உரைகல்லின் உரைக்கோவை ********************************* நவம்பர் 27 ========== --------------------------------------------------------------------------- புரூஸ் லீ ^^^^^^^^^^ பிறந்த நாள் நவம்பர் 27-1940 நினைவு நாள் ஜுலை 20- 1973

உரைகல்லின் உரைக்கோவை ********************************* நவம்பர் 27 ========== --------------------------------------------------------------------------- புரூஸ் லீ ^^^^^^^^^^ பிறந்த நாள் நவம்பர் 27-1940 நினைவு நாள் ஜுலை 20- 1973 --------------------------------------------------------------------------- கராத்தே கலையுடன் சில நுணுக்கங்களை சேர்த்து புரூஸ் லீ உருவாக்கிய புதிய தற்காப்பு கலை இவரது பெயரிலேயே 'புரூஸ் லீ குங்பூ' என அழைக்கப்பட்டது. 1940ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார் புரூஸ் லீ.இவரின் இயற் பெயர் லீ ஜுன்பேன்.புரூஸ் லீயின் தந்தை லீ கோய்ன் சீனர் தாயார் கிரேஸ் ஐரோப்பியர். புரூஸ் லீக்கு பெற்றோர்கள் லீ ஜுன்பேன் என பெயர் வைத்தனர். சீன மொழியில் இதற்கு உலக பாதுகாவலர் என்று பொருள். இந்த பெயர் அமெரிக்க நர்ஸின் வாயில் நுழையவில்லை'ஜுன் பேன்' சிரமமாக இருந்ததால் அந்த நர்ஸ் புரூஸ் என செல்லமாக அழைத்தார். பிற்காலத்தில் இவரது பெயராக நிலைபெற்றது. புரூஸ் லீக்கு மூன்று மாதம் ஆனபோது இவரது குடும்பம் ஹாங்காங் வந்தது. ஹாங்காங்கில் பெரும்பாலான சிறுவர்கள் தெருக்களில்தான் பொழுதைக் கழிப்பார்கள். அப்படி நிறைய நேரத்தைக் கழித்த புரூஸ் லீக்கு சண்டை போடுவதில் இருந்த ஆர்வம் படிப்பில் இல்லை. 20 சீனப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றும் வாய்ப்பு புரூஸ் லீக்கு கிடைத்தது. சண்டையையும் சினிமாவையும் எடுத்துக்கொண்டு பள்ளியையும் பாடங்களையும் ஒதுக்கினார் புரூஸ் லீ. புரூஸ் லீயின் தந்தையோ நன்கு படித்து தொழில்துறையில் ஈடுபட வேண்டும் என விரும்பினார். சண்டைபோட்டு எல்லோரையும் வெற்றிக்கொள்ள வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார் புரூஸ் லீ. சிலமுறை பெரிய குண்டர்களிடம் மோதி தோல்வியும் கண்டிருக்கிறார். அப்போதுதான் ஒரு நல்ல தற்காப்புக்கலையை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இவருக்கு எழுந்தது. தன் தந்தையிடமே குங்பூ என்ற பாரம்பரிய சீன தற்காப்புக்கலையைக் கற்றுக் கொண்டார். அடிக்கடி அடிதடிகளில் ஈடுபட்டதால் புரூஸ் லீயின் பெற்றோர் இவரிடம் 100 டாலரைக் கொடுத்து அமெரிக்காவில் போய் எப்படியாவது பிழைத்துக்கொள் என்று கப்பலேற்றிவிட்டனர். அமெரிக்கா வந்து சேர்ந்தார் புரூஸ் லீ. சியாட்டலில் இருந்த ஒரு நண்பரின் சீன உணவக விடுதியில் தங்கினார்.அங்கு தற்காப்புக் கலையை கற்றுக்கொடுக்க தொடங்கினார். அந்த விடுதியில் வேலையும் பார்த்தார். அவரது எண்ணம் செயல் எல்லாம் குங்பூ என்ற தற்காப்புக்கலையைப் பற்றியே இருந்தது. மேற்கத்திய மல்யுத்தம் ஜீடோ கராத்தே குத்துச்சண்டைஆகியவற்றையும் கற்றுக்கொண்டு சில புதியபாணி அசைவுகளையும் சேர்த்து இவர் சொந்தமாக ஒரு தற்காப்புக்கலையை உருவாக்கினார். அதற்கு ஜீட்குன்டோ என்று பெயரிட்டார். இவரிடம் தற்காப்புக்கலையை கற்றுக்கொள்ள வந்த லிண்டா என்ற பெண்ணை மணந்தார்.புரூஸ் லீ ஹாங்காங் திரும்பினார். தி பிக் பாஸ் ஸ்பிட் ஆஃப் பியூரி என்ற இரண்டு படங்களில் புரூஸ் லீ நடித்தார் அதில் இவர் பம்பரம்போல் சுழன்று சுழன்று காட்டிய வித்தைகளும் சாகசங்களும் ஆசிய சினிமா ரசிகர்களை பிரமிக்கவைத்தன. முதலாளிகளுக்கும் அப்பாவி தொழிலாளிக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டமே பிக் பாஸ் படத்தின் கதை. புரூஸ் லீயின் அதிவேக சண்டைகளும் கண்களில் இவர் காட்டிய வெறியும் படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற செய்தது.ஆசியாவில் 12 மில்லியன் டாலர்களை இப்படம் வசூலித்தது. ஆசிய இளையர்கள் மட்டும் புரூஸ் லீயின் ரசிகர்களாக இருந்தனர். தி ரிட்டன் ஆஃப் த டிராகன் படத்திற்கு பிறகு அமெரிக்க இளையர்களும் புரூஸ் லீயின் வெறித்தனமான ரசிகர்களாயினர். இதையடுத்து பிஸ்ட் ஆஃப் பியூரி படம் வெளியானது. தனது மாஸ்டரை கொன்றவர்களை புரூஸ் லீ பழிவாங்கும் கதை. நரம்புகள் புடைக்க எதிரியை ஒரே குத்தில் வீழ்த்தி கூச்சலிடும் காட்சி ரசிகர்களின் ரத்த ஓட்டத்தை எகிறச் செய்தது. முப்பதுக்கும் மேற்பட்ட சண்டையிடும் காட்சி தான் இந்த படத்தின் சிறப்பு.15 மில்லியன் டாலர்களை இப்படம் குவித்தது. புரூஸ் லீ திரைக்கதையைத் தானே எழுதி திரைப்படத்தை இயக்கவும் செய்தார். புரூஸ் லீ கதை எழுதி இயக்கிய படங்கள் Way to the Dragon பிஸ்ட் ஆஃப் பியூரி. இந்த படங்கள் வெளியானது. Way to the Dragon படத்தை ரிடர்ன் ஆஃப் தி டிராகன் எனவும் கூறுவர். இப்படம் உலகம் முழுவதும் புரூஸ் லீயின் புகழை கொண்டு சேர்த்தது.இவருடன் சேர்ந்து குங்பூ கலையும் புகழடைந்தது. புரூஸ் லீயின் பிரபலத்தையும் இவரின் திறமையும் உணர்ந்துகொண்ட ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் தங்களுக்காக படம் எடுக்க வேண்டுமாறு புரூஸ் லீயைக் கேட்டுக் கொண்டனர். ஹாலிவுட்டுக்காக என்டர் தி டிராகன் என்ற படத்தை எடுக்கத் தொடங்கினார். மிகுந்த வேகத்தில் நடைபெற்றது படப்பிடிப்பு. ரீ ரெக்கார்டிங் எடிட்டிங் வேலைகள் அனைத்தும் இரண்டே மாதங்களில் முடிவடைந்தன.அமெரிக்க தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து புரூஸ் லீ உருவாக்கிய படம் என்டர் தி ட்ராகன் ஹாலிவுட்டை மட்டுமின்றி உலகையே திரும்பி பார்க்க வைத்தது. 1973 ஆம் ஆண்டு ஜீலை 20 ந்தேதி தன் மனைவி லிண்டாவிடம் விடை பெற்றுக்கொண்டு முடிக்கப்படாமல் இருந்த தனது சொந்தப்படமான கேம் ஆப் டெத் என்ற திரைப்படத்தைப்பற்றி விவாதிக்க வெளியில் சென்றார் புரூஸ் லீ. அன்று இரவே மர்மமான முறையில் இறந்துபோனார் புரூஸ் லீ. அப்போது இவருக்கு வயது 33. புருஸ் லீயின் மரணம் குறித்து பல வதந்திகள் எழுந்தன. ஒருமுறை படப்பிடிப்பில் ஏற்பட்ட சண்டைக்காட்சியின் போது தலையில் விழுந்த அடியால் மூளை வீங்கி இறந்துபோனார் என்று மருத்துவர்கள் கூறினர். உண்மையைக் கண்டுபிடிக்க ஹாங்காங் அரசாங்கம் ஒரு விசாரணைக் குழுவை நியமித்தது. ஆனால் இன்றுவரை புரூஸ் லீ இறந்ததற்கான உண்மையான காரணம் தெரியவிலை. புரூஸ் லீயின் மரணத்திற்கு பிறகு வெளிவந்த என்டர் தி டிராகன் படம் சக்கைப்போடு போட்டு 200 மில்லியன் டாலர் வசூலை அள்ளிக்குவித்தது. உலகெங்கும் பல இளையர்கள் கராத்தே பைத்தியமானார்கள். மூளை முடுக்குகளிலெல்லாம் கராத்தே பள்ளிகள் தொடங்கப்பட்டன. இவ்வாறு உலக இளையர்களின் கவனத்தை தனி ஒரு மனிதனாக தற்காப்புக்கலைப்பக்கம் திருப்பிய பெருமை புரூஸ் லீயையே சேரும். வரலாற்றின் எந்த கால கட்டத்தையும்விட எழுபதுகளில்தான் மிக அதிகமான இளையர்கள் தற்காப்புக்கலை பள்ளிகளில் சேர்ந்து பயின்றனர் என்ற உண்மையே அதற்கு சான்று. தன் கனவை நனவாக்க அயராது பாடுபட்டவர் புரூஸ் லீ. உடல்தான் தனது மூலதனம் என்று நம்பிய அவர் அதை ஒரு கோவிலாகவே வழிபட்டார். தினசரி ஓடுவதுஎடை தூக்குவது என்று தனது உடலை வலுப்படுத்திக்கொண்டதோடு வைட்டமின்கள் ஜின்செங் ராயல் ஜெல்லி போன்றவற்றையும் உட்கொண்டு உடலை திடமாக வைத்துக்கொண்டார். புரூஸ் லீ உடல் உறுதி சம்பந்தப்பட்ட நூற்றுக்கணக்கான புத்தகங்களை சேகரித்து வைத்திருந்தார். ஒருவர் உள்ளங்கையை மூடி திறப்பதற்குள் அவரது கையை தாக்கும் அளவுக்கு வேகம் புரூஸ் லீயிடம் இருந்தது. ஒரு கையின் சுண்டுவிரல் மற்றும் கட்டை விரலை மட்டும் பயன்படுத்தி தண்டால் எடுக்கும் அளவுக்கு விரல்களை உறுதிப்படுத்தி வைத்திருந்தார். முப்பது வயதிலேயே புகழின் எல்லா சிகரங்களையும் தொட்டுப் பார்த்தவர்.புரூஸ் லீ 33 ஆண்டுகளே வாழ்ந்தாலும்ஓர் அர்த்தமுள்ள வாழ்கையை வாழ்ந்திருக்கிறார். தொகுப்பு முருகுவள்ளி

கருத்துகள்