உரைகல்லின் விழுதுகள் =========================== இந்திய அரசில் அமைப்பு சட்டம் ஏற்றுக் கொண்ட நாள் நவம்பர்..26
1935ல் உரைகல்லின் விழுதுகள்
===========================
இந்திய அரசில் அமைப்பு சட்டம்
ஏற்றுக் கொண்ட நாள் நவம்பர்..26
ொண்டுவரப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் ஓரளவு முழுமையான அரசியல் சட்டம் எனலாம். இந்தியா சுதந்தரம் பெறும் நேரத்தில் நமக்கென்று சொந்தமான அரசியல் சட்டம் வேண்டும் என்ற நோக்கில் பிரிட்டனின் கேபினட் தூது குழுவின் பரிந்துரையின் பேரில் இந்திய அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டது.
ஜவஹர்லால் நேரு டாக்டர் அம்பேத்கர் ராஜாஜி வல்லபாய் படேல் டாக்டர் ராஜேந்திர பிரசாத் போன்ற முக்கிய தலைவர்கள் உள்பட 389 உறுப்பினர்களுடன் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணி 1946ல் தொடங்கப்பட்டது.
இச்சபைக்கு டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையேற்றார். இரண்டு வருடம் பதினோரு மாதம் பதினெட்டு நாள்கள் உழைத்து பல நாட்டு அரசியல் அமைப்புகளையும் அரசியல் போக்குகளையும் ஆராய்ந்து விவாதித்து சுதந்தர இந்திய அரசியலமைப்பை உருவாக்கியது.
இவ்வாறு உருவாக்கப்படும் அரசியலமைப்பை நுண்மையாக ஆராய்ந்து இறுதி செய்ய டாக்டர் அம்பேத்கர் தலைமையில் ஆறு உறுப்பினர்கள் அடங்கிய வரைவுக் குழு (draft committee) ஆகஸ்ட் 29 1947 ல் அமைக்கப்பட்டது. அரசியலமைப்பு வரைவுக் குழு அளித்த அரசியலமைப்பின் இறுதி வடிவத்தை நவம்பர் 26 1949ல் அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொண்டு டாக்டர் ராஜேந்திர பிரசாத் அதில் கையெழுத்திட்டார்.
அதில் அப்போது 22 பகுதிகளும் (parts), 315 உறுப்புகளும் (articles), 12 அட்டவணைகளும் (schedules) இருந்தன.
அவ்வப்போது ஏற்பட்ட கால மாற்றம், தேவைகளுக்கு ஏற்ப திருத்தப்பட்டு தற்போது 22 பகுதிகள், 395 உறுப்புகள், 12 அட்டவணைகள், 94 திருத்தங்களுடன் உலகிலேயே மிகப்பெரிய எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டமாக இந்திய அரசிலமைப்புச் சட்டம் விளங்குகிறது.
1950ஆம் அண்டு ஜனவரி 26-ஆம் நாள் இந்திய குடியரசு தினமாக அறிவிக்கப்பட்டது. அன்று முதல் இந்தியா தனக்கென உருவாக்கிக்கொண்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
உலகிலேயே மிகப்பெரிய முழுக்க முழுக்க கையாலஎழுதப்பட்ட அந்த சட்டவரைவை அம்பேத்கர்
வடிவமைத்தார். இந்திய அரசியலமைப்பு மிக விரிவாக எழுதப்பட்ட ஆவணமாகும்.
அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு குடிமக்களின் உரிமைகளுக்கு பலவகைகளில் பாதுகாப்பை அளிப்பதாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் இது மிகச்சிறந்த சமூக ஆவணம் என வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்பட்டது.முருகுவள்ளி
கருத்துகள்
கருத்துரையிடுக