செய்தி

*மாணவர்களின் தனித்திறனை கண்டறிவது ஆசிரியர்கள் பொறுப்பு* *முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு பேச்சு* சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் அகத்தர மதிப்பீட்டு மையத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கான மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.சிறப்பு விருந்தினராகத் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு கலந்து கொண்டு *'ஆசிரியருக்கு அன்புடன்'* என்னும் தலைப்பில் உரையாற்றினார். அவர் பேசியதாவது:- கிரேக்க மரபில் சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோர் ஆசிரியர் மரபாகக் கருதப்ப டுகின்றனர். ஆசிரியர்கள் வாசித்தல், எழுதுதல், . பேசுதல், கேட்டல், புரிந்து கொள்ளுதல், பங்கேற்றல் ஆகிய திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களே மாணவர்களைப் பாரதத்தின் தலைவர்களாக உயர்த்துகின்றனர். சமூகத்தை எதிர்கொள்ளு தல், வாழ்க்கைத் திறன்களை உணர்தல். தெளிதல், எதிர்காலத்தை நல்வழியில் செலுத்துதல் ஆகியவற்றை மாணவர்களுக்குக் கல்லூரி ஆசிரியர்களே போதிக்கின்றனர். மாணவர்களின் தனித்திறன் கண்டறிதல் ஆசிரியர்களின் பொறுப்பாகும். ஆசிரியர்கள் மாணவர்கள் முன்னேற படிக்கட்டுகளாக, நெறியாளராக மாறுகின்றனர். பள்ளி மாணவர்களை மையமாகக் கொண்டு வகுப்பறையில் பட்டிமன்றம், வினாடி வினா உள்ளிட்ட செயல்பாடுகள் நிகழ்த்தப்படும். ஆசிரியரை மையமாகக் கொ ண்டு வகுப்பறையில் பாடம் மட்டுமே முதன்மையாக அமையும். கல்லூரியை பொறுத்தவரை மாணவர்களை மையம் கொண்ட வகுப்பரையே சிறந்தது. அதுவே மாணவர்களைச் சிந்திக்கவும் செயல்படவும் தூண்ட வல்லது. இவ்வாறு பேசினார். இந்நிகழ்வின் முன்னதாக அகத்தர மதிப்பீட்டு மையத்தின் ஒருங்கினைபாளர் பிரியா வரவேற்றார். கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கி பேசினார். நிகழ்வின் நிறைவாக ஆங்கிலத்துறை தலைவர் பெமினா நன்றி நவின்றார்

கருத்துகள்