உரைக்கோவை ***************************************** நவம்பர் 19 =========== ஜான்சி ராணி லக்ஷ்மி பாய்

உரைகல்லின் உரைக்கோவை ***************************************** நவம்பர் 19 =========== ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ பிறந்த தினம் நவம்பர் 19 1828 நினைவு தினம் ஜூன் 18 1858 **விடுதலைப் போராட்ட வீரர் ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் 1828 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி காசியில் (இப்போதைய வாரணாசி) பிறந்தார். மராத்திய குடும்பத்தில் பிறந்தார். பெற்றோர்-மௌரியபந்தர் - பகீரதிபாய்.இவரின் இயற்பெயர் மணிகர்ணிகா.இவரின் நான்காம் அகவையில் தாயாரை இழந்தார்.துணிச்சலும் வீரமும் இயல்பிலேயே இவருக்கு இருந்தது.இவர் பள்ளியில் படிக்கும் போதே குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல் மற்றும் கத்தி சண்டை போன்ற தற்காப்புக் கலைகளை முறையாக பயிற்சியின் மூலமாக கற்றார். மணிகர்ணிகாவுக்கு 14 வயது இருக்கும்போது இவளது அழகிலும் துறுதுறுப்பிலும் மயங்கிய ஜான்சியை ஆண்ட கங்காதர ராவ் நெவல்கர் ராஜா இவரை திருமணம் செய்துகொண்டார். மணிகர்ணிகாவை மகாராஜா மணந்துவிடக்கூடாது என்று மகாராஜாவின் உறவினர்கள் எத்தனையோ சூழ்ச்சிகள் செய்தனர்.ஆனாலும் மகாராஜா இவரை மணந்தார்.இவரது திருமண விழா பழைய ஜான்சி நகரில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்பு மணிகர்ணிகா ஜான்சியின் ராணியாக மாறினார். லக்ஷ்மி பாய் என்று அழைக்கப்பட்டார். லக்ஷ்மி பாய் தனது மக்களை உயிரினும் மேலாக நேசித்தார். கணவருடன் இணைந்து நல்லாட்சி வழங்கினார். பத்து ஆண்டுகளுக்கு பிறகு இவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தாமோதர் ராவ் என்று பெயரிட்டனர். ஆனால் 4 மாதங்கள் இருக்கும்போது குழந்தை இறந்துவிட்டது. குழந்தையின் இறப்பு மகாராஜாவை மிகவும் பாதித்தது. 1853 ல் மகாராஜா கங்காதர் ராவின் உடல்நிலை பலவீனமானதால் இவர்கள் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடிவு செய்தனர். இந்தத் தத்தெடுப்பின் மீது ஆங்கிலேயர்கள் பிரச்சனை எழுப்பக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்த லட்சுமிபாய் உள்ளூர் ஆங்கிலேய பிரதிநிதிகளை சாட்சியாக வைத்து தத்தெடுப்பை நடத்தினார். நவம்பர் 21 ஆம் தேதி 1853 ஆம் ஆண்டு மகாராஜா கங்காதர் ராவ் மரணமடைந்தார். ராணி லட்சுமிபாய் தத்தெடுத்த குழந்தைக்கு தாமோதர் ராவ் என்று பெயர் சூட்டினார். இந்துமத மரபின் படி இக்குழந்தையே லட்சுமிபாயின் சட்ட வாரிசாக இருந்தது. இருப்பினும், ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்த குழந்தையை சட்ட வாரிசாக ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர்.டல்ஹௌசி பிரபு பிறப்பித்த ‘Doctrine of Lapse’ என்னும் சட்டம் (நேரடி வாரிசு இல்லாதவர்களின் அரசுகள் ஆங்கிலேயரின் கீழ் வந்துவிடும்) என்ற சட்டம் அப்போது இருந்தது. லார்ட் டல்ஹௌசீ ஜான்சி அரசைப் பறிமுதல் செய்ய முடிவுசெய்தார். ராணி லட்சுமிபாய் ஒரு ஆங்கிலேய வழக்கறிஞரிடம் சென்று ஆலோசனைக் கோரினார். பின்னர் இவர் லண்டனில் இவரது வழக்கிற்கான ஒரு முறையீட்டை மனு தாக்கல் செய்தார். ஆனால், இவரது மனு நிராகரிக்கப்பட்டது. ஆங்கிலேய அதிகாரிகள், லட்சுமிபாய் அரசு நகைகளைப் பறிமுதல் செய்தனர். மேலும், பிரிட்டிஷார் 60 ஆயிரம் ரூபாயை ஓய்வூதியமாகக் கொடுத்து விட்டு, லஷ்மி பாயை அரண்மனையைவிட்டு வெளியேறச் சொன்னார்கள். அதோடு, ஜான்சியைக் கைப்பற்ற ஆங்கிலேயப் படை வந்தது. லட்சுமிபாய் ஜான்சி அரசைப் பாதுகாப்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்.ராணி லக்ஷ்மி பாய் ஜான்சியை விட்டு வெளியேறி சொல்லி பிறப்பித்த ஆணையால் ஜான்சி எழுச்சி இடமாக மாற்றியது. ஜான்சி ராணி தனது நிலையை வலுப்படுத்த தொடங்கினார். பிறரது ஆதரவை நாடினார்.இவர் ஆதரவாளர்களைக் கொண்டு ஒரு தொண்டர் படையை உருவாக்கினார். இவர் உருவாக்கிய இராணுவத்தில் ஆண்கள் மட்டும் முக்கிய பங்கு வகிக்கவில்லை அதில் பெண்களும் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது நடந்த கிளர்ச்சியில் ராணி லட்சுமிபாய் இவரது தளபதிகளுடன் இணைந்து போர் புரிந்தார். ஆங்கில அரசு ஜான்சியின் அரண்மனையை சூறையாடி பொருட்களை சூறையாடியது. ஜான்சி ராணியையும் அரண்மனையை விட்டு விரட்டினர். ஆங்கிலேயப் படை நுழைந்து வேறு வழியின்றி குதிரையில் தனது குழந்தையை ஏற்றிக்கொண்டு மதில் சுவர் தாண்டி பெரும் பெண்கள் படையுடன் நகரத்தை விட்டு வெளியேறினார். ஆங்கிலேயர் பிடியிலிருந்து தப்பித்த ராணி லக்ஷ்மி பாய் கல்பியில் தஞ்சம் அடைந்தார். அங்கு இவர் தந்தியா டோப்பை சந்தித்தார். ஆங்கிலேயர்களின் படை குவாலியரைக் கைப்பற்ற முகாமிட்டது. ஆங்கிலேயப் படையை எதிர்த்து கோட்டாகி சேராய் என்ற இடத்தில் ஜான்சிராணி போரிட்டார்.ஆங்கிலேயப் படைகளுக்கும் லஷ்மி பாய் படைகளுக்கும் இடையே போர் தீவிரமாக நடைபெற்றது.ஜான்சிராணியால் வெள்ளையர்களின் நவீன போர்க்கருவிகளை எதிர்க்க முடியவில்லை. 1858 ஜூன் 17 அன்று நடந்த போரில் ஏற்பட்ட படுகாயத்தால் களத்திலேயே வீரமரணம் அடைந்தார் லஷ்மி பாய். அப்போது இவரின் வயது 22. ஆங்கிலேயரை எதிர்த்து இவர் புரிந்த போர் போன்றவை இந்திய நாட்டில் இன்றும் நாட்டுப்புறப் பாடல்களாகவும், நாடகங்களாகவும் பலரால் போற்றப்படுகின்றன. அமரத்துவம் பெற்ற ஒரு வீராங்கனையாக இன்றும் இவர் பெயர் அழியாப் புகழ் பெற்றுள்ளது. தொகுப்பு முருகுவள்ளி

கருத்துகள்