உரைகல்லின் உரைக்கோவை =========================== நவம்பர் 20 ^^^^^^^^^^^^^^ திப்பு சுல்தான் பிறந்த தினம் ========================== **மைசூர் புலி

உரைகல்லின் உரைக்கோவை =========================== நவம்பர் 20 ^^^^^^^^^^^^^^ திப்பு சுல்தான் பிறந்த தினம் ========================== **மைசூர் புலி **ஆங்கிலேயரை நடுநடுங்க வைத்த மாவீரன். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஒரு வீர வரலாறு படைத்தவர் திப்புசுல்தான். கர்நாடக மாநிலத்திலுள்ள தேவனஹள்ளி என்ற இடத்தில் ஹைதர் அலிக்கும் பாக்ர்-உன்-நிசாவுக்கும் மகனாகப் பிறந்தார்.திப்பு சுல்தான்லின் தந்தை ஹைதர் அலி சாதாரண குதிரைவீரனாக இருந்தவர். அவரின் திறமையால் அரசை ஆளும் மன்னனாக உயர்ந்தார். இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு வெற்றி அடைந்தார். திப்பு சுல்தான் கல்வியில் சிறந்து விளங்கினார்.இளம் வயதில் தந்தையுடன் பல போர்க்களம் கண்டார். தன்னுடைய பதினாறு வயதிலேயே யுத்தத்தந்திரங்கள் ராஜதந்திரங்கள் போன்ற போர் பயிற்சியில் சிறந்து விளங்கினார். இளம் வயதில் சிறந்த படைத்தளபதியாக விளங்கினார்.தந்தையும் மகனும் ஒரே களத்தில் எதிரிகளைச் சந்தித்தனர். 1761ல் மைசூர் மன்னராக பொறுப்பேற்ற திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலி 1767-1769ல் முதலாம் மைசூர் யுத்தம் 1780ல் இரண்டாம் மைசூர் யுத்தம் உட்பட ஆங்கிலேயரை எதிர்த்து பலயுத்தம் கண்டு வெற்றி பெற்றார். திப்பு சுல்தான் கி.பி 1767 ல் தமது 17 ம் வயதில் ஜோசப் ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப் படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றியைப் பெற்றார்.கி.பி.1767 முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப் படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்றார் திப்பு சுல்தான் . 1782ஆம் ஆண்டு தந்தை ஹைதரலி மரணம் அடைந்தார். தன்னுடைய 32 வது வயதில் சுல்தானா அரியானை ஏறினார். மைசூரின் மன்னனாக பொறுப்பேற்ற திப்பு சுல்தான் புலி சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை தன்னுடைய சின்னமாக பயன்படுத்தினார். திப்புசுல்தான் ஆட்சியில் பெண்களுக்கு மரியாதை கொடுத்தார். தேவதாசி முறையை முழுமையாக எதிர்த்தார். கோயில்களில் நரபலி கொடுப்பதையும் முழுமையான மதுவிலக்கையும் அமல்படுத்தினார் திப்புசுல்தான். இஸ்லாமிய மதத்தில் முழு ஈடுபாடு கொண்டவராக விளங்கினாலும் அவருடைய ஆட்சியில் இந்துக்கள் மற்றும் பிற மதத்தவரும் சுதந்திரமாக செயல்பட்டனர். விவசாயம்தான் ஒரு நாட்டின் ஜீவநாடி என்பதை உணர்ந்த திப்புசுல்தான் உழுபவனுக்கு நிலம் சொந்தம் என்ற புரட்சிகர திட்டத்தைஅமல்படுத்தினார். விவசாயத்தில் பல சீர்திருத்தங்களைச் செய்தார். தொழில் வளர்ச்சியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார். தன்னுடைய கொள்கை அறிவிப்பால் மட்டுமல்லாமல் நடைமுறையில் ஆட்சியிலும் தனிப்பட்ட வாழ்விலும் மக்கள் சார்ந்த கொள்கைகளை இறுதிவரை பின்பற்றியவர்.மக்களிடையே அமைதியை மட்டும் விரும்பியவர். மத ஒற்றுமையை இறுதிவரை கடைப்பிடித்தார். திப்புசுல்தான் மிகப்பெரிய இராணுவப் படையினைக் கொண்டிருந்தார். இதில் குதிரைப்படை ஒட்டகப்படை மட்டுமல்லாமல் போரில் பீரங்கிகளையும் பயன்படுத்தியுள்ளார். இதைத்தவிர கடற்பயிற்சி பள்ளிகள் உருவாக்கினார் கடற்படையில் பீரங்கிகள் மற்றும் ஆங்கிலேயருக்கு நிகராக நவீன ஏவுகணைகளை பயன்படுத்தினார் . சக்தி வாய்ந்த ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர் திப்புசுல்தான். மேற்கு கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களை துரத்த வேண்டும் என்று எண்ணினார். பிரெஞ்சுப் படையினரையும் சேர்த்துக் கொண்டு ஆவேசத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு சுல்தான்.பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயி பிரிட்டனுடன் சமரசம் செய்துக் கொண்டதால் திப்புசுல்தான் வேறுவழியில்லாமல் போரை நிறுத்தினார். 1784 ஆம் ஆண்டு முடிவுற்ற இப்போரில் ஆங்கிலேய தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவால் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம் ஆங்கிலேயர்களுக்கு திப்புவை நினைத்து நடுங்கச் செய்தது. கி.பி.1790 ஆம் ஆண்டு முதல் 1792 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற மூன்றாவது மைசூர்போர் ஆங்கிலேயனின் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனான தர்மராஜாவால் தூண்டி விடப்பட்டது.திப்புவிற்கு எதிராக போர்புரிய ஆற்காட்டு நவாபும் தொண்டைமான் ஹைதராபாத் நிஜாம் மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள் அனைவரும் ஆங்கிலேயருடன் இணைந்துக் கொண்டனர். இதில் சற்றும் கலங்காத திப்பு எதிரிகளை தன்னந்தனியாக துணிச்சலுடன் எதிர்கொண்டார். போரின் துவக்கத்தில் வெற்றிப் பெற்ற திப்புசுல்தான் போரின் இறுதிக்கட்டத்தில் மராட்டியர்கள் நயவஞ்சகத்தனமாக ஆங்கிலேயர்களுடன் இணந்துக் கொண்டதால் ஒப்பந்தம் செய்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். மைசூரின் பாதி நிலப்பரப்பும் எதிரிகள் வசம் சென்றது. இழப்பீடுத் தொகையாக 3.3 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இழப்பீடு தொகையை செலுத்துவரை திப்புவின் இருமகன்கள் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர். இழப்பீட்டுத் தொகையை செலுத்தி தனது மகன்களை மீட்டார் திப்புசுல்தான். ஆங்கிலேருக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போரில் தன்னந்தனியாக களமிறங்கினார் திப்பு சுல்தான்.தமது 11 ஆயிரம் படைவீரர்களுடன் தானும் ஒரு போர் வீரனாக தீரமுடன் போரிட்டார் திப்பு சுல்தான். இறுதியில் திப்பு சுல்தான் போர்க் களத்திலேயே இறந்தார்.1799 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி வீர மரணம் அடைந்தார். தொகுப்பு முருகுவள்ளி

கருத்துகள்