரதியார் போன்ற புலவர்களாலும், அரசர்களாலும் வளர்க்கப்பட்ட மொழி தமிழ் மொழியாகும். “தமிழுக்கும் அமுதென்று பேர்! அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்!” என்ற பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளில் தமிழின் சிறப்பு புலப்படுகிறது. பழமைக்கும் பழமையாய் இலக்கிய வளமுடையதாய் நிற்பதோடு புதுமைக்கும் புதுமையாய் கருத்துச் செல்வம் நிறைந்ததாய் என்றும் இளமைப் பொலிவுடன் விளங்குவது நமது தமிழ் மொழியாகும். உயர்தனிச் செம்மொழி தமிழாகும். உலகிலேயே மொழிக்கென முதன் முதலாகத் தோற்றுவிக்கப்பட்டது தமிழ்ச் சங்கமே. தமிழ் நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் தமிழ் மொழி சிறந்து விளங்குகின்றது. தமிழ் மொழி தனித்து இயங்கக் கூடிய மொழியாகும். எளிமைச் சிறப்பு தமிழ்மொழியானது எழுதவும், படிக்கவும், பேசவும் மிகவும் எளிதானது. இதனாலேயே தமிழ் இனிய தமிழ் என்பதோடு, எளிய தமிழ் எனவும் கூறப்பெறுகிறது. இச் சிறப்பைப் பிற மொழிகளிற் காண இயலாது. செந்தமிழ், பைந்தமிழ், அருந்தமிழ், நறுந்தமிழ், தீந்தமிழ், முத்தமிழ், ஒண்டமிழ், தண்டமிழ், வண்டமிழ், தெளிதமிழ், இன்றமிழ், தென்றமிழ், நற்றமிழ், தெய்வத்தமிழ், மூவாத்தமிழ், கன்னித்தமிழ் தமிழ் இனிய மொழி இலக்கிய, இலக்கணச் சிறப்புடைய மொழி. தொன்மையான மொழி. இத்தகைய தமிழ் மொழியை வளப்படுத்த வேண்டுமானால் பிறநாட்டிலுள்ள சிறந்த அறிஞர்களின் நூல்களைத் தமிழில் பெயர்த்து எழுதவேண்டும், மேலும் புகழ் தரக்கூடிய புதிய நூல்களைப் படைக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார் பாரதி. பாரதியின் இத்தகைய வேண்டுகோளை நாம் நிறைவேற்ற வேண்டும். நம் தாய் மொழியாம் தமிழ்மொழியை அதன் சிறப்புக்கள் மங்காது என்றும் பேணிக்காப்பது நம் அனைவரது தலையாய கடமையாகும். "எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு" என்று பாவேந்தர் பாரதிதாசன் குறிப்பிட்டது போன்று தமிழ் என்றும் மங்காது. அதன் பெருமைகள் என்றும் குன்றாது. தமிழ் மொழி என்பது தமிழர்களின் அடையாளம், என்பதை உணர்ந்து அதனை பாதுகாப்போம்.

கருத்துகள்